தற்கால நிகழ்ச்சிகள் தீர்க்கதரிசனத்தின் மூலமாய் தெளிவாக்கப்படுகின்றன San Bernardino, California, USA 65-1206 1இன்றைக்கு இரவு இங்கே இருப்பதும் இந்த நேர்த்தியான சபையோரை நோக்கிப் பார்ப்பதும் நிச்சயமாகவே ஒரு சிலாக்கியம் ஆகும். மேலும் நேர்த்தியான பாட்டு, அற்புதமான சிறு பாட்டுக் குழு. நான் வித்தியாசத்தை நினைத்துக் கொண்டிருந்தேன், அந்த பையன்கள் அங்கே நிற்பதை காண்கையில்... சுத்தமாகத் தோன்றும் நண்பர்கள், சுத்தமாக வெட்டப்பட்ட தலைமயிர். நான் எங்கே தங்கியிருக்கிறேனோ அந்த இடத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன், நேற்று இரவு, ஒரு கூட்டம் போக்கிரிகள் அங்கே உள்ளே வந்து, நீச்சல் குளத்திலே ஒரு பையனை முழ்கடித்துக் கொல்ல முயற்சித்தார்கள்; அவர்கள் அங்கே எதையோ வரவழைத்து அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டிதாயிற்று. என்ன ஒரு வித்தியாசம். பிள்ளைகள் நின்று, சுவிசேஷ பாடல்களை பாடுவது; என்ன ஒரு வித்தியாசம். 2சிந்திக்கிறேன், சகோதரன் ஹென்றி அங்கே சொன்னது போல, “ஸ்திரிகளுக்கு இருக்க வேண்டியதைப் போன்ற தலைமயிரையுடைய அந்த ஆண்கள்”, பாருங்கள், அது - அது - அது சரியாயிருக்கிறது. உருண்டு சுருள வைக்கும் சாதனங்களையும் கூட தங்களுடைய முகத்தைச் சுற்றிலும் பொருத்திக் கொள்ளும் அந்த மாதிரி தலை மயிரையுடைவர்களாக அந்த பையன்களை பார்க்கிறேன். எனக்கு தெரியாது, நான்... சில சமயங்களில் நான் மனச் சோர்வு அடைகிறேன். இது இப்படிதான் காணப்படுகிறது. இது உண்மையிலேயே ஒரு நெறிகோணலின் காலம் ஆகும். ஆண்கள் ஸ்திரீகளின் ஆடைகளை உடுத்த முயற்சி செய்கிறார்கள், ஸ்திரீகளும் ஆண்களின் ஆடைகளை உடுத்துகிறார்கள். மேலும் ஆண்கள் தங்கள் தலைமயிரை ஸ்திரீகளைப் போல வளரவிடுகிறார்கள், பிறகு ஸ்திரீகள் ஆண்களைப் போல தலைமயிரை வைத்துக் கொள்ளுகிறார்கள். எப்படியும், மக்களுக்கு என்ன நேர்ந்தது? ஒழுக்கத்தின் அடிப்படையானது, உண்மையாகவே, மேலும் கெளரவமும் இந்த மக்களையும், இந்த தேசத்தையும், இந்த உலகத்தையும் விட்டு போய்விட்டதா? இது ஒரு பயங்கரமான நேரமாயிருக்கிறது, ஆனால் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க இது உலகத்திலேயே மிகவும் மகிமைப் பொருந்திய நேரமாயிருக்கிறது. காலமானது உண்டாயிருப்பதற்கு முன்னே, நான் அதின் விளிம்பில், என்னால் நிற்க முடிந்திருந்தால், மேலும் பிதாவானவர் என்னை நோக்கிப் பார்த்திருப்பார், மேலும் “இந்தக் காலங்களினூடே எந்த காலத்தலே நீ பிரசங்கிக்க விரும்புவாய்?” என்று சொல்லியிருப்பார். நான் சரியாக இப்பொழுதை தான் விரும்பியிருப்பேன். அவருடைய வருகைக்கு சிறிது முன்பாக உள்ள, சரியாக இப்பொழுதுதான் . 3செவி கொடுக்க வந்திருக்கிறவர்களை, இங்கே நமக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறவர்களை நோக்கி பார்ப்பது... என்னுடைய ஒரு ஊழியக்கார நண்பர் நேற்று டூசானில், குதிரையின் மேல் சவாரி செய்துக் கொண்டிருந்தார் (தன் முதுகிலே ஒரு பில்லையோடு உயிர் வாழும் இந்த ஸ்திரியைப் பற்றி சிந்தியுங்கள்) இந்த குதிரை அவரை தூக்கி எறிந்தது. இன்றைக்கு காலையில் ஒரு மணியளவில் வேறொரு மனிதன் என்னை நான் தங்கியிருந்த ஓட்டலில் தொலைபேசியிலே கூப்பிட்டு, 'அந்த மனிதன் ஓய்வுப் பெற்ற வீரர்களின் ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவருடைய கண்கள் கண்ணாடிக் கண்களைப் போல ஒளியிழந்து காணப்படுகிறது, அவருடைய முதுகு நொறுங்கி போயிற்று, அவருடைய சீறு நீரகங்கள் வெளியே தள்ளப்பட்டன, அவருடைய இருதயமும் நின்று விடப் போகிறது“ என்று சொன்னார். அங்கேதானே கீழே தரையில் என் முழங்கால்களில் நின்றேன்', தொலைபேசியிலே, அடுத்த முனையில் அவரிடம் தொடர்பு கொண்டு, அவருக்காக ஜெபித்தேன். இதோ, இன்றைக்கு இரவு அவர் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். சரியாக அங்கே உட்கார்ந்திருக்கிறார். அது நேற்று இரவு நடந்தது. ”பாப் (Bob) அப்படியே அங்கே எழுந்த நிற்பீரா?“ தேவன் ஜெபத்திற்கு பதிலளிக்கிறார், காலையிலும், இராத்திரியிலும், பகல் வேளையிலும், நடுராத்திரியிலும் அல்லது எந்த நேரத்திலும்.. 4இப்போது, நான்- நான், அவர்கள் இதை விவரிப்பது போல, ஒரு நீண்ட மூச்சு உள்ள பிரசங்கியாயிருக்கிறேன். இரவின் இந்த நேரத்தில் புறப்படுவதை நான் ஒருவிதமாக வெறுக்கிறேன்ஆகவே நான் அப்படியே இங்கே வரவேண்டும் என்று நினைத்தேன். அன்றைக்கு இராத்திரியிலே, இங்கே ஒரு இடத்திலே நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு, நான் தொடங்கி பதினைந்து நிமிஷங்களுக்குப் பின், மக்கள் பாத்திரப் பண்டங்களை எடுக்க ஆரம்பித்து, எனக்கும் சைகை காண்பித்து, “நிறுத்திவிடு, வாயை மூடு, நீ இங்கேயிருந்து வெளியே சென்றாக வேண்டும்” என்றார்கள். சிகரட்டுகளை புகைத்துக் கொண்டும், நடந்துக் கொண்டும்! அது அந்த விருந்தளிப்பின் தவறல்ல, அதை யாரிடமிருந்து வாடகைக்கு எடுத்தார்களோ, அவர்களுடைய தவறு. மேலும் - தலைமை தாங்கினவருடைய மனைவி, கடந்து போய் மேனேஜரிடம் சொன்னாள். “நல்லது. நீங்கள் 9.30க்கு இங்கேயிருந்து வெளியேறியிருக்க வேண்டுமே?” என்றார். “நீர் அதை ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை” என்றாள். இந்த அம்மையார், இன்றைக்கு இரவு அவள் வந்திருக்கிறாள் (மெய்யாகவே அருமையான அம்மையார்) மேலும் அவள் “உமக்கு இது வேண்டும் என்று நாங்கள் அறிய வருகிறோம்” - உங்களுக்கு எவ்வளவு காலம் வேண்டுமோ, அப்படியே இதை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்“ என்றாள். அதினாலே, ஆகவே, அதற்காக நான் மிகவும் நன்றியுடையவனாயிருக்கிறேன். அது மிகவும் அருமையாயிருக்கிறது. 5சகோதரன் ஹென்றி, என்னையும், இந்த குழுவையும் அழைத்ததற்கான தங்களுடைய - தங்களுடைய அன்பு கூருதலை நான் நிச்சயமாக பாராட்டுகிறேன். இங்கே, அஸெம்ப்ளீஸ் ஆப் காட் சபையில், அதற்கு சகோதரர் பூன் (Boone) மேய்ப்பராயிருக்கிறார் என்று நினைக்கிறேன். அங்கே இருக்கும்படியான சிலாக்கியத்தை நேற்று இரவு நான் பெற்றுக் கொண்டேன். அங்கே, அந்த கூட்டம் மக்களுடன் ஒரு அற்புதமான நேரத்தை அனுபவித்தேன். மேலும் நாளைக்கு இரவு நாங்கள் உங்களோடு எங்கேயோ போவோம், அது எங்கேயிருக்கிறது என்று நான் அறியேன், அது இன்னும் ஒரு குழுவாக இருக்கும். அதை அவர்கள் கனித்துக் கொள்கிறார்கள். நான் அப்படியே ஜெபித்துக் கொண்டும், வாசித்துக் கொண்டும், சேர்ந்து, போய்க் கொண்டும் இருக்கிறேன், என்னால் செய்ய முடிந்ததெல்லாம் இதனுடன் ஈடு கொடுக்க சரியாகவிருக்கிறது. 6ஆனால், இப்போது, இந்த நாளிலே நாம் புதுமையான காரியங்களை பார்க்கிறோம். இப்போது, போன தடவை நான் இங்கே இருந்தது ஒரு கூடார ஜெபக் கூட்டத்தில் என்று எனக்கு ஞாபகம் வந்தது. அதிலே தங்களுடைய செத்துப் போன குழந்தையை சிறு தம்பதியர்கள் கொண்டு வந்ததைப்பற்றி நான் நேற்று இரவு பேசியது எனக்கு ஞாபகமிருக்கிறது. இது - இது இங்கே மேலே எங்கேயோ இருக்கிறது. அவர்கள் முழு பகலும், இரவும் வண்டியோட்டிக் கொண்டு வந்தார்கள். அந்த சிறிய தாயானவள் சோகமாக உட்கார்ந்து அந்த செத்துப் போன குழந்தையை தன் கரங்களில் வைத்திருந்தாள். எனக்கு தெரிந்த வரையில், அவள் இங்கே இப்போது உட்கார்ந்திருக்கலாம். மேலும் அவளும்... அந்த சிறிய கணவனும். அவர்களுடன் இன்னும் இரண்டு தம்பதிகள் இருந்தார்கள். மேலும் அவர்கள். பிறகு அவள் சொன்னாள். என்னால் மோட்டார் வண்டியிருந்த அந்த இடத்திற்கு வர முடியுமாவென்று கேட்டாள். (அந்த மனிதன் கேட்டான்) நான் அந்த சிறு குழந்தையை வெளியே எடுத்து சிறிது நேரம் அப்படியே பிடித்துக் கொண்டிருந்தேன், மரித்துப் போன விரைத்துப் போன, சில்லிட்டுப் போன நிலைமை; பிறகு நான் ஜெபிக்க ஆரம்பித்தேன். நான் ஜெபித்தப் போது, அந்த சரீரம் உஷ்ணமடைவது போன்ற உணர்வு ஆரம்பித்தது. ஆகவே நான் அப்படியே... நான் தொடர்ந்து ஜெபித்தேன், அவன் கால்களை உதைத்து நகர ஆரம்பித்தான், அருமையாக தொடர்ந்து, அழ ஆரம்பித்தான். நான் இதை தாயானவளிடம் திருப்பித் தந்தேன். அதனுடன் அவள் தன்னுடைய வீட்டிற்கு திரும்பிப் போனாள். ஆகவே, நான் அறிந்த வரையில் அவர்கள் கிறிஸ்தவர்களாகக்கூட இல்லாமலிருந்திருக்கலாம். பார்த்தீர்களா? அது அற்புதமாயிருந்தது. 7ஆனால், இன்றைக்கு இரவு நான் என்னத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேனென்றால், நான் ஒரு சபையை அறிவேன். அதுவும்கூட மரித்துக் கொண்டிருக்கிறது, இது நம்முடைய பெந்தெகொஸ்தே மக்கள் ஆகும். நாம் இதை விட்டு உலுக்கி வெளியேற வேண்டும், அதுதான் எல்லாமே. மேலும் நீ அதை செய்யப் போகிற ஒரே வழியானது, ஜெபமும் தேவனுடைய வார்த்தையுடனே ஒரே சீராக இணைவதுமே! நாம் இதைச் செய்யப் போகிற ஒரே வழியானது இதுதான். வெளியேற அங்கே ஒரே ஒரு வழிதான் உண்டு. அவரே அந்த வழி, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் அங்கே சொன்னதைப் போல, இங்கிலாந்தைப் போல, நம்முடைய சபையானது அந்த நிலைமைக்குப் போவதை நாம் விரும்புவோமா? நீ நினைப்பது போல, நான் உன்னை அவ்வளவு முரட்டுத்தனமாக திட்டி கண்டிப்பது, அந்தகாரணத்தினால்தான். மேலும் அதைச் செய்ய வேண்டுமென்று எனக்கு எண்ணமில்லை, ஆனால் சபையானது அந்த விதமான நிலைமைக்குப் போவதைக் காண நான் விரும்பவில்லை. நீ அந்த நிலைமையிலிருக்க விரும்பவில்லை. ஆனால் நீ அதை ஆணியடித்து அதை கெட்டியாக பொருத்தும் வரையில் அதை நீ அவ்வளவு கடுமையாக அடித்து இறக்கிதான் ஆக வேண்டும். இது செய்யப்பட்டுதான் ஆக வேண்டும். ஆகவே, இப்போது, இன்றைக்கிரவு, நான் சில... வேத வசனங்களையும் பாடங்களையும் இங்கே வைத்திருக்கிறேன், அதின் மீது சிறிது நேரம் பேச நான் விரும்புகிறேன். நான் எந்த குறிப்பான நேரத்தையும் கூறுப் போவதில்லை. நீங்கள் சோர்வடைந்துப் போகிறீர்கள்... நான் முப்பது நிமிடங்களில் முடித்து விடலாம். நான் எப்போதுமே இதை ஒருவிதமாக, பரிசுத்த ஆவியினிடத்தில் விட்டு விடுவேன், அப்படியே அவர் கூட்டத்தை எந்த விதத்தில் நடத்தினாலும் சரி. 8'ஒரு வினாடி கூடுதலாக, நாம் அப்படியே நம்முடைய தலைகளை வணங்குவோம், அவருடைய புத்தகத்தை திறப்பதற்கு முன் அதை எழுதியவரிடத்தில் பேசுவோம். சர்வ வல்லமையுள்ள தேவனே, இந்த புத்தகத்தின் ஆசிரியரே, இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றைக்கு இரவு நாங்கள் ஏற்கனவே கேட்டவைகளுக்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நாங்கள் - நாங்கள் “”ஆமென்“ என்று சொல்வதின் மூலமாய் இந்த கூட்டத்திற்கு காலக் குறியிட்டு விட்டு வீட்டுக்குப் போனாலும், இங்கே இருப்பது நல்லதாவே இருக்கிறது. ஏனென்றால் . நீர் எங்களோடு இருந்தீர் என்று நாங்கள் அறிவோம். மேலும், பிதாவே, நாங்கள் இந்த வார்த்தையை இப்போது திறக்கும் போது, இந்த வார்த்தையிலிருந்து எங்களுடன் நேரிடையாக பேசுவீராக, அப்போது நாங்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கும்படியான மணி நேரத்தை நாங்கள் அறிந்து கொள்வோம். நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் மணி நேரத்தை நாங்கள் அறிந்தால், அப்போது அந்த மணி நேரத்திற்காக நாங்கள் ஆயத்தப்பட முடியும்; ஆனால் நாங்கள் ”என்ன“ என்றும் ”எங்கே' என்றும் அறியாமல் குருட்டுத்தனமாக போவோமானால், அப்போது, எவ்விதமாக ஆயத்தப்படுவது என்று நாங்கள் அறிய மாட்டோம். ஆகவே, பிதாவே, பேழையையும் அதின் கதவு திறந்திருப்பதையும். மேலும், செய்தி யானது எங்களை உள்ளே அழைப்பதையும் அங்கே நாங்கள் காணும்படியாக நீர் செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாய் அனுக்கிரகம் செய்வீராக, ஆமென். 9பரிசுத்த வேதத்திலே, நான் ஒரு பாடத்தை வாசிக்க இங்கே விரும்புகிறேன்; அங்கே பரி. லூக்காவின் புத்தகம் 24ம் அதிகாரத்தில் காணப்படும்படியான... நான் 13ம் வசனத்தில் துவங்கப் போகிறேன், அதின் ஒரு பாகத்தை வாசிக்கப் போகிறேன். அன்றைய தினமே அவர்களில் இரண்டு பேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மாவூர் என்னும் கிராமத்துக்குப் போனார்கள். போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவற்றையுங் குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக் கொண்டார்கள். இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனே கூட நடந்து போனார். ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்க முகமுள்ளவர்களாய் வழிநடந்து. ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். அவர் எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே: அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப் போய், அவருடைய சரீரத்தைக் காணாமல் திரும்ப வந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவ தூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களை பிரமிக்கப் பண்ணினார்கள். அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னப்படியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிர வேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேத வாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். லூக் 24: 13-27 கர்த்தர் தாமே அவருடைய வார்த்தைகள் வாசிக்கப்படுதலுடன் தம்முடைய ஆசிர்வாதங்களை சேர்ப்பாராக. 10இப்போது நான்... நான் இதை ஒரு பாடம் என்று அழைத்தால், நான் இதை எடுத்துக் கொள்ள விரும்புவேன்: நிகழ்ச்சிகள்... “தற்கால நிகழ்ச்சிகள் தீர்க்கதரிசனத்தின் மூலமாய் தெளிவாக்கப்படுகின்றன'. இப்பொழுது. இது, சில நிகழ்ச்சிகள் சம்பவிப்பதற்கு முன்பு தம்முடைய மக்கள் முன்னறிய அனுமதிப்பது, எப்பொழுதும் தேவனுடைய, மாறாத தேவனுடைய வழி ஆகும். கர்த்தராகிய இயேசுவின் நாட்களிலிருந்த மக்கள் மாத்திரம் அதோ அப்பொழுதுதானே நிகழப் போவதை, தேவனைத் தேடி அறிந்துக்கொண்டிருந்தால், அவர்கள் அவரை மரண தண்டனைக்குட்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால் இது இவ்விதமாக இருந்ததின் காரணமென்னவென்றால், ஆகையால், வேத வசனங்கள் 'நிறைவேற்றப்பட்டாக வேண்டும், ஏனென்றால் யூதர்கள் குருடாக்கப் பட்டாக வேண்டும். நாம் யாவரும் அதை அறிந்திருக்கிறோம். அது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்படியான இந்த இதே காலத்திலே மறுபடியும் வாக்களிப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துணருகிறீர்களா? லவோதிக்கேயா சபைக் காலம், நாம் உள்ளிருக் கும்படியான இந்த ஏழாவது சபைகாலமானது, நிர்வாணமாகவும் நிர்பாக்கியமாகவும், குருடாகவும் இருக்கிறது, ஆனால் இதை அறியாமலிருக்கிறது. அங்கே கடந்த காலத்திலே தம்முடைய செய்தியை தம்முடைய தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களிடம் போய் சேர செய்யும் நோக்கத்திற்காக அவர் அவர்களை குருடாக்கியதைப் போலவே, இந்த நாளிலும்கூட அதே காரியத்தைச் செய்வதாக அவர் வாக்களித்திருக்கிறார். 11கிறிஸ்துவுக்குள்ளாயிருக்கிற என்னுடைய எல்லா சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் மரியாதையுடன் நான் இதைச் சொல்வேனானால், இந்த நாட்களில் ஒன்றில், “இந்த காரியங்கள் முதலில் சம்பவிக்க வேண்டும் என்பதாக எழுதப்பட்டிருக்கவில்லையா?” என்று யாராவது ஒரு நபர் சொல்லுவார். மேலும், இது, “நான் உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன், அவர் ஏற்கனவே வந்தாயிற்று. மேலும் அவர்கள் தாங்கள் நினைத்ததையெல்லாம் அவருக்கு செய்தார்கள்' என்பதாக அப்போது இருந்ததைப் போலவே இருக்கும். அவர்கள் அவரைக் கேட்ட போது, சொன்னார்கள், “ஏன்? எலியா முதலாவதாக வர வேண்டும் என்று வேத வசனங்கள் சொல்கின்றனவே, வேத பாரகர்கள் சொல்லுகிறார்களே?” அவர்கள் அதை இயேசுவானவரிடம் சொன்னார்கள். “அவன் ஏற்கனவே வந்தாயிற்று, நீங்களோ அவரை அறியவில்லை' என்று அவர் சொன்னார். பார்த்தீர்களா? மேலும், ஒருவேளை அந்தவிதமாகவே இது மறுபடியும் முடிவடையலாம். 12இப்போதும், நாம், விவரம் அறிவிக்கப்படவும், நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும்படியான இந்த காலத்திற்காக என்ன நடைபெறப்போகிறது என்று அறியவும் விரும்புகிறோம். தேவனானவர் ஒவ்வொரு காலத்திற்கும் தம்முடைய வார்த்தையை பங்கிட்டிருக்கிறார். மேலும் ஒரு காலமானது தொடர்ந்து போய் வேறொரு காலத்திற்குள்ளாக சேர முடியாது' என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது சாத்தியமே ஆகாது. உதாரணமாக, நேற்று இரவு நான் சொன்னதைப் போல... அல்லது நான் எப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கிறேன். இரவுக்குப் பிறகு இரவாக, இடங்களிலே, மேலும் சில சமயங்களில் நான் இரண்டாவது தடவையாக ஒன்றைக் குறிப்பிடுகிறேன். நான் சொன்னதையே திரும்பவும் சொல்வது என் திட்டமல்ல. ஆனால் நான் இதை சொல்கிறேன்: நோவாவின் செய்தியை பிரசங்கிக்க முயல்வதினால் மோசேக்கு என்ன நன்மை உண்டாயிருக்கும்? அல்லது மோசேயினுடைய செய்தியை பிரசங்சிக்க முயற்சிப்பதால் இயேசுவானவருக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கும்? அல்லது கத்தோலிக்க செய்தியினை தொடர்ந்து கொண்டு செல்வதால் மார்டின் லூத்தருக்கு என்ன நன்மை கிடைத்திருக்கும்? லுத்தரின் செய்தியை கொண்டு தொடர்ந்து போவதால் வெஸ்லிக்கு என்ன பலன் கிடைத்திருக்கக் கூடும்? மெதோடிஸ்டு செய்தியை தொடர்ந்து கை கொள்வதினால் பெந்தெகொஸ்தேயினருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நன்மை என்ன? மணவாட்டியானவள் அழைக்கப்படுகையில், பெந்தெகொஸ்தே தொடர்ந்து நீடிப்பதினால் நன்மை என்ன? பார்த்தீர்களா? நாம் சரியாக வித்தின் காலத்திற்குள் வரையிலும் வந்திருக்கிறோம், நாம் இங்கே முடிவு காலத்தில் இருக்கிறோம். இப்போது ஒரு கோதுமை மணி பூமியிலே விழாவிட்டால், அது தனித்திருக்கிறது. 13அந்த குற்றங் காண்பவரைப் போல, அந்த புத்தகம் வெளி வந்ததிலிருந்து நான் சொல்லியிருக்கிறேன், ஒருவேளை நீங்கள் அதை உங்களுடைய - உங்களுடைய பட்டணத்தில் இங்கே உடையவர்களாயிருப்பீர்கள், அந்த ஜெர்மானிய ஆசிரியன் ஒரு மிகுந்த குற்றங் கூறுகிற கட்டுரையை எழுதினான். அவன் ஒரு கடவுள் நம்பிக்கையில்லாதவன். நிச்சயமாக இல்லை...... அவன் என்னை குற்றப் படுத்தியதினாலே நான் அவனை குற்றப்படுத்தவில்லை, ஆனால், தெய்வ நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதினாலே, அந்த புத்தகமானது ஷெல்ஃபுகளில் ஒருபோதும் இருப்பது கூடாது. மேலும் அவன், அவரால் செங்கடலைத் திறந்து தம்முடைய மக்களை விடுவிக்க முடியும் என்று எழுந்து சொல்லக் கூடிய தேவனானவர், அப்படியிருக்க தம்முடைய கரங்களை தம்முடைய வயிற்றின் மீது வைத்துக் கொண்டு இருண்ட காலங்கள் முடிய, அந்த கிறிஸ்தவர்கள் சிங்கங்களால் துண்டுகளாக கிழிக்கப்படுவதையும்; அந்த தாய்மார்கள் தங்களுடைய தலைமயிரானது கரி எண்ணெயால் ஊறி, பிறகு அவர்கள் சிலுவைகளில் தொங்கவிடப்பட்டு எரிக்கப்படுவதையும், மேலும் அவர்களுடைய குழந்தை... கர்ப்பமுற்றிருந்த தாய்மார்கள், அவர்கள், குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று பந்தயமிட்டு வயிற்றை பிளப்பார்கள் அதையும் பார்த்துக் கொண்டிருந்தார்; இந்த தேவனுடைய ஊழியக்காரிகளாக இருப்பதாக கருதப்பட்ட மக்கள், மேலும், அவர் உட்கார்ந்து கொண்டு இதை சம்பவிக்க அனுமதித்தார்“ என்று சொல்லியிருந்தான். 14பாருங்கள், வேத வசனமானது ஆவியின் ஏவப்படுதலாயிருக்கிறது. உட்கார்ந்து கொண்டு, இதை ஒரு சமய சித்தாந்தக் கண்ணோட்டத்திலிருந்தும், ஒரு கல்வியறிவின் கண்ணோட்டத்திலிருந்தும் படிப்பதின் மூலமாய், வேத வசனத்தை அறிந்துக் கொள்ள உன்னால் ஒரு போதும் முடியாது. இது சாத்தியப்பட்டதே கிடையாது. சமீப காலத்தில், நான் ஒரு பாப்டிஸ்டு ஊழியக்காரருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர், “நாம் சரியான கிரேக்க மொழியைக் கற்றுக் கொள்ளும் வரையில்...” என்று சொன்னார். நான் சொன்னேன், “நிசயா ஆலோசனைக் கூட்டத்திலே, அதற்கு முன்பு, அவர்கள் வேதாகமத்திலிருக்கும் கிரேக்க வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் செய்துக் கொண்டிருந்தார்கள்! நீ இதை ஒரு போதும் அறிந்து கொள்ள மாட்டாய். வேதாகமானது, ஆவியின் ஏவுதலினாலே வெளிப்படுத்தப்படுவதாகவுள்ளது. ஒரே காரியம் அதுதான் வெளிப்பாடு! இயேசுவானவர் பேதுருவிடம் “இந்தக் கல்லின் மேலே” என்று சொன்னார். இந்த வெளிப்பாட்டின் கல்லானது, அவர் யார் என்று வெளிப்படுத்துகிறது. “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்” பேதுருவின் மேல் அல்ல, தம்மீதும் அல்ல, ஆனால் அவர் யார் என்பதாக ஆவிக்குரிய வெளிப்படுத்தலின் மேலே!' அவர் வார்த்தையாயிருக்கிறார். பரி.யோவான் 1, “ஆதியிலே வார்த்தையிருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.” எபிரேயர் 13:8 “அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” 15'ஆனபடியினால், தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடானது, பெந்தெகொஸ்தே காலத்தைக் காட்டிலும் ஒரு வித்தியாசமான காலத்திற்கு வந்திருக்கும்படியான நாளிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது சரியாக உள்ளது. ஞாபகமிருக்கட்டும்... நான் ஒரு கல்வியறிவடையாத நபராக உள்ளேன், ஆனால் இயற்கையை ஜெயிக்க உன்னால் முடியாது, ஏனென்றால், இயற்கையின் தொடர்ச்சியிலே தேவன் கிரியை செய்கிறார். அப்படியே நான் சொன்னதைப் போலவே, சூரியன் உதிக்கிறது, அஸ்தமிக்கிறது, பகலுக்குள்ளே கடந்து செல்லுகிறது. ஒரு பள்ளிக் கூடக் காலத்தைப் போல்; சாயங்காலத்திலே மரிக்கிறது, மறுபடியும் அடுத்தக் காலையிலே எழும்புவதற்காக. மரங்கள் உறைபனிக் காலத்தில் சாற்றை கீழிறங்க விட்டு அது வேர்களுக்குள் போய் விடுகிறது. பிறகு வசந்த காலத்தில் திரும்பி வருகின்றது. கவனி, அவர் இதை, மணவாட்டியை, ஒரு கோதுமை மணிக்கு ஒப்பிட்டார். தேவனானவர் அதை அவ்விதமாகப் போக அனுமதித்ததின் காரணம் அதுதான். பெந்தேகொஸ்தே நாளிலே நிறுவப்பட்ட அந்த நேர்த்தியான, மெய்யான, கலப்படமில்லாத சபையானது, பெந்தேகொஸ்தே நாளிலிருந்து தொடர்ந்து வளர்ந்தது, ஒரு மேன்மையான சபையாக உருவாயிற்று, எல்லா வித்துகளுக்கும் நேர்வதைப் போல, அது இருண்ட காலத்திலே நிலத்தினுள் விழுந்து புதைப்பட்டுப்போக வேண்டியதாயிற்று. அது சீர்திருத்தக் காலத்தில் மறுபடியும் முன்னேறி வருவது சாத்தியமாகும்படிக்கு அது மரித்தாக வேண்டியதாயிற்று. இது மார்டின்லூத்தர் என்ற சீர்திருத்தவாதியானவருக்குள்ளே மறுபடியும் முன்னேறி வந்தது. அங்கேயிருந்து, கோதுமைப் பயிரின் தண்டைப் போலவே வளர்ந்து, அடுத்த முதல் காரியமாக அங்கே இரண்டு சிறிய இலைகள் வந்தது, பிறகு அது கூடுதலான இலைகளைச் சேர்த்தது. மார்டின் லூத்தரும் ஸ்விங்லியும் மேலே வந்தார்கள், அப்படியே தொடர்ந்து, கால்வினும், அவ்விதமாக அவர்கள் முன்னே நகர்ந்தார்கள். 16முடிவிலே, இது ஒரு பூங்கொத்துக்குள்ளே போகிறது. இப்போது, வெஸ்லியின் காலத்தில் அது ஜான் வெஸ்லியாயிருந்தது. இது பின்னால் விழுந்த ஒரு மகரந்தப் பொடியையுடையதாயிருந்தது. அங்கேயிருந்து பெந்தெகொஸ்தே காலம் வந்தது, அவ்வளவு நெருக்கமாக, நீ அந்த பதரைப் பார்ப்பாயானால் ஒரு கோதுமை மணியைப் போலவே காணப்பட்டது. ஆனால் நீ அந்த கோதுமையை எடுத்து பின்னால் நகர்த்துவாயானால், அதிலே ஒரு தானிய மணியும் இல்லவே இல்லை, இது தானிய மணியின் உருவத்தில் உள்ள ஒரு பதர் ஆகும். ஆனால் இது அங்கே ஒரு நோக்கத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது, தானிய மணியை பாதுகாக்க... அந்த நிலையிலே சூரிய வெளிச்சம் அதை தாக்கினால், அதைக் கொன்று விடும். ஒரு குறிப்பிட்ட நேரம் வரையில் இது அங்கே இருந்து தான் ஆக வேண்டும், பிறகு எல்லா ஜீவனும் பதரை விட்டுப் போய் விடுகிறது. இது தண்டை விட்டுப் போனதைப் போல, மகரந்தப் பொடியை விட்டுப் போய் விட்டதைப் போல, பதரை விட்டு கோதுமைக்குள்ளாகப் போய், இது கீழே நிலத்தில் இருந்ததைப் போலவே மறுபடியும் உருவாகிறது. 17இப்பொழுது, எப்பொழுதாகிலும் ஒரு செய்தி கொடுக்கப்பட்டால், மூன்று ஆண்டுகளில் அவர்கள் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்குகிறார்கள் என்பதை நான் அனைவரும் அறிவோம். அவர்கள் அதை செய்யும் சமயத்தில், இது அதை அங்கேயே கொன்று விடுகிறது. இது லூத்தரின் நாட்களில் செய்தது. அவ்விதமாக இது வெஸ்லியின் நாட்களில் செய்தது. இது அதை அலெக்ஸாண்டர் காம்ப்பெல் அவர்களின் நாட்களிலும் மேலும் மீதியுள்ள அவர்கள் எல்லாரும், மேலும் இது இதை பெந்தெகொஸ்தே நாட்களிலும் செய்தது. மிகச் சரியாக! புரிகிறதா? நீஒரு ஸ்தானத்திற்கு வருகிறாய், ஒவ்வொருவரும் தற்பெருமைக் கொள்ளுகிறார்கள். பிறகு விலகிப் போகிறார்கள், மேலும் புதிய வெளிப்பாட்டை ஏற்றுக் கொள்ள அவர்களால் முடியவில்லை. அவர்கள் நிலைப்பட்டு விட்டார்கள்; மேலும் அங்கேயே அவர்கள் இருக்கிறார்கள். மேலும் அங்கேயே அவர்கள் மரிக்கிறார்கள். ஜீவனானது அதற்குள்ளே நுழைந்துப் போகிறது; கோதுமையை உருவாக்கும்படிக்கு அது சீராக தொடர்ந்துப் போகிறது. கோதுமையானது வரும்போது, அந்த கோதுமை பயிருக்குள்ளாக பிரயாணம் செய்த அந்த ஜீவன், அந்த உயிர்த்தெழுதலானது, எல்லாக் காரியத்தையும் வெளியே கொண்டு வருகிறது; ஆமாம், எடுத்துக்கொள்ளப்படுதலுக்காக மேலே கொண்டு வருகிறது. 18இப்போது, ஞாபகமிருக்கட்டும், இந்த செய்தியானது தெய்வீக சுகமாக்கப்படுதலிலும், அற்புதங்கள் நடப்பதிலும் ஆரம்பமாயிற்று. இப்போது, நமக்கு ஏற்கனவே இருந்ததைப் போலவே, தேவனானவர், அதை, ஒரு சாதாரண சபைக்குள் புகுந்துப் போக விட்டிருப்பாரானால், அப்போது இது தேவனாக இருக்கவில்லை! பகட்டுக் காட்ட வேண்டிய அவசியம் தேவனுக்கு கிடையாது, அமெரிக்கர்களாகிய நாம் வேடிக்கை விளையாட்டில் பழக்கப்பட்டிருப் பதைப் போல, ஆனால் அவர் மக்களுடைய கவனத்தை ஈர்க்க, அதாவது அவர் ஏதோ ஒன்றைச் செய்வதற்கு ஆயத்தமாகிறார் என்று காண்பிக்க, இதனைச் செய்கிறார். அவர், அவரையே, அவர் வரும்போது “அற்புதமான சிறிய தீர்க்கதரிசி, போதகர், கலிலேயாவின் தீர்க்கதரிசி. ஏன்? அவருடைய ஊழியம் அற்புதமாக இருந்தது. அவருக்கு ஒவ்வொரு சபையிலும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஒரு நாள் அவர் கீழே உட்கார்ந்தார். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்றார். “ஓ, அவ்வளவுதான்! அது ஏற்க முடியாதது. அவ்விதமான மனிதனை தூர விரட்டு!' “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாவிட்டால் உங்களுக்கு ஜீவன் இல்லை ”. “ஏன், அவர் ஒரு இரத்தம் குடிக்கும் பூதம், அப்படிப்பட்ட நபரை விட்டு தூர விலகு!” புரிகிறதா? பாருங்கள், அந்த அடையாளத்தை ஏதோ ஒன்று பின் தொடர்ந்து தான் ஆக வேண்டும். புரிகிறதா? ஏதோ ஒன்று பின்தொடர்ந்தது. பதர் இதை பிடித்து இருந்தது. ஆனால் இப்போது பதரானது விலகிப் போகிறது; இது விலகிப் போகத்தான் வேண்டும். ஞாபகமிருக்கட்டும், இருபது வருடங்கள் கடந்து போயிருந்தும், வேறு ஸ்தாபனங்கள் அதிலிருந்து வரவில்லை, வரவும் வராது. நாம் ஸ்தாபனங்களின் முடிவில் இருக்கிறோம். கோதுமையும் உருவம் அடைந்து விட்டது. ஆனால், கோதுமைக்கு இப்பொழுது என்ன? இது, முற்றிப் பழுக்க சூரியனின் பிரசன்னத்தில் கிடக்க வேண்டும், அதற்குப் பிறகுதான் அது எடுத்துக்கொள்ளப்படும். 19இப்போது நடைபெறும்படியான நிகழ்ச்சிகளை நாம் பார்க்கிறோம், இது முழுமையாக, வேதாகமத்தில், ஒவ்வொரு சபைக் காலத்திற்கும் காண்பிக்கப்படுகிறது, நாம் எல்லாரும் சீரமைப்பை விட்டு விலகிவிட்டோம் என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நாம் விலகி விடவில்லை, எல்லாமே, மிகப் பொருத்தமாக தேவனுடைய வார்த்தையுடன் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இப்போது, வேதாகமானது, வேறு எந்த புனிதமான புத்தகத்தைக் காட்டிலும் ஒரு வித்தியாசமான புத்தகமாக இருக்கிறது. வேதாகமத்தைப் போல எந்த புத்தகமும் இல்லை. ஏனென்றால், வேதாகமானது, வார்த்தையின் வடிவிலிருக்கிற தேவனாயிருக்கிறது. புரிகிறதா? ஒரு வார்த்தையானது, ஒரு வெளிப்பட்ட சிந்தனையாய் இருக்கிறது. தேவனுடைய சிந்தையானது இதை, அவருடைய வார்த்தைகளை, தீர்க்கதரிசிகள் மூலமாய் வெளியிட்டது. மேலும், வார்த்தையின் வடிவத்திலுள்ள வேதாகமத்தை அவர்கள் எழுதினார்கள். இயேசுவானவர் இதை “வித்து” என்று அழைத்தார். எந்த வித்தும், அது சரியான சூழ்நிலையில் இருக்குமானால், தன்னுடைய இயற்கை சூழ்நிலையில், வகையை பிறப்பிக்கும். இப்பொழுது, இந்த புத்தகம். இது ஒரு... இந்த தீர்க்கதரிசன புத்தகமானது, இது - இது வருங்காலத்தின் நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கிறது. இப்பொழுது. இந்த புத்தகமானது இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாடு முழுவதையும் தன்னில் உடையதாயிருக்கிறது. நீ அதனுடன் சேர்க்கவோ, அதிலிருந்து எடுக்கவோ செய்வதில்லை, மேலும் ஒவ்வொரு வெளிப்பாடும் அதின் மூலமாய் வந்தாக வேண்டும். புரிகிறதா? இது வார்த்தையாக இருந்தாக வேண்டும். 20எனவே, ஜனங்கள் சொல்கிறார்கள் “நான் ஒரு வெளிப்பாட்டைப் பெற்றேன். ஆமாம், ஜோசப் ஸ்மித்தும் அநேகரும் வெளிப்பாடுகளையும் காரியங்களையும் பெற்றார்கள், ஆனால் வார்த்தைக்கு அவை எதிர்மாறாக இருந்தன. இது தேவனிடத்திலிருந்து வருகிறதானால், இது வார்த்தையின் பிரகாரமாக வந்தாக வேண்டும். ஏனென்றால் இது தேவனுடைய பிரசன்னத்தை உறுதிப்படுத்த அல்லது நிரூபிக்க வேண்டியதாகும். அவர் இந்த காரியங்களையெல்லாம் முன்னறிந்தார். அப்படியிருக்க, அவர் தம்முடைய முன்னறிவினால் நியமித்தார், முன் நியமித்தார். வேதாகமத்திலே இது “முன்குறித்தல்” என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு காலமும் தன்னுடைய ஸ்தானத்தில் இருக்கும்படியாக, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஸ்தானத்தில் இருக்கும்படியாக, ஒவ்வொரு செய்தியாளனும் தன்னுடைய ஸ்தானத்தில் இருக்கும்படியாக அவர் தேவனாயிருக்கிறார். பிசாசு அவருக்கு மேலே எதையும் இழுத்து போட்டுக் கொண்டிருக்கவில்லை. மேலும் அவர் தேவனாயிருக்கிறார். மேலும், எல்லா காரியமும் நடைபெறும்படியாக அவர் குறித்திருக்கிறார், அவருடைய வார்த்தையுடன் அவைகள் மிகச் சீராக அமைகின்றன. ஆகவே, அவருடைய வார்த்தையின் மூலமாய், நாம் எந்த காலத்தில், எந்த நேரத்தில், வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பார்க்க நம்மால் கூடுமானால், நீ இதனை, இந்தக் காலத்தைப் பற்றி, சரியாக இங்கேதானே வேதாகமத்திலே நீ பார்ப்பாய், இந்த சமயத்தில் என்ன நடைபெற வேண்டியதாயுள்ளது என்பதை. 21இப்போது, அந்த மற்ற புத்தகங்கள், நாம் பார்க்கிறோம். மேலும் நான், “அவர்கள், புனிதமான புத்தகங்கள் என்று அழைக்கும் புத்தகங்கள்” என்று சொன்னேன். நான் “குரான்” மற்றும் அநேக புத்தகங்கள் படித்திருக்கிறேன். ஆனால், நீங்கள் பாருங்கள், அவர்களுடைய புனிதமான புத்தகங்கள் வெறும் நன்னெறியையும், நல் நடத்தையையும், தெய்வ பக்தி கொள்கையையும் பற்றிய ஒழுங்கு முறையாய் இருக்கிறது. ஆனால் இந்த புத்தகம் ஒரு தீர்க்கதரிசனமாய் இருக்கிறது, இது வேறு எந்த புத்தகத்தைக் காட்டிலும் வித்தியாசமாயிருக்கிறது. வேதாகமானது, வருங்காலத்தை முன்னறிவிக்கிற தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. இது முன்னறிவிக்கிறது, ஏனென்றால், இது முன்னெச்சரிக்கப்பட்டது. தேவனானவர் எதையாகிலும் அனுப்பினால், அவர் சொல்லுகிறார். மேலும் வேதாகமத்திலே வாக்குத்தத்தம் செய்திருக்கிறார், அதாவது, தம்முடைய ஊழியக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு முதலாவதாக அதை வெளிப்படுத்தாமல், அவர் இந்த பூமியின் மேலே எதையும் செய்யமாட்டார். அது ஆமோஸ் 3:7. அவர். மேலும் தேவனால் பொய் சொல்ல முடியாது. அவர் இதை வெளிப்படுத்துகிறார், தொடர்ந்து, காலங்கள் வாரியாய் அதுவே அவருடைய செயல்முறையாக இருந்து. வந்தது. இதைச் செய்ய அவர் ஒருபோதும் தவறியதில்லை. 22இது கடைசி நாட்களில் திரும்ப அளிக்கப்படும் என்பதான வாக்குத்தத்தத்தை நாம் பெற்றிருக்கிறோம். அங்கே, எந்த சபையும்; மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேக்கள் போன்ற எந்த ஸ்தாபனமும் இருக்காது. தாங்கள் இருக்கும்படியான இந்த தற்கால நிலைமையில் அவர்கள் ஒரு போதும் இந்த சபையை ஒரு மணவாட்டியின் ஸ்தானத்திற்கு எடுத்துச் செல்ல மாட்டார்கள். அவர்களால் அதை செய்ய முடியாது, அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். அவர்கள் மிகவும் மிகுதியாக ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள், உலகத்தின் தன்மை ஊர்ந்து உள்ளே வந்து விட்டது. மேலும் அவ்விதமாக - பிறகு அவர்கள் சரியாக தங்களுடைய பாதையிலேயே மரித்துப் போனார்கள். தேவன் அதை அறிவார். இந்த வார்த்தையை வெளிப்படுத்துவதற்காக, ஒரு நபர், “நல்லது, நான் இதைப் பெற்றுக் கொண்டேன், தேவனை ஸ்தோத்தரி, இது அவ்விதமாக இருக்கிறது” என்று சொல்லுவார். இயேசுவானவர் முதல் தடவையாக வந்தபோது, அது அப்படியே அந்த விதமாகத்தான் இருந்தது; ஒவ்வொருவரும் ஒரு போதனையை உடையவர்களாயிருக்கிறார்கள், எல்லாருக்கும் இது இருந்தது. இது தேவனிடத்திலிருந்து நமக்கு அனுப்பப்பட்ட ஏதோ ஒரு காரியமாக இருக்க வேண்டும். மேலும் தேவனானவர் அதை வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். மேலும் அவர் செயல்படும் ஒரே வழியானது தம்முடைய சீர் அமைப்பை விட்டு விடாமலிருப்பதுதான். கடைசி நாட்களிலே, மக்களுடைய இருதயங்களை பின்னிட்டு திருப்பும் படியான மல்கியா 4ன் பிரகாரமாயுள்ள, ஒரு தீர்க்கதரிசியை பூமியின் மேலே, நமக்காக அனுப்புவதாக அவர் வாக்குத்தத்தம் செய்தார். “பிள்ளைகளின் இருதயங்களை மறுடியுமாய் திருப்பி, அப்போஸ்தல பிதாக்கள் பக்கமாக”. அவர் அதை தம்முடைய வார்த்தையிலே வாக்களித்தார். லூக்கா 17லும், வேறு அநேக இடங்களிலும் அவர் வாக்களித்ததான இதை, அதாவது அவர்... இந்த காரியத்தை ஒரு உறுதிப்பட்ட வார்த்தையின் ஸ்தானத்திற்கு கொண்டுவர, இந்த கடைசி நாட்களில் அவர் என்ன செய்வார் என்பதாக. 23பாருங்கள், ஒரு மனிதன் எதையும் சொல்ல முடியும். ஆனால் அந்த வார்த்தையை தேவனானவர் வியாக்கியானம் பண்ணாதப் பட்சத்தில்... பாருங்கள், இப்போது, நாம் நம்முடைய சொந்த வியாக்கியானத்தை உடையவர்களாயிருக்கிறோம். நாம் இது “இதை” அர்த்தப்படுத்துகிறது என்று சொல்கிறோம். பெந்தெகொஸ்தேகாரர்கள் அதைச் சொன்னார்கள், ஒருத்துவக்காரர்கள் இதைச் சொல்லுகிறார்கள். மேலும், ஓ! என்ன சொல்வேன், அதோ உன் விளக்கம். ஆனால் தேவனுக்கு எந்த வியாக்கியானியும் தேவைப் படுவதில்லை. அவரே தம்முடைய சொந்த வார்த்தையை, அதை நோக்கம் கொள்ளப்பட்டதான அந்த காலத்திலே, அது கொடுக்கப்பட்டதான அந்த காலத்திலே, அதை உறுதிப்படுத்துவதின் மூலமாய், வியாக்கியானம் பண்ணுகிறார். நாம் பெந்தெகொஸ்தே காலத்தில் வாழவில்லை, நாம் வேறொரு காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். புரிகிறதா, நாம் மெதோடிஸ்டு காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கவில்லை, நாம் வேறொரு காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். நாம் இங்கே மேலே, மணவாட்டியின் காலத்தை அடையும்படியான, சபையானது வெளியே அழைக்கப்பட்டு, அதை எடுத்துக்கொள்ளப் படுதலுக்காக ஒன்று சேர்க்கப்படும்படியான காலத்தில் வாழ்கிறோம். நாம் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கும்படியான காலம் இதுதான். என்னுடைய பொய்யில்லாத அபிப்பிராயத்தின்படி அது மிகச் சரியாக சத்தியமாகவுள்ளது. 24மேலும் இந்த புத்தகமானது தீர்க்கதரிசனத்தின் புத்தகமாக இருக்கிறது. இதனுடைய விசுவாசிகள், இதைக் கனப்படுத்தும்படியாகவும், இதை வாசிக்கும்படியாகவும், இதை எழுதியவரை விசுவாசிக்கும்படியாகவும், கட்டளை பெற்றிருக் கிறார்கள், ஏனென்றால் அதின் உள்ளே எழுதப்பட்டிருக்கும்படியான சகலமும் கட்டாயமாக நிறைவேறியாக, நிறைவேறிதான் ஆக வேண்டும், ஏனென்றால், இது ஒவ்வொரு காலத்திலும் இயேசு கிறிஸ்துவாக இருக்கிறது. நேற்று மாறாமலிருந்தவர், இது, இயேசு கிறிஸ்துவாக இருந்தார், நோவாவில் இருந்தார், இது, இயேசு கிறிஸ்து மோசேக்குள்ளாக இருந்தார், இது இயேசு கிறிஸ்து தாவீதுக்குள்ளாக இருந்தார், இது இயேசு கிறிஸ்து யோசேப்புக்குள்ளாக இருந்தார். இது இயேசு கிறிஸ்து. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்! மேலும், இது இயேசு கிறிஸ்து தம்முடைய மக்கள் மத்தியில் இருந்துக் கொண்டு, இந்த காலத்தில் அவர் செய்வதாக வாக்களித்த காரியங்களை செய்வது ஆகும். இது, இயேசு கிறிஸ்துவாக உள்ளது. ஆனால், இங்கே அந்த சகோதரர் சொன்ன விதமாக, சபையானது அவ்வளவாய் தற்பெருமை கொண்டு விட்டது, அவ்வளவாய் தூரமாய் போய்விட்டது. மேலும் நம்மை திரும்பவும் வார்த்தையின் பக்கமாக உலுக்கிப் போடும் ஏதோ ஒன்று நமக்கு இருந்தாகவேண்டும், அதுவரையில், நம்முடைய சபைகளும் அதே விதமாகிக் கொண்டிருக்கின்றன. இது இதைச் செய்யப் போகிறது என்று நாம் எப்படி அறிவோம்? இது தேவனுடைய சொந்த திட்டத்தின் பிரகாரம் வந்தாக வேண்டும். இது சாதாரண மனுஷன் மூலமாக வரமுடியாது, இது வியாபார மனுஷர்கள் மூலமாக வராது, இது சபைகள் மூலமாக வரமுடியாது. தேவனானவர் தம்முடைய திட்டத்தை அமுலாக்கி விட்டார். 25“தேவனுக்கு ஒரு ஊழியத்தை செய்வது அவருடைய சித்தமாக இல்லாமலிருக்க இதை செய்ய முயற்சிப்பது” என்பதை நான் இங்கே ஷ்ரீவ்போர்ட்டில் தேசத்தை வியாபிக்கும் ஒரு தேசிய நிகழ்ச்சியில் அன்றைக்கு பேசினேன், தாவீது தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை மறுபடியும் வீட்டிற்குள்ளே கொண்டு வர முயற்சித்தான். அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவாக இருந்தான். ஏன், அவன் தன்னுடைய பிரதிநிதிகளான பத்தாயிரத்துக்கு அதிபதிகளையும், ஆயிரத்துக்கு அதிபதிகளையும், மேலும் அவ்விதமாக, கலந்தாலோசித்தான். மேலும் அவர்கள் எல்லாருமே, “அதுதான் தேவனுடைய வார்த்தை ” என்றார்கள். பிறகு அவன் ஆசாரியனை கலந்தாலோசித்தான் “அது அற்புதமாயிருந்தது”. மேலும் அவர்கள் எல்லாம் அவ்வளவாய் ஏவப்பட்டதால், அவர்கள் கூச்சலிட்டார்கள், இருக்கும்படியான எல்லா மதவைராக்கியமான செயல்களையும் அவர்கள் செய்தார்கள். மேலும் அவர்கள் முழுக்க முழுக்க தேவனுடைய சித்தத்திற்கு எதிர்மாறாக இருந்தார்கள். ஏனென்றால் அங்கே நாத்தான் என்ற பெயருடைய ஒரு தீர்க்கதரிசி தேசத்திலே இருந்தான், அவன் இதைப் பற்றி கலந்தோலோ சிக்கப்படவே இல்லை, புரிகிறதா? ஆகவே, தேவனுக்கு ஒரு ஊழியத்தைச் செய்ய முயற்சிப்பதில் அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தபோதிலும் பலனளிக்கவில்லை என்று நாம் அறிந்துக் கொண்டோம். 26மேலும் நீ எப்பொழுதும் அவ்வளவாய் உண்மையுடன் இருக்கலாம்; ஆனால், நாம் என்ன செய்கிறோம் என்று நாம் அறியும் வரையில், நீ காற்றை நோக்கி யுத்தம் செய்து கொண்டிருக்கிறாய். தேவனுடைய வார்த்தைக்குள்ளாக திரும்பி வந்து சீர்பொருந்து, அகன்பிறகு. போ; அப்போது நீ அறிவாய். ஒரு சிப்பாயைப் போல, இதை செய்யும்படியான கட்டளைகளை பெற்றுக் கொள்ளும் வரையில் என்ன செய்வதென்று அவன் அறியாமலிருக்கிறான். நாம் கிறிஸ்தவ வீரர்களாக இருந்து, இப்பொழுது இந்த மணிநேரத்திற்கான கட்டளைகளை வேதாகமத்திலிருந்து பெற வேண்டும்; நேற்றைய தினத்தின் பொறுப்பல்ல, அதற்கு முந்தின தினத்திற்கான பொறுப்பல்ல, ஆனால் எந்த வழியில் நாம் போகிறோம் என்பதால். இன்றைக்குரிய பொறுப்பு. நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும்படியான மணி நேரத்தை அறிந்துக் கொள். மேலும் இந்த தற்கால நிகழ்ச்சிகள் மிக மிக வேகமாக நம்மை கடந்து நழுவிக்கொண்டிருக்கின்றன. ஆகவே, எதுவும் இல்லாதவர்களாக, நாம் பின்னாக விடப்பட்டு போனோம் என்று ஒரு நாள் கண்டறியப் போகிறோம், மேலும் இதை நாம் அறிவதற்கு முன்பு, பிடிக்கப்பட்டு, மிருகத்தின் முத்திரைக்குள்ளாக முத்திரையிடப்படுவோம். 27இப்பொழுது பொறுமையுடனும், இதற்காக நாம் காத்திருந்தாக வேண்டும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசனங்களான அவைகள், அவைகளில் ஒவ்வொன்றும் இதனுடைய காலத்திலே, கட்டாயம் நிறைவேற வேண்டும். ஏனென்றால், இதை எழுதியவர் இதை இதற்கு முன்பு செய்திருக்கிறார், இது நமக்கு முன்னறிவிக்கிறது. நாமும், அதை அவர் மறுபடியும் செய்வதைக் காண காத்திருக்கிறோம். நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும்படியான நேரமானது எப்படிப்பட்ட ஒன்று ஆகும்! ஒரு, ஒரு காலண்டரைப் போன்றது, வருஷத்தின் எந்த நாளிலே நீ வாழ்ந்துக் கொண்டிருக்கிறாய். மேலும், நாம் எந்த காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று காண நீ தேவனுடைய வேதாகமத்தை நோக்கிப் பார்க்கிறாய். நாம் மெதோடிஸ்டு காலத்திலோ, பாப்டிஸ்டு காலத்திலோ வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. நாம் மணவாட்டியின் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம், அவர் திரும்பவும் கொண்டு வருவேன் என்று வாக்களித்த அந்த ஏதுவான வழியிலே, அழைப்பானது. தேவனிடமாய் திரும்பவும் கொண்டு வருகிறது. இதை செய்வதாக அவர் வாக்களித்தார். ஆனால், ஒவ்வொரு காலத்திலும் இது இருந்திருக்கிறப் பிரகாரமே, மனுஷன், தன்னுடைய சமய சித்தாந்தத்தின் மூலமாய் தன்னுடைய சொந்த வியாக்கியானத்தை இதில் வைக்க மக்கள் அனுமதித்து, அதற்குரிய தெய்வீக உறுதிப்படுத்தலை (அதாவது தேவனுடைய வியாக்கியானத்தை) விசுவாசிக்க மாட்டேன் என்கிறார்கள்; நான் சொல்வது அல்ல, வேறு ஒருவர் சொல்வது அல்ல, ஆனால் தேவனானவர் வாக்குத்தத்தம் பண்ணியது எதுவோ, மேலும் தேவன் செய்வது எதுவோ, அது, தேவனானவர் தம்முடைய வார்த்தைக்கு வியாக்கியம் பண்ணுதலை தேவனே செய்கிறார் என்று நிரூபிக்கிறது. 28பெந்தேகொஸ்தேகாரர்களாகிய உங்களுக்கு, அவர்கள் நாற்பத்தைந்து ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள். உங்களுடைய தாய்மார்களும் தகப்பன்மார்களும், அவர்கள் போலியில்லாத பெந்தேகொஸ்தேகாரர்களாக இருந்த போது, ஒரு ஸ்தாபனத்தை விட்டு வெளியே வந்து, அதை சபித்து, அதை விட்டு வெளியே நடந்தார்கள். அடுத்தாற்போல், ஒரு நாய் தான் கக்கினதற்குத் திரும்புவதைப் போல் சரியாக மறுபடியும் திரும்பி அதற்குள்ளே சென்றார்கள். அந்த சபையைக்கொன்ற அதே காரியத்தை செய் தார்கள், நீயும் உன் சொந்த சபையை அதே கரியத்தால்தான் கொன்று போட்டாய். அங்கே, உள்ளே இருக்கும்படியான அந்த மக்களுக்கு எதிராக ஒன்றும் இல்லை, இதற்கு எதிர்ப்பாக ஒன்றும் கிடையாது, இது அதனுடைய செயல்முறையாகும். இதைச் செய்வது அதுதான். நான்... இதை மற்ற மனுஷருடைய கூட்டத்தில் பேசுவதில்லை, நான் “சர்ப்பத்தின் அடிச்சுவட்டுப் பாதை” என்பதை பிரசங்கிக்கப் போகிறேன். நீங்கள் ஒலிநாடாக்களை எடுப்பீர்களானால் இதைக் கேளுங்கள். 29மேலும் இந்த காட்சியிலே தேவனுடைய வார்த்தையின் தீர்க்கதரிசனங்களின் உறுதிப்படுதலானது. நிறைவேற்றப்படுதலை கவனியுங்கள். இந்த ஆசாரியர்கள்... மேசியாவானவர் எவ்விதமாக வரப்போகிறார் என்பதை அவர்கள் அப்படியே மிகப் பொருத்தமாக நிர்ணயம் செய்து வைத்திருந்தார்கள், என்ன சம்பவிக்கப் போகிறது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். பரிசேயர்கள் தங்களுடைய ஆலோசனையை வைத்திருந்தார்கள், சதுசேயர்களும், ஏரோதியர்களும், மேலும், ஓ, அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளை வைத்திருந்தார்கள். ஆனால் அவர் வந்ததோ... அவர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் நேர் எதிராகவும், ஆனால் வார்த்தையின் பிரகாரமும் மிகச் சரியாகவும் வந்தார். அதே காரியம் இங்கே இருந்ததாக இயேசுவானவர் சொன்னார், “நீங்கள் என்னை அறிந்தீர்களானால், என் நாளையும் அறிந்திருந்திருக்க வேண்டும். நீ அறிந்திருந்தால்,. 'நல்லது, மோசே! எங்களுக்கு மோசே இருக்கிறார்' என்று நீ சொல்வாய் . ஏன், நீ மோசேயை விசுவாசிப்பாயானால், நீ என்னையும் விசுவாசிப்பாய்; ஏனென்றால், அவன் என்னைப் பற்றி எழுதினான்” என்று அவர் கூறுவார். ஆயினும், பாருங்கள். தேவனானவர் தாம் வாக்களித்ததை மிகச் சரியாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கையிலே, அவர்களோ ஏதோ ஒரு வகை கௌரவமான விதத்திலே இயேசுவானவர் வரவேண்டியதாய் இருப்பதாக நினைத்தார்கள். மேலும் நான்... நான் மேசியாவை சொல்லுகிறேன். மேசியாவானவர் சரியாக அவர்களுடைய குழுவினிடம் வந்தாக வேண்டும். இல்லா விட்டால் அவர் மேசியா அல்ல! நல்லது, இன்றைக்கும், கொஞ்சங் குறைய அது அந்த விதமாக இருக்கிறது, “நீ என்னுடைய கண்ணாடியின் வழியாக பார்க்காவிட்டால் நீ பார்த்துக் கொண்டே இல்லை புரிகிறதா? ஆகவே, இது. அப்படியே அந்த விதமாகத்தான் இருக்கிறது. நாம்... அதுதான் சத்தியம். அதை நினைப்பதற்கு நாம் விரும்பவில்லை, ஆனால் இது முழுக்க முழுக்க உண்மை ஆகும். 30எபிரேயர் 1:1ல், பூர்வ காலங்களில், தேவனானவர், வேதாகமத்தை தாம் சொந்தமாய் தெரிந்து கொண்ட விதத்திலே எழுதினார். அவர் இதை மதவாதிகளைக் கொண்டு ஒரு போதும் எழுத வில்லை, அவர் ஒரு போதும் மதவாதிகளைக் கொண்டு வியாக்கியானம் செய்வது இல்லை; மதவாதிகள் தேவனுடைய வார்த்தைக்கான வியாக்கியானத்தை உடையவர்களாய் இருந்தார்கள் என்பதாக காலம் ஒரு போது அங்கே இருந்ததில்லை. வியாக்கியானங்கள் ஒரு தீர்க்கதரிசிக்கு மாத்திரம் வருகிறது. தேவனானவர் அந்த தீர்க்கதரிசியை நமக்காக அனுப்புவதுதான் நாம் இந்த குழப்பத்திலிருந்து வெளியே வருவதற்கு ஒரே வழி ஆகும், அப்படியே மிகச்சரியாக, இது செய்யப்படப் போகிற ஒரே வழி இதுவே. இது விசுவாசிக்கப்பட்டது, எதிர்ப்பார்க்கப்பட்டது, பிறகு - நிறைவேறுதல். பார்த்தீர்களா? இது மனிதனால் எழுதப்படவில்லை, ஆனால் இது தேவனால் எழுதப்பட்டது. இது ஒரு மனிதனின் புத்தகமல்ல, இது தேவனுடைய புத்தகமாயிருக்கிறது, அதாவது, இது தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டதும், தீர்க்கதரிசிகளால் வியாக்கியானம் செய்யப்பட்டதுமாயிருக்கிற ஒரு தீர்க்கதரிசிகளின் புத்தகமாயிருக்கிறது. “கர்த்தருடைய வார்ததையானது தீர்க்கதரிசிகளிடத்திற்கு வருகிறது” என்று வேதாகமம் கூறுகிறது. மிகச் சரியாக 31இயேசுவானவர் பூமியின் மீது வந்திருந்த போது, மேலும் யோவான் அந்த நாளுக்குரிய தீர்க்கதரிசியாயிருந்து அவன் - அவன் தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டிருந்த போது அது எவ்வளவு அழகாக சித்தரிக்கப்பட்டது, அல்லது செயல்படுத்தப்பட்டது. “ஓ, தேவனானவர் எங்களுடைய பெரிய சங்கங்களையும் இங்கே காணப்படுகிற இந்த எல்லாவற்றையும் முறித்து கீழே தள்ளுவார் என்றா நீர் சொல்ல முனைகிறீர்? மேலும் நம்முடைய - நம்முடைய ஆலயங்களில் ஆராதனை செய்யப்படாமற் போகும் ஒரு காலம் வரப் போகிறதா?” என்று அவர்கள் சொன்னார்கள். “அங்கே ஒரு நேரம் வந்துக் கொண்டிருக்கிறது. அப்போது தேவனானவர், ஒரு மனுஷனாயிருக்கிற தேவ ஆட்டுக் குட்டியை ஒரு பலியாக்குவார்” என்று அவன் சொன்னான். மேலும், அவர் வந்திடும் போது அவரை அவன் அறிந்து கொள்வான் என்றும் சொன்னான். அவன் சொன்னான். அவன் தன்னுடைய செய்தியைப் பற்றி அவ்வளவாய் நிச்சயத்துடனிருந்தால், “இப்பொழுது அவர் சரியாக உங்கள் மத்தியில் நின்றுக் கொண்டிருக்கிறார், நீங்களோ இதை அறியாமலிருக்கிறீர்கள்' என்றான். அவர் உங்கள் மத்தியிலேயே இருக்கிறார், நீங்களோ அதை அறியாமலிருக்கிறீர்கள். பிறகு ஒரு நாள் இயேசுவானவர் வெளியே நடந்த போது, யோவான் நிமிர்ந்துப்பார்த்து, தனக்கு மேலே அந்த அடையாளத்தைக் கண்டான், அவன் “இதோ, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று சொன்னான். அந்த அதே நிமிஷத்திலே, தான் ஜனங்களுக்கு முன்பாக ஊர்ஜிதம் செய்யப்படுவதை இயேசுவானவர் அப்போது அறிந்தார். இப்போது, அவர் வார்த்தையாயிருந்தார். அதை நாம் சந்தேகிப்போமோ? அவர் வார்த்தையாயிருந்தார் என்று வேதாகமம் கூறிற்று “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார். மேலும் அவர் இங்கே இருக்கிறார். பூமியின் மேலே வார்த்தை இங்கே இருக்கிறது (கவனி! பூரணமாக!) இது வெளியே சரியாக அந்த ஜலத்திற்குள்ளே தீர்க்கதரிசியிடம் வந்தது. 32அது சரியாயிருக்கிறது. வார்த்தையானது எல்லா காலத்திலும் தம்முடைய தீர்க்கதரிசியிடம் வருகிறது. ஆகவே, இதை தெய்வ ஆராய்ச்சியாளர்களிடம் வருமென்று நான் எதிர்பார்க்க முடியாது. இது ஸ்தாபனங்களிடம் வருமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. இப்பொழுது அவர் நமக்கு இதைப் பற்றி முன்னறிவித்திருக்கிறபடியால், இது தேவனுடைய வழியில் வந்தாக வேண்டும், மேலும் அந்த ஒரே வழியாகத்தான் இது எல்லாக் காலங்களிலும் வரும். இது வெறுக்கப்படும், இகழப்படும், நிராகரிக்கப்படும். இது வரும் பொழுது இது ஒரு பக்கமாக வெளியே தூக்கி எறியப்படும், மேலும் எல்லாமே, ஆனால் தேவனானவர் எப்படியாகிலும் இதை செய்வார். இது இயேசு கிறிஸ்துவுக்குள்ளே நிராகரிக்கப்பட்டது, இது யோவானுக்குள்ளே நிராகரிக்கப்பட்டது, இது எரேமியாவுக்குள்ளே நிராகரிக்கப்பட்டது. இது எல்லாக் காலங்களிலும் அந்த விதமாகத்தானிருக்கிறது. ஆனால், தேவனானவர் தாம் செய்வதாக வாக்களித்த அந்த வழியிலே தொடர்ந்து முன்னேறுகிறார். ஆம், ஐயா! இதை ஒரே விதமாக செய்வதில் அவர் ஒரு போதும் தவறிப்போவது கிடையாது. 33தரிசனத்தைப் பார்த்த அல்லது அவருடைய சத்தத்தைக் கேட்ட மனிதர்கள் இதை முழுவதுமாக புரிந்துக் கொள்ளவில்லை. பல சந்தர்ப்பங்களிலே, அவன் அறியவில்லை, ஏனென்றால் அவன் வெறும் ஒரு தேவனுடைய கருவியாக மாத்திரம் இருந்தான். இது மனிதனின் உதடுகள் மூலமாக வெளியான் தேவனுடைய சிந்தனையாயிருந்தது. ஒரு வார்த்தையானது வெளிப்படுத்தப்பட்ட ஒரு சிந்தனையாயிருக்கிறது என்பது தெரிந்த காரியம் ஆகும். தேவனானவர் தம்முடைய முன் குறிப்பின் தெரிந்துக் கொள்ளுதல் மூலமாக தம்முடைய சொந்தமான தெரிந்துக் கொள்ளுதலை செய்கிறார். அவர் இதை ஒவ்வொரு காலத்திலும் செய்தார். ஒவ்வொரு காலத்திற்கும் உரிய மனிதனை அவர் நியமித்தார். அதாவது, மோசே, அவர் ஆபிரகாமுக்கு சொன்னதை அவன் நிறைவேற்ற வேண்டியதாயிருந்த போது. மோசே ஒரு சிறப்பான குழந்தையாகப் பிறந்தான், அந்த விதமாக இருந்ததை அவனால் தவிர்க்க முடியவில்லை. அவன் அந்த விதமாகப் பிறந்தான். ஏனென்றால், அவன் அந்த நோக்கத்திற்காகப் பிறந்தான். ஆகவே, தேவனானவர் அதை ஒவ்வொரு காலத்திலும் செய்கிறார் என்று நாம் கண்டறிந்தோம். தேவனானவர் தம்முடைய சொந்தமுன் குறிப்பின் தெரிந்துக் கொள்ளுதல் மூலமாக, தம்முடைய தெரிந்துக்கொள்ளுதலை தாமே செய்கிறார். தம்முடைய தீர்க்கதரிசிகளையும் காரியங்களையும் அந்தக் காலத்திற்காக தெரிந்துக் கொள்ளுகிறார். அவனுடைய சுபாவத்தையும் அந்த மனிதனுடைய பிரசங்கம் பண்ணும் பாணியையும், அவன் தன்னுடைய வரத்தை அங்கீகரிக்கும்படியாக அவர் அமைக்கிறார். மேலும் அவர் செய்யும் படியான யாவையும் அந்த நாளுக்குரிய சவாலை சந்திப்பது தான். தேவனானவர் அந்த மனிதனை சிருஷ்டித்து அவனை அனுப்புகிறார். மேலும் அவருடைய சொந்த மனதிலே, அதை குறித்து நான் கடந்த இரவிலே பிரசங்கித்ததைப் போல, நாம் தேவனுடைய வம்சத்தின் ஒரு கிருமியாயிருக்கிறோம். இந்த பூமியிலே எப்போதாவது ஒரு அணுவோ', அல்லது ஒரு வெளிச்சமோ, அல்லது வேறே எதுவுமே உண்டாயிருந்தததற்கு முன்னமே, அந்த மனிதன் அந்த காலத்திலே அங்கே இருப்பான் என்று அவர் அறிந்திருந்தார். 34ஆகவே, நீ உன்னுடைய தகப்பனுடைய ஒரு உயிர் அணுவாக இருக்கிறாய், மேலும் நீ உன் தகப்பனில் இருந்தாய், ஆயினும் உன் தகப்பன் உன்னுடன் ஐக்கியம் கொள்ளவில்லை, ஏனென்றால், அவர்... நீ அங்கே உள்ளே இருந்தாய், ஆனால் நீ இதை அறிந்திருக்கவில்லை, அவரும் இதை அறிந்திருக்கவில்லை, ஆனால், அவர் உன்னுடனே ஐக்கிய உறவுக் கொள்ளும்படிக்கு நீ வெளிப்பட்டாய். மேலும் மறுபடியும் பிறந்த நீர், நித்திய ஜீவனால் பிறந்தாய். மேலும் அது தான் அங்கிருக்கும்படியான ஒரே வகையான நித்திய ஜீவன் ஆகும், அதுதான் தேவனுடைய ஜீவன். ஒரே ஒரு வகை நித்திய ஜீவன் தான் உண்டு. அப்படியானால், நீதேவனுடைய குமாரனாகவோ அல்லது தேவனுடைய குமாரத்தியாகவோ இருந்தால், நீ எல்லா சமயமும் தேவனுக்குள் இருந்தாய். ஆனால், நீ எந்த படுக்கையில், எந்த நேரத்தில் விதைக்கப்படுவாய் என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே இப்பொழுது நீ ஒரு சிருஷ்டியாக உருவாக்கப்பட்டாய், தேவனுடைய ஒரு குமாரன், இந்த மணி நேரத்திற்கான சவாலை சந்தித்து, இந்த மணி நேரத்தின் உண்மையுள்ளவரும் ஜீவிக்கிறவருமான தேவனை, இந்த நேரத்தில் முன்னேறி வரும்படியான செய்தியை, உறுதிப் படுத்தும்படியான, தேவனுடைய வெளிப்படுத்தப்பட்ட குமாரன் அல்லது குமாரத்தி! அது சரி! உலகத்தின் அஸ்திபாரத்திற்குமுன்னே நீ செய்யப்பட்டாய்! இது இல்லாமலிருந்தால்... நீ அந்த விதமாக தெரிந்துக் கொள்ளப்பட்டிராவிட்டால், நீ அதை உடையவனைப் போல எவ்வளவு மிகுதியாக நடிக்க முயற்சித்தாலும் பொருட்டல்ல, நீ அதை அடையவே மாட்டாய்! அங்கே உள்ளே இரத்தமே இல்லாதபோது, ஒரு சிவப்பு முள்ளங்கியிலிருந்து உனக்கு எவ்விதம் இரத்தம் கிடைக்கக் கூடும். 35அந்த காரணத்தினால் தான் அதைப் பற்றிச் சொல்ல நான் முயற்சிக்கிறேன்... அதினால் ஜனங்கள், நாங்கள், குட்டையான தலை மயிரைப் பற்றி ஸ்திரீகளை நோக்கி கத்துகிறோம் என்பதை நினைக்கிறார்கள், மேலும் ஜனங்கள் அந்த காரியங்களை எனக்கு சொல்லுகிறார்கள், “நீ உன்னுடைய ஊழியத்தை நாசமாக்கப் போகிறாய்.” தேவன் தாமே நியமித்த ஒரு ஊழியத்தை நாசமாக்குவதா? இது தூரமாக இருக்கட்டும். ஜனங்கள் தேவனுடைய வார்த்தையை கேட்கும் போது... ஒரு குழந்தையானது ஒரு தாயாரின் கர்ப்பத்தில் கருத்தரிக்கப்படுகையில், அந்த ஒரு அணு உள்ளே போகும் போது, அதற்கு மேலே மற்றொரு அணு வளர்கிறது. இது ஒரு மனிதனுடைய அணுவும், அடுத்தது ஒரு நாயினுடையதும், அதற்கும் அடுத்தது ஒரு பூனையினுடையதுமாக இல்லை. இது முழுவதுமாக, ஒழுங்காக மனித இனமாக இருக்கிறது. ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினாலே பிறக்கும் போது, அவர் அவனுடைய ஜீவனுக்குள்ளே எதையும் உட்செலுத்துவது கிடையாது, இது அந்த மணி நேரத்திற்காக வெளிப்படுத்தப்பட்ட கலப்படமில்லாத தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. அவர் முழுமையான தேவனுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளுகிறார், அவர் கொள்கை களையோ வேறு எதையோ அதற்குள் வைப்பதில்லை. இது தூய்மையான கலப்படமில்லாத தேவனுடைய வார்த்தை நம் மத்தியில் வெளிப்பட்டதாக இருக்கிறது. 36நீ வேதாகமத்திற்குள் நோக்கினால், நாம் எந்த காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்று பார்ப்பாய், அப்போது தான், நீ இந்த மேன்மையான காரியங்கள் வெளிப்படுத்தப்படுவதை காண்பாய். தேவனானவர் இதை செய்வதாக வாக்குத்தத்தம் செய்த போது, அவர் எப்பொழுதுமே, ஒவ்வொரு காலத்தின் இறுதியிலே, சபையானது திசைதிரும்பும் ஸ்தானத்திற்கு வந்து, அது வார்த்தையை விட்டு பின்னாக பாவத்திற்கும் உலகத்தையடுத்தவைகளுக்கும் திரும்பும் போது, இதை செய்கிறார். உலகத்தையடுத்தவைகள் பாவம் ஆகும். “நீ இந்த உலகத்தையும் அதற்கடுத்தவைகளையும் நேசிப்பாயாகில் தேவனுடைய அன்பு உன்னில் இல்லை” என்று வேதாகமம் கூறுகிறது. கடந்த இரவு பேசும்போது, செலுத்தப்பட்ட பலியாகிய ஆட்டுக்குட்டியைப் பற்றி நான் பேசிக்கொண்டிருந்தேன். ஏழு சபை காலங்களை அடையாளப்படுத்தும்படியாக இது ஏழு நாட்களாக இருக்க வேண்டியதாயிற்று. அங்கே மக்கள் மத்தியில் புளித்தமா காணப்படக் கூடாது என்பதாயிருந்து, ஏழு நாட்களுக்கு புளித்தமா கிடையாது. அதாவது இதனுடன் எதுவும் கலக்கப் படவில்லை என்பது அதன் அர்த்தமாகிறது. இது, மாறுதலில்லாமல், புளிப்பற்றது. மேலும், நம்முடனே, புளித்த மாக்களும், காரியங்களும் கலந்திருப்பது நமக்கு வேண்டாம்! இது, புளிப்பில்லாத தேவனுடைய அப்பமாக தேவனுடைய வார்த்தையாக, கலப்படம் செய்யப்பட்டிராத தேவனுடைய வார்த்தையாக இருந்தாக வேண்டும். அதுவே, “மனிதன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, ஆனால் தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.' 37நம்முடைய ஸ்தாபன ஒழுங்குகள் மற்றும் பல்வேறு காரியங்களும், நமக்குள்ளே புளித்தமாவை வைத்து விட்டன. மேலும் இதையும், அதையும், உலகத்தையும், நவ நாகரீகத்தையும். மேலும், ஓ! இது இவ்வளவாய் ஆகி, இது, கொஞ்சங்குறைய எல்லா இடங்களிலும் “ஆலிவுட்' (Hollywood) ஆகிவிட்டது. இது முடிவுக்கு வரும் போது. இது இங்கிலாந்தைப் போலிருக்கும், மேலும், ஒரு பலிபீட அழைப்பு வெட்கமானதாயிருக்கும். ஆ! சகோதரர் சொன்னதைப் போல, ”படகுக்குள்ளே மீனை சேர்க்க உன்னால் எப்படி முடியும்?“ அது சரி! சுவிசேஷமானது, தன்னுடைய முழுமையிலே பிரசங்கிக்கப்படுவது நமக்கு இருந்தாக வேண்டும். அது தேவனுடைய வல்லமையுடனே அந்த காலத்திற்குரிய வாக்குத்தத்தத்தின் பிரகாரம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, அதுவே, மிகச் சரியாக தேவனுடைய சித்தமாய் இருக்கிறது என்று நிரூபிக்கப்பட வேண்டும். அதற்கு அப்பாற்பட்ட நிலையில் நீ ஒரு சபை அங்கத்தினனாக மாத்திரம் இருக்கிறாய், நீ எவ்வளவு மிகுதியாக முயற்சித்தாலும், தேவனுக்கு ஒரு சேவையை 'செய்ய முயற்சித்தாலும் பொருட்டல்ல. நீ தையல் களியாட்டத்திற்கு போகலாம், நீ மாறாமல் அவ்வளவாய் சபைக்கு விசுவாசமுள்ளவனாய் இருக்கலாம்; ஆனால், தேவனுக்கு ஒரு குமாரனாகவோ குமாரத்தியாகவோ இருக்கும்படியாக, நித்திய ஜீவனின் கிருமியானது உன்னிலே முன் நியமனம் செய்யப்படாவிட்டால், நீ உருக்குலைந்த ஏதோ ஒன்றாக உணருவாய், ஆனால் ஒரு போதும் ஒரு உண்மையான தேவனுடைய குமாரனாகவோ, குமாரத்தியாகவோ இருக்க மாட்டாய். 38அடிக்கடி ஒரு சிறு கழுகைப் பற்றிய என்னுடைய சிறிய கதையை சொல்லுவேன். ஒரு சமயம் ஒரு குடியானவன் ஒரு பெட்டைக் கோழியை உட்கார வைத்தான். பிறகு அவன்... நான் பேசுவது உங்களுக்கு தூஷணமாகப்படவில்லை என்று நம்புகிறேன். ஆனால் ஒரு குடியானவன் ஒரு பெட்டைக் கோழியை உட்காரவைத்தான். அதற்கு... அவயத்திற்கு உட்கார ஒரு முட்டை குறைவு பட்டது. இங்கேயுள்ள எவருக்காவது முட்டைகள் அவயம் வைப்பது என்னவென்று தெரியுமோ என்று நான் சந்தேகப்படுகிறேன், அதில் எவ்வளவு இருக்கும் என்று. ஆனால், எப்படியானாலும், போதுமானது இல்லாமலிருந்தது, அவனுக்கு ஒரு முட்டை குறைவுபட்டது. ஆகவே அவன் ஒரு கழுகின் கூட்டை கொள்ளையிட்டான், அதற்கு இரண்டு முட்டைகள் இருந்தது. அவன் முட்டையை பெட்டைக் கோழியின் அடியில் வைத்தான். எல்லா கோழிக் குஞ்சுகள் மத்தியில் கழுகு வெளிவந்த போது, அது ஒரு வேடிக்கையான பறவையாயிருந்தது. பெட்டைக் கோழியின் கொக்கரிப்பை புரிந்துக் கொள்ளவில்லை. இது அந்த பெட்டைக் கோழி எவ்விதமாக பேச கேட்க விரும்பியதோ அவ்விதமாக அது பேசவில்லை. மேலும் அது பண்ணைத் தோட்டத்தை பிரண்டி, பண்ணைத் தோட்டத்திலிருந்து தின்றது. இது இதற்கு ஆகாரமாக இருக்கவில்லை. அவைகள் மத்தியில் இது ஒரு அசிங்கமான வாத்துக் குஞ்சைப் போலிருந்தது. அந்த பெட்டைக் கோழி கொக்கரிக்கும், ஆனால் அதனால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. அந்த கோழி இந்த வழியில் போய் இதை “தின்னும் அதை தின்னும்”, இது அதற்குப் புரியவில்லை. ஆகவே, ஒரு நாள் இதனுடைய அம்மா... ஆகவே, எப்படியிருப்பினும், அதனுடைய தாயாருக்கு தனக்கு இரண்டு முட்டைகள் இருந்தது தெரியும், அவைகளில் ஒன்று மாத்திரம் அங்கே இருந்தது, அவள் அடுத்ததைத் தேடிப் போனாள். அவள் தேசத்தை கடந்தாள், முடிவிலே பண்ணைத் தோட்டத்தின் மேலாக பறந்தாள். அவள் அதை, அங்கே கீழே, அந்த கிழட்டு பெட்டைக் கோழியின் பின் செல்வதை கண்டாள், “சின்னவனே! நீ ஒரு கோழிக் குஞ்சு அல்ல, நீ ஒரு கழுகு!” என்று கூச்சலிட்டாள். அது அதற்கு அப்படியே சரியாக தொனித்தது. ஏன்? முதலாவதாக, அது ஒரு கழுகாக இருந்தது. 39ஒரு மனிதனோ அல்லது ஸ்திரீயோ கொள்கைகளுக்கும் திட்டமிட்ட மதத்திற்கும் அடியில் உட்கார்ந்திருந்தால், அவன் தேவனுடைய குமாரனாயிருக்கும்படியாக நியமிக்கப்பட்டிருந்தால், அவன் தேவனுடைய வார்த்தையானது தன்னுடைய வல்லமையிலே பிரசங்கிக்கப்படுவதை காணும்போது, மேலும் தேவனானவர் அதை உறுதிப்படுத்தினால்; துவக்கத்திலிருந்து அவன் ஒரு கழுகாக இருந்தால், இரண்டும் இரண்டும் நான்கு என்பது எத்தனை நிச்சயமோ, அத்தனை நிச்சயமாக அவன் அதனிடத்திற்கு ஓடுவான்! அவனால் இதை தவிர்க்க முடியாது, ஏனென்றால், அவனுடைய முழு சுபாவமே தேவனுடைய வார்த்தையை நேசிக்கின்றது. வேறு யாரும் என்ன சொல்லுகிறார்கள் என்று எனக்கு அக்கறையில்லை, தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படுவதை அவன்காணும் போது, அவன் அதனிடத்திற்கு பறந்துச் செல்லுவான், ஏனென்றால் அவன் ஒரு சிறிய கழுகாக இருந்தான். அவர்கள் தொடர்ந்து சொன்னதைப் போல, அது, “அம்மா, இங்கேயிருந்து நான் எவ்விதமாக மேலே ஏறப் போகிறேன்?” என்றது. கழுகு சொல்லிற்று “அப்படியே ஒரு முறை குதி, நான் உன்னை பிடித்துக் கொள்ளுகிறேன்.” நீ செய்ய வேண்டிய ஒரே காரியம் அதுதான், உன் பாதங்களில் நிற்க ஒரு முறை குதி, தேவனிடமாக ஒரு குதி, ஒரு வாக்குத்தத்தம் “கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மை என் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறேன். இந்த மணி நேரத்திற்கான செய்தியை விசுவாசிக்கிறேன். நான் அது உறுதிப்படுத்தப்படுவதைக் காண்கிறேன். மேலும் இது சரி என்று நான் அறிகிறேன்” உன் பாதங்களில் நிற்கும்படியாய் குதித்து எழு, அம்மா உன்னை பிடித்துக் கொள்வாள். கவலைப்படாதே, நீ ஒரு கழுகாக இருக்கிறாய், உன்னை சேர்த்துக் கொள்ள அவள் அங்கே சரியாக இருப்பாள். 40இப்பொழுது. நாம் ஒரு பிரமாண்டமான ஒரு காலத்திலும் மேன்மையான ஒரு காலத்திலும் ஜீவிக்கிறோம் என்று அறிந்திருக்கிறோம், ஆனால் இது வேதாகமத்தின் சத்தியங்களில் ஒன்று ஆகும். விசுவாசிகள் அது உறுதிப்படுவதை கண்டிருக்கிறார்கள். இதனுடைய இந்த உறுதிப்படுத்தல்தானே, தேவனானவர் இதினுள் இருக்கிறார் என்பதற்கு சாட்சியமாயிருக்கிறது. சந்தேகமில்லாமல்! அப்பொழுது தானே வாக்களிக்கப்பட்ட வார்த்தையானது... தேவனுடைய வாக்குத்தத்தமானது, தெரியப்படுத் தப்படுகிறது. வித்தானது வெடித்து வெளிப்பட்டது, அவர்கள் அதைக் காண்கிறார்கள், அவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள். மற்றவர் களால் அதை காண முடியவதில்லை, எப்படியோ, அவர்கள் அமர்ந்து அதை நோக்கிப் பார்க்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா, நான் போதிய கடுமையாக பிரசங்கித்தேன். இந்த தேசத்திலெல்லாம், அதாவது, குட்டையான தலைமயிரை உடைய ஒரு ஸ்திரீ இந்த தேசத்திலேயே இருக்கக் கூடாது என்பதற்காக. ஆனால், நான் திரும்பி வரும் ஒவ்வொரு சமயமும், அங்கே அவர்கள் அதிகரிக்கிறார்கள். சமாசாரம் என்ன? அங்கே ஏதோ தவறாகவுள்ளது. வார்த்தையானது அதை கூறுகிறது என்று நீ அறிவாய். நீ சொல்லலாம் “நல்லது, அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை” இது ஒரு வித்தியாசத்தை உண்டாக்க தான் செய்கிறது! 41அங்கே ஒரு நேர்த்தியான சகோதரன், “நான் உம் மீது கரங்களைப் போடப் போகிறேன், சகோ. பிரான்ஹாமே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் உம்முடைய ஊழியத்தை நாசமாக்குகிறீர். அந்த ஸ்தரீகளிடம் அதைப் பற்றி சொல்லுவது உம்முடைய வேலையல்ல. போதகர்கள் இதை செய்யட்டுமே?” என்று சொன்னார். “இருந்தாலும், அவர்கள் இதை செய்வதில்லை” என்று நான் சொன்னேன். அவர் சொன்னார், “நல்லது. இது உம்முடைய வேலையாயிருக்கவில்லை, நீர் வியாதியஸ்தர்களுக்காக மாத்திரம் ஜெபியும்” “அப்படியானால் இது யாருடைய வேலை? நான் சுவிசேஷத்தை பிரசங்கிக்க அழைக்கப்பட்டேன்” என்று சொன்னேன். “அப்படியானால், நான் உம் மீது கைகளை வைத்து, இதை எடுத்துப் போடும்படியாக தேவனிடத்தில் கேட்பேன்” என்றார், “நானும் கூட உம்மீது கரங்களை வைக்க நீர் என் அனுமதிப்பீரானால்” என்றேன். பார்த்தீர்களா? மேலும் நான் “தேவனானவர் உம்முடைய கண்களை திறக்கவும் நீர் இதை காணும்படியாகவும் நான் வேண்டிக் கொள்வேன்' என்று சொன்னேன். எனவே, அது சரியாயிருக்கிறது! “நீர் பிரசங்கம் பண்ண வேண்டும். நீர் தேவனுடைய ஒரு ஊழியனாக, தீர்க்கதரிசியாக இருப்பதை ஜனங்கள் விசுவாசிக்கிறார்கள். நீர் அந்த ஸ்திரீகளுக்கு, மேன்மையான வரங்களையும், தீர்க்கதரிசனத்தையும் காரியங்களையும் பெற்றுக் கொள்வது எப்படி என்று போதிக்க வேண்டும்” என்று சொன்னார். “அவர்கள் தங்களுடைய A, B, C, க்களை கூட விசுவாசிக்க மாட்டேன் என்கிற போது நான் அவர்களுக்கு ”அல்ஜீப்ரா“ கணக்கை எப்படி கற்றுக் கொடுக்க முடியும்?” என்று நான் சொன்னேன். அது சரி! ஆகவே நீ - நீ இதை செய்ய முடியாது. அது அப்படியே ஒவ்வொரு... அது சரி. உன்னால் பொதுவான காரியங்களை செய்ய முடியாத போது, நீ எப்படி ஆவிக்குரிய காரியங்களை செய்யப் போகிறாய்? இயற்கையான காரியங்கள். நிச்சயமாக! சகோதரனே, சகோதரியே, இது கேட்பதற்கு ஒரு சிரிப்புக்கு உரியதைப் போல இருக்கலாம், ஆனால் இது சுவிசேஷமாயிருக்கிறது. இது சுவிசேஷ சத்தியமாய் இருக்கிறது. அது சரி. 42கவனியுங்கள், இன்றைக்கு நாம் காண்கிறோம், அதாவது ஜனங்கள். இதை நம்பவே முடியாத அநேக ஜனங்கள் அங்கே இருக்கிறார்கள்; ஆவியால் நிறைந்த ஜனங்களும் கூட. உன்னை மூச்சுத்திணர வைக்கக் கூடிய ஒன்றை நான் உனக்கு சொல்லப் போகிறேன். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வது, நீங்கள் உள்ளே பிரவேசிக்கிறீர்கள் என்று அர்த்தமாகாது, இல்லவே இல்லை, அதினிமித்தம் அல்ல, உன்னுடைய ஆத்துமாவுடன் எந்த சம்மந்தமும் கொள்வதில்லை. அது ஞானஸ்நானமாயிருக்கிறது, புரிகிறதா? உள்ளான ஆத்துமாவானது இங்கே இருக்கிறது. இங்கே உள்ளே, அது தேவனிடத்திலிருந்து வர வேண்டும். ஆனால், அதனால், வெளிப் பக்கத்திலே உனக்கு ஐந்து புலன்கள் உண்டு, மேலும் உன்னுடைய பூமிக்குரிய குடியிருப்புடன் தொடர்பு கொள்ள ஐந்து உட்பிரவேசவழிகள் உண்டு. உன்னுடைய உள் பக்கத்திலே உனக்கு ஒரு ஆவி உண்டு, மேலும் அங்கே உள்ளே உனக்கு ஐந்து வெளிப்பிரவேச வழிகள் உண்டு; உன்னுடைய மனச்சாட்சியும், அன்பும், மேலும் அவ்விதமாக, அந்த ஆவிக்கு ஐந்து வெளிப்பிரவேச வழிகள். ஞாபகமிருக்கட்டும், அந்த ஆவியில் தானே நீ தேவனுடைய மெய்யான ஆவியினால் ஞானஸ்நானம் பண்ணப்படலாம். இருப்பினும் நஷ்டப்பட்டு போகலாம், ஆத்துமாதான் ஜீவிக்கிறதாயிருக்கிறது, தேவனால் நியமிக்கப்பட்டதாய் இருக்கிறது. “அந்த நாளிலே அநேகர் என்னிடத்திலே வந்து 'கர்த்தாவே, நான் பிசாசுகளை வெளியே துரத்தவில்லையா, மேன்மையான வல்லமை மிகுந்த கிரியைகளை செய்யவில்லையா, தேவனுடைய மேன்மையான வரங்களை தீர்க்கதரிசனம் உரைக்கவில்லையா' என்று சொல்லுவார்கள்” என்று இயேசுவானவர் கூற வில்லையா? அவரோ, “அக்கிரமத்தை செய்கிறவர்களாகிய நீங்கள், என்னை விட்டு அகன்று போங்கள், நான் உங்களை அறியவே இல்லை. அநேகர் அந்த நாளிலே வருவார்கள்” என்று சொன்னார். 43காய்பா தீர்க்கதரிசனம் கூறவில்லையா? அவன் ஒரு பிசாசாக இருந்தான். அங்கே நாம் காண்கிறோம். மேலும் அந்த ஆசாரியர்கள், அந்த மேன்மையான மனுஷர்கள், அந்த நாட்களிலே மேன்மையான முதல்வர்களாக இருந்திருக்க வேண்டியவர்கள், தாழ்மை மற்றும் மற்ற எல்லாவற்றுடனும், ஆனாலும் தேவனுடைய வார்த்தை தானே அவர்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பட்டிருப்பதை காணத் தவறினார்கள். நான் இங்கே எழுதி வைத்திருக்கிற அவர்களின் கூட்டம் ஒன்றை நாம் எடுத்துக் கொள்ளலாம். பிலேயாமைப் பற்றி என்ன சொல்லுகிறாய்? அவன் ஒரு... “தேவன் தம்முடைய மனதை மாற்றுகிறார்” என்று நீ சொல்லாம். அவர் தம்முடைய மனதை மாற்றுவது கிடையாது. பிலேயாம் ஒரு தீர்க்கதரிசியாக வெளியேறி போய், அங்கே கீழே சென்ற போது, ஒரு பேராயர், பிரசங்கியார், 'நீ அவரை எந்த விதமாக வேண்டுமானாலும் அழைக்க விரும்பலாம், அவன் ஒரு மேன்மையான மனிதனாயிருந்தான். ஆனால் அங்கே கீழே சென்று இஸ்ரவேலரை சபிப்பதைப் பற்றி அவன் தேவனிடத்தில் ஆலோசனைக் கேட்ட போது, முதலாவதாக அவர்களை அவன் விரும்பவில்லை, ஆகவே அவன் போவதற்கு அனுமதி கேட்டான். தேவனானவர் “போக வேண்டாம்” என்று சொன்னார். அப்போது அவர்கள் ஒரு கனவானை அனுப்பினார்கள். ஒரு வேளை பேராயர்களாக அல்லது பிரஸ்மிட்டர்களாக அல்லது ஏதோ ஒருவராக இருக்கலாம்... அவனை இணங்க வைக்க கூடுதலான கல்வியை அனுப்பினார்கள். அவன் மறுபடியும் தேவனிடம் திரும்பிச் சென்றான். நீ தேவனை இரண்டாவது தடவையாக கேட்க வேண்டிய அவசியமில்லை! தேவனானவர் முதல் முறையாக இதை சொல்லும் போது, அது தான் காரியம்! நீ எதுவும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ரெபெக்காள் இரண்டாவது கட்டளையைப் பெறும் வரையில் காத்திருக்கவில்லை. அவர்கள் அவளைக் கேட்டார்கள் “நீ போகிறாயா?” “அவளே சொல்லட்டும்” அவள், “நான் போகிறேன்” என்று சொன்னாள். அவள் தேவனாலே உறுதியாக ஏவப்பட்டிருந்தாள். முழுமையான சத்தியமாயிருந்ததை பெற்றுக் கொள்ளும்படிக்கு தன் மீது அசைவாடிய தேவனுடைய ஆவியின் உயிர் துடிப்பை சார்ந்து செயல்பட்டதினிமித்தம் அவள் வேதாகமத்தின் இராஜாத்திகளில் ஒருத்தியானாள். மேலும் அவள் அதை விசுவாசித்தாள். 44இப்போது நாம் காண்கிறோம். பிலேயாமினாலே, தெரிந்தப்படி, அவனால் காண முடியவில்லை. அவன் வெளியே போய் ஜனங்களை நோக்கிப் பார்த்தான். “இப்பொழுது, ஒரு நிமிஷம் பொறுகள்! இங்கே நாங்கள் ஒரு பெரிய மேன்மையான ஜனமாக இருக்கிறோம். நீங்கள் வெறும் ஒரு சிதறடிக்கப்பட்ட கூட்டமாயிருக்கிறீர்கள்” என்றான். உங்களுக்குப் புரிகிறதா?“ மேலும், நாம் அனைவரும் - நாம் அனைவரும் அதே தேவனை விசுவாசிக்கிறோம்” அது உண்மையாயிருக்கிறது. அவர்கள் யாவரும் ஒரே தேவனை விசுவாசித்தார்கள். அவர்கள் யாவரும் யேகோவாவை தொழுதுக் கொண்டார்கள். பிலேயாமின் பலியை பாருங்கள்; ஏழு பலிபீடங்கள், தேவனுடைய பூரணமான இலக்கம்; ஏழு சபைகள், பார்த்தீர்களா; ஏழு ஆட்டுக்கிடாக்கள், கர்த்தருடைய வருகையைப் பற்றி பேசுகின்றன. அடிப்படையின்படி, அவன் மேசேயைப் போலவே அடிப்படையை உடையவனாக இருந்தான்; ஆனால், நீங்கள் பார்த்தீர்களா, அங்கே தெய்வீக உறுதிப்படுத்தல் இல்லாமலிருந்தது. அங்கே உள்ளே, அவர்கள் இருவரும் தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள். ஆனால், மோசேயின் ஊழியத்தின் உத்திரவாதத்திலே, அங்கே ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அக்கினிஸ்தம்பம், அங்கே அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு மேலே அந்தரத்தில் நின்றது. அங்கே தெய்வீக சுகப்படுதலும், தங்கியிருந்த இடத்திலே ராஜாவின் கம்பீரசத்தமும் இருந்தது. மேன்மையான அடையாளங்கள் தெய்வீக சுகமாகுதலும், அற்புதங்களும் காரியங்களும் அவர்கள் மத்தியில் செய்யப்பட்டது. இது, ஒரு ஜீவனுள்ள தேவன் தம்முடைய மக்கள் மத்தியிலிருப்பதற்கான ஒரு அடையாளமாக இருந்தது. அடிப்படையிலே அவர்கள் இருவரும் சரியாக இருந்தார்கள். பிலேயாம் ஜனங்களை இணங்க வைக்க முயற்சித்து, அவர்களை அதற்குள்ளே மந்திரத்தால் கட்டினான். எப்போது? அவர்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தை அடைவதற்கு சிறிது முன்பாக. இன்னும் ஒரு நாளிலோ இரண்டு நாளிலோ அவர்கள் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திலே இருந்திருப்பார்கள். 45ஆனால் இப்போது நான் பயப்படுகிறேன். இது சொல்வதற்கு கடினமான வார்த்தையாயிருக்கிறது, இந்த சில நாட்களில் இதற்காக நான் துப்பாக்கியால் சுடப்படுவேன். ஆனால் இதை ஞாபகம் வைத்துக் கொள், அதாவது, “ஈக்குமெனிகல் கவுன்சிலினால் சபைகள் மயக்கப்படப் போகின்றன. ”நீயும் அதே கூட்டமாயிருக்கிறாய்“ என்று சொல்வதற்காக அவன் உங்களை நேராக அதற்குள்ளே கொண்டு போய்க் கொண்டிருக்கிறான். நீங்கள் அதே கூட்டம் அல்ல! அந்த பொய்க்காரியத்தின் மத்தியிலிருந்து வெளியே வா! பிரிக்கப்பட்ட நிலையில் இரு! நிச்சயமாக அப்படியாயிருக்கிறது, இது உண்மை. நாம் அந்த பொய்க் காரியத்தை விட்டு விலகியிருக்க வேண்டியதாயிருக்கிறது. அதை விட்டு எவ்வளவு துரமாக கூடுமோ அவ்வளவு தூரமாக! பிலேயாம் சொன்னான் “நம்முடைய பிள்ளைகள் ஒன்றாய்ச் சேர்ந்து திருமணம் செய்து கொள்ள அனுமதிப்போம், எப்படியிருந்தாலும் நாம் அதே தேவனைத் தானே விசுவாசிக்கிறோம்” “இரண்டு பேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்து போவார்களோ?” நீ அவருடைய வார்த்தையுடனே கூட ஒரு மனப்பட்டிருந்தாலொழிய தேவனுடனே கூட நடந்து போக உன்னால் எப்படி கூடும்? நீ அதை செய்யக் கூடாது என்று நியமிக்கப்பட்டிருக்கையில், அல்லது, செய்ய வேண்டாம் என்று கட்டளையிடப்பட்டிருக்கையில், கொள்கைகளையும் அது போன்றவைகளையும் மறுபடியும் சேர்த்துக் கொள்ள உன்னால் எப்படி கூடும்? உன்னால் இதை செய்ய முடியாது! இதை செய்யும்படியான வழியே இல்லை சகோதரனே, சகோதரியே. அந்த புளித்ததை புளிக்காததுடன் கலக்க உன்னால் கூடாது. எண்ணெயும் தண்ணீரும் ஒன்று சேராது. இருளும் வெளிச்சமும் ஒன்று சேராது. வெளிச்சமானது அவ்வளவாய் வல்லமையுள்ளதாய் இருப்பதால் அது இருளை அப்படியே வெளியே தள்ளிவிடும். 46ஆகவே இதை ஒன்றாக கலக்க நம்மால் முடியாது. உலகத்தின் பாவத்தை சேர்த்துக் கலக்கவும் உன்னால் முடியாது. சபையையும் ஸ்தாபனத்தையும் ஒன்று சேர்த்து கலக்க உன்னால் முடியாது. உலகத்தையும் சுவிசேஷத்தையும் ஒன்றாக கலக்க உன்னால் முடியாது. இது ஒன்றாக சேராது! இந்தக் காரியங்கள் வெளிப்படுத்தப்பட்டாலொழிய நம்மால் இதை ஒருபோதும் செய்ய முடியாது. மேலும், இந்த மணி நேரத்திற்கான தேவனுடைய வார்த்தையானது சத்தியமாக இருக்கும்படிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. அடிச்சுவடுகளிலே பின் செல்லுங்கள். 47பெந்தெகொஸ்தே, அந்த காரணத்தினால்தான் லூத்தர் தம்முடைய செய்தியை இழந்து போனார். அந்த விதமாகத்தான் வெஸ்லி தம்முடைய செய்தியை இழந்தார். புரிகிறதா, வெஸ்லியை சார்ந்த சபையானது தொடர்ந்திருந்தால், அவர்கள் பெந்தெகொஸ்தேக்களாக இருந்திருப்பார்கள். லூத்தரன்கள் தொடர்ந்து சென்றிருந்தால் அவர்கள் மெதோடிஸ்டுகளாக இருந்திருப்பார்கள். புரிகிறதா? மேலும் இப்போது, பெந்தெகொஸ்தேக்காரர்கள் தொடர்ந்து போயிருந்தால் அவர்கள் மணவாட்டியாயிருப்பார்கள். நீ பின் தங்கியும், இப்பொழுது நீ போய் கொண்டிருப்பதைப் போல உலகத்திற்குள்ளே தொடர்ந்து போய்க் கொண்டும் இருந்தால், நீ இழக்கப்பட்டுப் போவாய்! நீ வெறும் தண்டாகவும் பதராகவும் இருந்து, எரிக்கப்படுவாய்! நீ அதை அறிவாய். அவர் தம்முடைய கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார். ஆனால் பதரை. அது சுமந்து செல்லுகிற ஒன்றாக இருந்திருந்த போதிலும், அவர் அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார். இது சந்தேகமில்லாமல், சுமந்து சென்றது. ஆனால் அது ஒரு இலையாக மாறின உடனே ஜீவனானது அதை விட்டு அகன்றது. இது, தன்னுடைய முழு வளர்ச்சிக்கு வரும் வரையில், தொடர்ந்து வெளியே சென்று வேறு ஏதோ ஒன்றைச் செய்தது. அதே விதமாக சபையானது நீதிமானாக் கப்படுதலிலும், பரிசுத்தமாக்கப்படுதலிலும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்திலும் (வரங்கள் திரும்பவும் அளிக்கப்படுதல்) தொடர்ந்து வந்து. உருவாக்கப்பட்ட கிறிஸ்துவின் சாயலுக்குள்ளே உட்பிரவேசிக்கும். கிறிஸ்து மணவாளனாக இருக்கிறார், சபையானது மணவாட்டியாயிருக்கிறது. மேலும், மணவாட்டியானவள் மணவாளனின் ஒரு பாகமாக இருக்கிறாள். இது வார்த்தையின் சபையாக இருந்தாக வேண்டும். ஒரு ஸ்தாபன சபையாக அல்ல! இது வார்த்தையின் சபையாக இருக்கும். நிரூபிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையால் பகிரங்கமாக்கப் பட்டதான வார்த்தை! 48பிலேயாம், அவனால் வித்தியாசத்தை கண்டுக் கொள்ள முடியவில்லை. அநேகரால் கூடவில்லை. இது அவனுக்கு முன்பாக உறுதிப்படுத்தப்படிருந்தப் போதிலும், பார்வோனால் இதைக் கண்டுக் கொள்ள முடியவில்லை. தாத்தானால் இதைக் கண்டுக் கொள்ள முடியவில்லை. தாத்தான் அங்கே வெளியே வந்து “இந்த கூட்டத்திலேயே நீர் ஒருவர் மாத்திரம் தான் என்று நினைக்க முயற்சிக்கிறீர். சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்” என்று சொன்னான். தேவனானவர் அதைப் போல ஒரு போதும் இடைப்பட்டது கிடையாது. அவனுக்கு அதைக் காட்டிலும் இன்னும் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவன், “நல்லது. சபையார் எல்லாரும் பரிசுத்தமுள்ளவர்கள். நீ உன்னையே... ”இப்போது இதை நாம் சொல்வோமானால், “கடற்கரையில் உள்ள ஒரே ஒரு கூழாங்கல்”. மேலும், தேவனானவர் தன்னை இங்கே அதற்காகத்தான் அனுப்பினார் என்று மோசே அறிந்திருந்தான். அவன் வெறுமனே “கர்த்தாவே...'என்று சொல்லி, ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே விழுந்தான். தேவனானவர், “அவரிடமிருந்து உங்களை பிரித்தெடுங்கள்” என்று சொன்னார். அவர் அவர்களை விழுங்கிப் போட்டார். 49ஞாபமிருக்கட்டும், இஸ்ரவேலர் செய்ததான பாவம் (பிலேயாம் மூலமாக “அவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்கிறார்கள்” என்று சொல்லப்பட்டது) அந்தப் பாவமானது இஸ்ரவேலுக்கு மன்னிக்கப்படவே இல்லை. கவனி, ஒரு விசேஷமான காரியத்தை உங்களுக்கு நான் சொல்வேன்; எகிப்தைவிட்டு புறப்பட்ட இருபது இலட்சத்தில், அவர்களில் இரண்டு பேர்கள் தான் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் சென்றார்கள். அவர்கள் யாவரும் ஒரே காரியத்தை சாப்பிட்டார்கள். அவர்கள் யாவரும் ஆவியிலே நடனமாடினார்கள், அவர்கள் யாவரும் சகலத்தையும் பொதுவாக வைத்திருந்தார்கள்; ஆனால், பிரித்தெடுக்கும் காலத்திற்கு வந்த போது, வார்த்தையானது பிரித்தெடுத்தலைச் செய்தது. இன்றைக்கும் அவ்விதமாகவே இருக்கிறது. வார்த்தையானது பிரித்தெடுப் பதைச் செய்தது! நேரமானது வந்த போது அவர் சொன்னார்“ ஏன் இங்கே, நாம் இருக்கிறோம்...' அவ்வளவு நெருக்கமாய், கவனி, வேதாகமம் கூறிற்று, “கடைசி நாட்களிலே அந்த இரண்டு ஆவிகள்” மத்தேயு 24:24: “அவ்வளவு நெருக்கமாயிருக்கும். கூடுமானால், இது, தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்”. அந்த பதரானது அப்படியே மிகச் சரியாக கோதுமையைப் போலவே காணப்படுகிறது, ஆனால் அது கோதுமை அல்ல. புரிகிறதா? இது கோதுமை அல்ல, ஆனால் இது மிகச் சரியாக அதைப் போலவே காணப்படுகிறது. பார்த்தீர்களா? அவ்வளவு நெருக்கமாக, இது தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களையே, அவர்களையே வஞ்சிக்கும். நீ ஸ்தாபனமானாய், அந்த ஸ்தாபனத்திலே விழுந்து, காய்ந்து போய் மரித்தாய், அந்த கோதுமையோ' நேராக தொடர்ந்து வெளியே நகர்ந்தது... பார்த்தீர்களா? அது மிகப் பொருத்தமாக சரியாயிருக்கிறது! இது சுமந்து செல்லும் ஒன்றாகும். ஆனால் அந்த கோதுமை அல்ல. நினைவிருக்கட்டும், அந்த கோதுமையானது தொடர்ந்து அப்படியே போய் கொண்டிருக்கிறது. உயிர்த்தெழுதலிலே, அந்த கோதுமையின் பெலன் எல்லாம் சரியாக அந்த கோதுமைக்குள் வந்து சேரும், அது அந்த தலையை உருவாக்கப் போகும் போது, அந்த மேன்மையான உயிர்த்தெழுதலிலே வெளியே வர! மன்னிக்கப்படவே இல்லை! 50ஒரு வினாடி மாத்திரம் இங்கே நிறுத்துவோம். நான் உங்களை திணற அடிக்கவில்லை என்று நம்புகிறேன். ஆனால், பாருங்கள், நான் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கட்டும். நாம் அதை அப்படியே எடுத்துக் கொள்வோம். அதாவது ஒரு சந்தர்ப்பத்திற்காக, இந்த எண்ணிக்கை சரியாக இருக்கும். கருவுண்டாக்கும் வித்து, ஆண்பாலும் பெண்பாலும் வரும் போது, உங்களுக்கு பரிசோதனைக் குழாய் அல்லது ஆடு மாடுகளை இனக் கலப்புக்குட்படுத்தும் போன்றவைகளை நீங்கள் எப்பொழுதாவது அறிந்திருந்தால், ஆண் இனத்திலிருந்து வரும் வெளியீடு சுமார் பத்து லட்சம் கிருமிகளை வெளியாக்குகிறது. பெண் இனத்திலிருந்து வரும் வெளியீடானது சுமார் பத்து லட்சம் முட்டைகளை வெளியாக்குகிறது. ஆனால், அவைகளில் ஒன்றே ஒன்று தான் செழிப்பானதாக இருக்கும் என்பதை நீ அறிந்திருக்கிறாயா? அந்த சிறிய கன்றுக்குட்டிகள், அல்லது அவைகள் எதுவாக இருக்கின்றனவோ, இந்த பல பத்து லட்சம் கிருமிகளிலே, ஒரு பத்து லட்சம் கிருமிகள், அங்கிருக்கும் படியான அந்த ஒரு சிறிய கிருமியானது, அந்த மீதமுள்ள கிருமிகளின் மத்தியிலே தன்னைத்தானே நகர்த்தி. சரியாக கடந்து போய், அந்த செழிப்பான முட்டையைக் கண்டுபிடித்து. ஊர்ந்து அதற்குள்ளே பிரவேசிக்கிறது. அவைகளில் மீதமுள்ளவைகள் மரிக்கின்றன. அவைகளில் ஒன்று ஜீவனுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த மற்றவைகள் நியமிக்கப்படவில்லை, இருப்பினும், அவைகள் எல்லாம் வித்தியாசம் இல்லாமல் இருக்கின்றன. பத்து லட்சத்தில் ஒன்று!.இன்றைக்கு இரவு இது அந்த விதமாக இருக்குமானால் எப்படியிருக்கும்? அங்கே ஐம்பது கோடி கிறிஸ்தவர்கள், உலகத்தில் இருக்கிறார்கள் என்பதாக கருதப்படுகிறது என்று நான் நினைக்கிறேன், சுமார் அந்த எண்ணிக்கை, ஒரு முழு இலக்கம். எடுத்துக் கொள்ளப்படுதல் இன்றைக்கு இரவு வந்தால், அப்போது, இப்பொழுது அமுலில் உள்ள உயிரோடு உள்ளவர்களில், அங்கே ஐந்நூறு ஜனங்கள் மாத்திரம் இருக்கும். நல்லது, எந்த ஒரு நாளிலும் அங்கே, ஏறக்குறைய, அத்தனைப் பேர்கள், அவர்களால் காரணம் கூற முடியாமல், காணாமல் போகிறார்கள். மணவாட்டியானவள் எடுக்கப்பட்டுப் போவாள், நாமோ, இதெல்லாம் என்ன என்று நினைப்போம்; மேலும், மக்கள், தாங்கள் “இதையும், அதையும், அடுத்ததையும், பெற்றுக் கொண்டோம்” என்று சொல்லிக்கொண்டு தொடர்ந்து பிரசங்கம் செய்துக் கொண்டிருப்பார்கள், மேலும் அது எப்படிப்பட்ட ஒரு வஞ்சிக்கப்படுதலாக இருக்கும் என்று பார். இது அப்படியாக இருக்குமானால் என்று வைத்துக்கொள்; இதுதான் என்று நான் சொல்லவில்லை, நான் அறியேன், அதற்கு நான் அதிகாரப்பூர்வமானவன் அல்ல. தேவனே அதை நியாயந்தீர்க்கிறவர். ஆனால், இது எவ்வளவு சுலபமாய் சம்பவிக்க முடியும் என்று பார். எல்லா இலக்கங்கள் மற்றும் காரியங்கள் பிரகாரம், எப்படியாக இது நிரூபிக்கப்பட முடியும்! 51கோரா ஏன் அதைக் காணவில்லை? தாத்தான் ஏன் அதை காணவில்லை? ஆகாப் ஏன் அதைக் காணவில்லை? யோசபாத் ஆகாபிடத்திற்கு போன போது, அவன் “ஆகாபே, நாம் தொல்லையில் அகப்பட்டோம். தேவன் இந்த நிலத்தை நமக்கு கொடுத்தார் என்றும், யோசுவா அதை பங்கிட்டார் என்றும் உமக்கு தெரியுமா? பாரும், இங்கே மேலே உள்ள இந்த, சீரியர்கள் எடுத்துக்கொண்ட இந்த துண்டு நிலமானது. அது நம்முடைய நிலம் அல்லவா?” என்று கேட்டான். “ஆமாம்” “நம்முடைய பிள்ளைகள் பசியாயிருக்கிறார்கள். இந்த சீரியர்களோ, நம்முடைய எதிரிகள், தங்களுடைய பிள்ளைகளுக்கு ஆகாரம் கொடுக்கிறார்கள், நமக்கு சொந்தமாயிருக்க வேண்டிய கோதுமையினால், தங்களுடைய வயிற்றை நிரப்புகிறார்கள்” அது வேதத்தின்படி சரியாயிருக்கிறது. “அங்கே மேலே போய் அதை கைப்பற்ற நீர் எனக்கு உதவி செய்வீரா?” என்று கேட்டான். இப்போது, தீமையின் கீழ் பாதிக்கப்படுகிற ஒரு நல்ல மனிதன் சில சமயங்களில் விட்டுக் கொடுத்துவிடுவான். சபையே, மிகவும் நெருக்கமாக கவனிப்பது மிகவும் நல்லது. 52இப்போது. யோசபாத் ஒரு பெரிய, மதசார்புள்ள மனிதனாயிருந்தபடியால், பாருங்கள், முதல் காரியமாக, “நல்லது, நாம் கட்டாயம் நம்முடைய சபைக்கு மேலே போகத்தான் வேண்டும். நிச்சயமாக, நாம் எல்லாரும் ஒரே மாதிரியான ஜனமாக இருக்கிறோம்” ஆனால் அவர்கள் ஒரே ஜனமாக இருக்கவில்லை! இல்லை! அவன் “நல்லது, எங்கள் சபையானது உங்கள் சபையாயிருக்கிறது. எங்கள் ஜனங்கள் உங்களுடைய ஜனங்களாக இருக்கிறார்கள். நாம் நிச்சயமாகப்போவோம், ஆனால் முதலாவது கர்த்தரிடம் ஆலோசனைக் கேட்போம்' என்று சொன்னான். ஆகவே அவன் சொன்னான், ஆகாப், “சந்தேகமில்லாமல், நாம் அதை முதலில் நினைத்திருக்க வேண்டும், நல்லது, நல்லது...' “கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவர் இருக்கிறாரா? எனக்கு ஒரு கலாசாலை நிறைய உண்டு. இங்கே நான் நானூறு பேர்கள் வைத்திருக்கிறேன், இருப்பதிலே மிகவும் நல்ல தீர்க்கதரிசிகள். அவர்கள் எல்லாரும் தங்களுடைய பி.ஹெச்.டி. (Ph.D.) எல்.எல்.டி (L.L.D), இரட்டை (L.L.D) எல்.எல்.டி. மேலும் அதோடு சார்ந்த எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்' என்று சொன்னான். இப்போது மறந்துவிடாதே, அவர்கள், தீர்க்கதரிசிகளின் கலாசாலையிலிருந்து வந்த, எபிரேய தீர்க்கதரிசிகளாக இருந்தார்கள். “அவர்களை மேலே கொண்டுவா, அவர்கள் சொல்வதை கேட்போம்” என்றான். 53இப்போது, இது சிதேக்கியாவாக இருந்தது என்று நான் நினைக்கிறேன் (பேராயர்களுக்கு மேலிருந்த மேன்மையான தலைவர், அவர்கள் எல்லாருக்கும்) அங்கே வந்திருந்தார், அவருக்கு அந்த ஏவுதல் இருந்தது, அந்த ஏவுதலை பெற்றிருந்தார், மிகவும் நிச்சயமாக. அவர் அங்கே வந்து, தனக்காக இரண்டு பெரிய கொம்புகளை இருப்பினாலே செய்துக் கொண்டார். “உனக்கு தெரியுமா? கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார், நீ இந்த கொம்புகளை எடுத்து, அந்த சீரியர்களை, தேசத்தைவிட்டு முற்றிலும் வெளியே தள்ளப் போகிறாய்”. சரி, மீதியான அந்த தீர்க்கதரிசிகள் எல்லாரும் “அது சிறிதும் பிசகாமல் சரியாயிருக்கிறது” என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்கள். அவர்களில் ஒவ்வொரும், அந்த முழு கலாசாலையும், மனம் ஒத்திருந்தார்கள். புரிகிறதா? ஆகாப் சொன்னான் “நீர் பார்த்தீரா?” உங்களுக்கு தெரியுமா, யோசபாத் ஓரளவுக்கு ஆவிக்குரியவனாக இருந்தான், அவன் முழுவதுமாக காய்ந்துப் போய் விடவில்லை. “ஆனால், நாம் ஆலோசனை கேட்கும்படியாக, அங்கே எங்கேயாகிலும் இன்னும் ஒரே ஒரு தீர்க்கதரிசி இல்லையா?” என்று அவன் சொன்னான். “அனைத்துக் குழுவும், இது நல்லபடியாக இருக்கிறது என்று. சொல்லுகையில், மற்றவர்களிடம் ஆலோசனை கேட்க நீர் விரும்புவது என்ன?” “அந்த முழு காரியமும்” அதுதான் நாம் செய்ய வேண்டியது“ என்று சொன்னார்களே' பார்த்தீர்களா?” அதைதான் நாம் செய்ய வேண்டும்! அவன் சொன்னான் “ஆனால் அங்கே இன்னும் ஒரே ஒரு தீர்க்கதரிசி இல்லையா?” அந்த தனித்திருக்கும் ஒருவன், தெரிகிறதா? “ஆமாம்! ஒருவன் உண்டு, ஒருவன் இருக்கிறான். இம்லாவின் குமாரனான மிகாயா. ஆனால் நான் அவனை வெறுக்கிறேன்” எப்பொழுதும் அவ்விதமாகத்தான். “நான் அவனை வெறுக்கிறேன், ஏனென்றால் அவன் எல்லா காலங்களிலும் மக்களை திட்டிக் கொண்டிருக்கிறான். என்னை சபிக்கிறான், மேலும் என்னைப் பற்றி எல்லா தீங்கையும் எனக்கு சொல்லுகிறான், நான் அவனை வெறுக்கிறேன்” என்று கூறினான். “ஆ! ராஜா அவ்விதமாக சொல்லாமலிருப்பாராக. போய் அவனை கொண்டு வாரும்” என்றான்.“ 54ஆகவே, அங்கே இம்லாவின் குமாரனிடத்திற்கு, அவன் சென்றான், பேராயர்களில் சிலர், அல்லது மூப்பர்களில் சிலரும் அங்கே போய், “இப்போது சொல்வதை கவனி, மறுபடியும் நம்முடைய அமைப்புக்குள்ளே வருவதற்கு நீ விரும்புகிறாயா? அவர்கள் சொல்கிற அதே காரியத்தை நீயும் சொல்வாயானால், அவர்கள் உன்னை திரும்பவும் கொண்டு வருவார்கள்” என்று சொன்னார்கள். அனால் அங்கே இருந்தது என்னவென்றால், அவர்கள் தங்கள் கரங்களை அவன் மேல் வைக்கக்கூடாதபடியான ஒரு மனிதனை தேவன் வைத்திருந்தார்; தேவனானவர் தம்முடைய கரங்களை அவன் மேல் வைத்திருந்தார். அவன் தேவனுடைய சத்தியத்தை பிரதிபலிக்கிறவனாக மாத்திரம் இருந்தான். “நிச்சயமாக, நான் கீழே போகிறேன், ஆனால், தேவன் என் வாயில் வைக்கிறதை மாத்திரம் கூறுவேன்” என்றான். அதோ, அந்த தேவனுடைய மனிதன்.“ எனக்கு இரவு வரையில் நேரம் வேண்டும்” என்றான். ஆகவே இரவு வந்தது. கர்த்தரும் அந்த சிறிய, எந்த அந்தஸ்தும் இல்லாத தீர்க்கதரிசியிடம் பேசினார். முதல் காரியம் என்ன தெரியுமா, அடுத்த நாள் காலையிலே அவன் வெளியே வந்தான். “இதைப் பற்றி என்ன, இம்லா?” என்று கேட்டார்கள். “முன்னேறிப்போங்கள், ஆனால், இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறடிக்கப்பட்டதைக் கண்டேன்” என்று சொன்னான். அவனோ, “நான் உங்களுக்கு சொன்னது என்ன? இதைப் பற்றி உங்களுக்கு நான் சொன்னது என்ன?” என்றான். அப்போது அந்த பெரிய பேராயர் நடந்து வந்து அவனை வாயிலே அறைந்து, “தேவனுடைய ஆவி எந்த வழியாகப் போயிற்று? ஏனென்றால் நான் ஆவியையுடையவனாக இருந்தேன் என்று நான் அறிவேன், நான் இதிலே நடனமாடினேன்; நான் இந்த எல்லாக் காரியங்களையும் செய்தேன். பார்த்தாயா. நான் என் மீது ஆவியையுடைவனாக இருந்தேன். இது எந்த வழியாகப் போயிற்று? என்று கூறினான். 55இப்போது, பாருங்கள், இம்லா ஒரு தேவனுடைய குமாரனாக, அல்லது தேவனுடைய மெய்யான தீர்க்கதரிசியாக இருந்தபடியால், அவன் தரிசனத்தை வார்த்தையுடன் பரிசோதித்தான். இது வார்த்தையோடு சார்ந்து இருக்காவிட்டால், இது தவறானது ஆகும், புரிகிறதா? அந்த மணி நேரத்திற்கான வார்த்தை, தெரிகிறதா? இப்போது, அவன் வேதத்தின்படி கூறினான், நிலமானது அவர்களுக்கு சொந்தமானதாயிருந்தது, நிலமானது அவர்களுடையதாயிருந்தது. வேதத்தின்படி, சகலமும் சரியாக இருப்பதைப்போல காணப்பட்டது. ஆனால் ஒரு காரியத்தை தவிர. மறந்துவிடாதே, இந்த முழு குழப்பமும் வருவதற்கு காரணமாயிருந்தது ஒரு வார்த்தையாக இருந்தது, ஏவாள், தேவனுடைய ஒரு வார்த்தையை விசுவாசியாமற்போனாள்; வேதாகமத்தின் துவக்கத்திலே, ஒரு வார்த்தையானது தொல்லையை உண்டாக்கிற்று. இயேசுவானவர் வேதாகமத்தின் மையத்தில் வந்து, “மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று கூறினார். வேதாகமத்தின் முடிவிலே, “ஒருவன் ஒரு வார்த்தையை எடுத்துப் போட்டாலோ, அல்லது இதனுடன் ஒரு வார்த்தையை கூட்டினாலோ' என்றார். இது சுவிசேஷத்தின் பகுதியாக இருக்கவில்லை... மெதோடிஸ்டுகள் பகுதியை உடையவர்களாய் இருக்கிறார்கள், பாப்டிஸ்டுகளும், பிரஸ்பிடேரியன்களும், மேலும் இவ்விதமாக, அவர்கள் பகுதியை உடையவர்களாயிருந்தார்கள், கத்தோலிக்கர்கள் பகுதியையுடையவர்களாய் இருந்தார்கள், யேகோவாவின் சாட்சிகள், மீதியான அவர்கள் எல்லாரும். 56ஆனால், முக்கியத்துவம் வாய்ந்தது. இது முழுமையான வார்த்தையாயிருக்கிறது, எல்லா வார்த்தையும், அந்த மணி நேரத்திற்கான வார்த்தையும் ஆகும். இதை நின்று சொல்லக்கூடியவனான ஒரு தீர்க்கதரிசியை தேவனானவர் அபிஷேகித்து, அவனை உறுதிப்படுத்தி. இது சரியாயிருக்கிறது என்பதாக இதை நிரூபிக்கும் வரையில் நம்மால் ஒருபோதும் இதை சாதிக்க முடியாது. இது சரியாக மக்களின் ஊடே நழுவிப்போகும். அவர்களோ, இது எப்போதும் இருந்ததைப் போலவே, இதை அறியவே மாட்டார்கள். கத்தோலிக்கர்களாகிய நீங்கள், “ஜோன் ஆப் ஆர்க்கைப் போல, ஒரு மந்திரக்காரியாக இருந்ததற்காக நீங்கள் அவளை ஒரு கொழு மரத்தண்டையில் எரித்தீர்கள்; பிற்காலத்தில், இருநூறு வருடங்களுக்குப் பிறகு அந்த ஆசாரியர்களின் சரீரங்களை தோண்டி எடுத்து அவர்களை ஆற்றிலே தூக்கி எறிந்தீர்கள். பரிசுத்தவானாகிய பாட்ரிக்கையும் அவர்களில் மீதியானவர்களையும் நீங்கள் அறியவே இல்லை . இது மறுபடியும் உங்களுடைய கரங்களுக்குள்ளே கடந்து போகும், நீங்கள் அறியும்படியான முதல் காரியமாக, தேவன் இதை செய்வார், இது செய்யப்பட்டது என்று நீங்கள் ஒரு போதும் அறியவே மாட்டீர்கள். பார்த்தீர்களா, அவர் அப்படியே சரியாக உள்ளே நழுவி வந்து, தன்னுடைய மணவாட்டியை கைப்பற்றி, அவளை சரியாக மேலே கொண்டுபோவார், சரியாக மக்களுடைய மத்தியிலிருந்து அவளை திருடிக் கொண்டு போய் விடுவார். 57இந்தமிகாயா, பரிசோதித்துப்பார்த்து, தனக்கு முன்னதாக ஒரு மெய்யான தீர்க்கதரிசியிடம் தேவனானவர் என்ன சொன்னார் என்று தான் அறிந்திருப்பதாக சொன்னான் என்று நாம் காண்கிறோம் அவனுக்கு முன்னதாக இருந்த தீர்க்கதரிசி, அவர் என்ன சொன்னார்: அவர் இதைச் சொன்னார், அவர் சொன்னார், “ஆகாபே, நீ நீதிமானான நாபோத்தின் இரத்தத்தை சிந்தினபடியினாலே, நாய்கள் உன்னுடைய இரத்தத்தையும்கூட நக்கும். யேசபேலும்கூட அது தான் மிகச்சரியாக, நடந்தேறித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் தேவனானவர் இதை சொன்னார். இது இதற்கு எதிராக தீங்காக இருக்கையிலே அந்த தீர்க்கதரிசி நன்மையை எவ்விதமாக தீர்க்கதரிசனம் கூற முடியும்? தேவனானவர் இதற்கு எதிராக பேசியிருக்கையில், இந்த லவோதிக்கேயா சபைகாலத்திற்கு நல்ல காரியங்களை கூற என்னால் எப்படி கூடும்? நீ நிர்வாணியும் பரிதபிக்கப்பட்டவனுமாயிருக்கிறாய்! நீயோ, நான் ஐசுவரியமுள்ளவனாயிருக்கிறேன், மெதோடிஸ்டும், பாப்டிஸ்டும், பிரஸ்பிடேரியனும் போன்ற சபைகள் எனக்கு உண்டு என்றும், எனக்கு இது உண்டு, எனக்கு அது உண்டு, மிகவும் சிறந்ததான “இதுவும்”, “அதுவும்”, மற்றதும் “உண்டு” என்று சொல்லுகிறாய். அது சரியாயிருக்கிறது. ஆனால் தேவனானவர் வெளிப்படுத்துகிற மெய்யான காரியத்திற்கு, நீ நிர்வாணியாகவும், குருடாகவும், பரிதபிக்கப்பட்டவனாகவும் இருப்பதை அறியாமலிருக்கிறாய். அவர் அதே விதமாக உன்னோடு மாறாமல் போகையில் நீ சரியாக வெளியே நகருகிறாய், புரிகிறதா? காலம் அளவு கடந்து போகு முன்னே, ஜனங்களே விசுவாசியுங்கள். 58இப்போது, அவன் அவனை வாயிலே அடித்து “தேவனுடைய ஆவி எந்த வழியாக போயிற்று...?” என்று சொன்னான். மிகாயா சொன்னான், “தேவனானவர் சிங்காசனத்தின் மீது வீற்றிருப்பதைக் கண்டேன். மேலும் எல்லாமே. அவர் பரலோகத்தின் பிரதிநிதிகளை அழைத்து, ”நாம் யாரை கீழே போகும் படியாகச் செய்து ஆகாபை வஞ்சிக்கலாம்?“ என்றார். அப்போது, ”ஒரு பொய் சொல்லும் ஆவி வந்து தேவனுக்கு முன்பாக விழுந்தது; ஒரு பொய்காரன்! மேலும், எப்பொழுதாகிலும் அந்த பொய் சொல்லும் ஆவியானது அந்த தீர்க்கதரிசிகளுக்குள்ளே பிரவேசிக்கும்போது, அப்போது, தங்கள் மேல் இருக்கும்படியான ஆவி வார்த்தையின் பிரகாரமாக இல்லை என்று அவர்கள் அறிந்து இருந்திருக்க வேண்டும். அவர்கள் ராஜாவின் தீர்க்கதரிசிகளாக இருந்தபடியினாலும், அவர்களுக்கு எல்லாமே நேர்த்தியாக அமைந்திருந்த படியினாலும் அவர்கள் அவ்வளவாய் ஏமாந்து போனார்கள். 59இன்றைக்கு சபையானது செய்ததும் அதுவேதான். நீ தெரு திருப்பத்தில் நின்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, நீ பெற்றுக் கொண்ட அந்த பழைய நாகரீகத்தின் அனுபவத்தைவிட்டு நீ தூரமாய் போய்விட்டாய். அந்த ஸ்தாபனங்களைவிட்டு வெளியே வந்து உங்களை “சுயாதீனமான மக்கள்” என்று அழைத்துக்கொள். இல்லை! பன்றி தன் ஊளைச் சேற்றுக்கும் நாய் தான் கக்கினதிற்கும் என்பதைப் போலாயிற்று. ஏனென்றால் நீ அதில் மறுபடியும் மூடப்பட்டுப்போனாய். இது அந்த முதல் தடவை அவரை வாந்திப் பண்ண செய்திருந்தால், இது அவரை மறுபடியும் வாந்திப் பண்ண செய்யும். அது சரி! தேவன் உங்களை தம்முடைய வாயிலிருந்து வாந்திப் பண்ணிப் போட்டார். அவர் சொன்னார், “நீ வெதுவெதுப்பாயிருக்கிறாய், அனலுமில்லை குளிருமில்லை; சில கூட்டங்களை நடத்துவது, அதற்குப் பிறகு ஒரு சில இசைகளை வாசித்து, ஒரு சிறிதளவு பாடுவது, அப்போது, இது முழுக்க முழுக்க... இது கொஞ்சங் குறைய கிறிஸ்தவத்திற்கே ஒரு அவமானமாக ஆகிவிட்டது. ஒரு டெலிவிஷனைப் பார்ப்பதற்காக என் மகன் அன்றைக்கு என்னை அழைத்தான். ஜனங்கள் வரக்கூடிய ஒரு பாடுகின்ற தேனி என்பதாக இருக்க வேண்டிய ஒன்று. அந்த ரிக்கிகளின் கூட்டம் அங்கே நின்று கொண்டு, இந்த ராக் அண்டு ரோல் போல சுற்றி குலுக்கிக் கொண்டு, அந்த பாமாலைகளை பாடினார்கள். இது இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு அவமதிப்பு ஆகும்! சபையிலே பக்தியுணர்வு இல்லாமல் போய்விட்டது. இயேசு கிறிஸ்துவானவர் தம்மை வல்லமையிலே வெளிப்படுத்தக் கூடிய ஜீவனுள்ள தேவனுடைய சபைக்கு பதிலாக, இது எல்லாமே ஒரு “ராக் அண்டு ரோல்” காரியமாகவும், மேலும் ஒரு நவநாகரீக கண்காட்சியாகவும் ஆகிவிட்டதைப்போல காணப் படுகிறது. இப்படி இருக்கக்கூடாது! அங்கே எங்கேயோ ஏதோ தவறாயிருக்கிறது. நீங்கள் சறுக்கிக் கொண்டு போகிறீர்கள். மேலும், இது அந்த விதமாகத்தான் இருக்கும் என்று வேதாகமம் கூறிற்று. புரிகிறதா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாருங்கள். ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள், காலம் அளவுக்கு மிஞ்சி தாமதமாவதற்கு முன்பு விழித்து எழும்புங்கள். 60இப்போது, நாம் காண்கிறோம், நான் சொன்னதைப் போல, “தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக, அவனை மேலே கொண்டு போக, நாம் யாரை அங்கே போகவைத்து ஆகாபை வஞ்சிக்கப் பண்ணலாம்?” பார்த்தீர்களா, தீர்க்கதரிசியானவர் ஒரு வார்த்தையை சொன்னால், வானமும் பூமியும் கடந்து போய்விடும், ஆனால், இது நிறைவேறாமல் போகாது. இது நடந்தேறிதான் ஆக வேண்டும். ஆகவே அதுதான் காரியம், இது செயல்பட்டுதான் ஆக வேண்டும். அவன் சொன்னான் “இந்த மனிதனை உள் சிறையிலே வைத்து, அவனை துக்கத்தின் அப்பத்தினாலும், துக்கத்தின் தண்ணீரினாலும் போஷியுங்கள். நான் சமாதானத்துடன் திரும்புகையில், அவனை நான் கவனித்துக் கொள்கிறேன்” தன்னிடத்தில் தேவனுடைய ஆவி இருப்பதை அறிந்தவனாய், மிகாயா அங்கே உறுதியாக நின்றான். அவனுடைய தீர்க்கதரிசனமும் தரிசனங்களும் சரியாக இருந்தன. அவனுடைய செய்தியானது சரியாக இருந்தது. ஏனென்றால், இது தரிசனங்களிலிருந்து கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார் என்றிருந்தது. வார்த்தையிலிருந்து, கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார் என்றிருந்தது, இது சரியாக இருந்துதான் ஆக வேண்டும், கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார் என்றிருந்தது. அவனோ, “நீர் திரும்பவருவீரானால், தேவன் என்னிடத்தில் பேசவில்லை” என்றான். என்ன ஆயிற்று என்று நீங்கள் அறிவீர்கள். நிச்சயமாக புரிந்துக்கொள், சகோதரனே. கவனித்துக் கேள். 61நிச்சயமாக, கேபா, அவனால் இதை கண்டுக்கொள்ள முடியவில்லை. அவன் ஏன் கீழே பார்க்கவில்லை...? அவன் ஒரு - அவன் ஒரு பேராயனாக இருந்தான், அவன் அந்த எல்லா சபைகளுக்கும் ஒன்று சேர்த்து, போப்பாண்டவராக இருந்தான். இயேசுவானவர் அங்கே நிற்பதை, அந்த மனுஷனால் ஏன் பார்க்கக் கூடாமற்போயிற்று? அவனால் ஏன் புரிந்துக்கொள்ள கூடாமற் போயிற்று? அவர்கள் 23-வது சங்கீதத்தை , அதாவது, 22-வது சங்கீதத்தை சபையிலே பாடும்போது, “என் தேவனே, என் தேவனே, நீர் ஏன் என்னைக் கைவிட்டீர்?”, பிறகு, அதோ, அவர் சிலுவையின் மீது தொங்கிக் கொண்டிருக்கிறார். அந்த குறிப்பிட்ட வேதவசனம், அவர்கள் ஆராதிக்கும்படியான அதே தேவன் அவரை “மதவெறியர்” என்பதாக ஆக்கினைக்குள் தீர்த்து அவரை கொன்றுக் கொண்டிருந்தார்கள். அதோ காரியம். அது இதோ அப்படியே மறுபடியும் சம்பவிக்கப் போகிறது என்று நான் உங்களுக்கு சொல்வேனானால், இது உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அவர் வெளிப்புறமாக இருந்துக்கொண்டு உள்ளே வருவதற்காக, கதவை தட்ட முயற்சிக்கிறார் என்று வேதாகமம் கூறிற்று, மேலும் ஒருவருமே அவரை உள்ளே அனுமதிக்க மாட்டேன் என்கிறார்கள், “நான் நேசிக்கிறவனை நான் சிட்சித்து கடிந்துக் கொள்வேன். நான் அவனை கண்டிப்பேன், நான் அவனை உலுக்கி எடுப்பேன், ஆனால் இது நான் அவனை நேசிக்கிற காரணத்தினால்தான். கதவைத் திறந்து என்னை உள்ளே வரவிடு.' ஆமய்யா. முடியவில்லை....” மறந்துவிடாதே. சபைக்குள்ளாக வர வேண்டும் என்று நான் விரும்பவில்லை; இது அவர், அந்த தனி நபர். அவரால் சபைக்குள்ளே வர முடியவில்லை. அவரை வெளியே வைத்து பூட்டினார்கள். அதனால், அவைகள் எல்லாவற்றிலும் சபைக்கு வெளிப்புறமாக அவர் இருக்கும்படியான ஒரே ஸ்தாபனமானது. இந்த சபை காலமாக இருக்கிறது. வெளியே தள்ளப்பட்டார்! மறுக்கப்பட்டார்! நிராகரிக்கப்பட்டார்! ஏனென்றால்... அவர் மற்ற சபைகளிலே தற்காலிகமாகத்தான் வெளிப்படுத்தப்பட்டார். நீதிமானாக்கப்படுதல் போன்றவைகளில்; ஆனால் இங்கே, இப்போது வந்துக் கொண்டிருக்கும்படியான காலத்தில், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறவரான இயேசு கிறிஸ்துவை நிரூபிக்கும் வெளிப்படுத்தல் உண்டாயிருக்கிறது. ஓ! போலியான ஏமாற்றுக்காரர்கள் மிகுதியாயிருக்கிறார்கள் என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன், ஆனால், முதல் நபரை, அசல் ஆக இருப்பவரை, சீர்தூக்கிப் பாருங்கள். 62மோசே, தேவனுடைய கற்பனைகளுடன் இஸ்ரவேலரை விடுவிக்க கீழிறங்கிப் போனான்; அவன் போனபோது, அவன் சில அற்புதங்களை செய்தான். ஏமாற்றுகிற போலிகள் அவனை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் முந்தினவர்களாயிருந்தால் இவன் ஒரு ஏமாற்றுகிற போலியாயிருப்பான். பார்த்தீர்களா, அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான், தேவனும் நிரூபித்தார்; அவன் அப்படியே அமர்ந்திருந்தான். மேலும், அதே காரியமானது இந்த கடைசி காலத்திலே வாக்களிக்கப்பட்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? “யம்பிரேயும் யன்னேயும் மோசேயை எதிர்த்து நின்றது போல, சத்தியத்தைப் பற்றி சூடுண்ட மனதையுடைய இந்த மனிதர்களும் செய்வார்கள். பிறகு ஸ்தாபனத்திற்கு ஊடே கொண்டு போகுமானால், இது தேவனிடத்திலிருந்து வரவில்லை' என்று காண்பிக்கின்றது; ஏனென்றால் தேவனானவர் ஜனங்களுடைய மனதை ஈர்ப்பதற்கு இந்த காரியங்களை செய்கிறார், அதன்பிறகு இதை செய்தி பின்பற்றுகிறது. இது இல்லாமலிருந்தால், அப்போது இது தேவன் அல்ல. இது தேவன் அல்ல! தேவன் எப்பொழுதும் அதை செய்கிறார். யூதாஸ் அதை புரிந்துக் கொள்ள முடியாமற்போனான். அவன் சரியாக அவருடனே நடந்தான், அவனோ அதைக் காணவில்லை. 63ஆனால் அந்த மெய்யானது. தேவனால் நியமிக்கப்பட்டது. அந்த மெய்யான வம்ச வித்து, அந்த மெய்யானக் கிருமி, உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்னே தேவனுக்குள் இருந்த தேவனுடைய ஆத்துமா ஒன்று; ஞாபகமிருக்கட்டும், உனக்குள்ளே, இன்றைக்கு இரவு மெய்யாகவே தேவனுடைய ஆவியை உடையவனாயிருக்கிற நீ, இங்கே கிறிஸ்துவுக்குள்ளே இருந்தாய். ஏனென்றால் அவர் வார்த்தையின் பரிபூரணமாயிருந்தார். அவரே சரீரப்பிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாயிருந்தார். தேவனானவர் கிறிஸ்துவுக் குள்ளாக இருந்து உலகத்தை தம்மோடு கூட ஒப்புரவாக்கிக் கொண்டிருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? பாருங்கள், அவர் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்தார். அப்படியானால் நீங்கள் துவக்கத்திலிருந்து தேவனுக்குள்ளாக ஒரு வம்ச“ வித்தாக, ஒரு வார்த்தையாக, ஒரு இலட்சணமாக இருந்தால், அப்படியானால் இங்கே பூமியின் மேலே நீ அவருடன் நடந்தாய். பூமியின் மேலே நீ அவருடன் பேசினாய், பூமியின் மேலே நீ அவருடன் பாடுபட்டாய், கல்வாரியிலே நீ அவருடனே மரித்தாய், பிறகு நீ அவருடனே மறுபடியும் எழுந்தாய்; இப்போது நீ அவருடனே கூட பரலோகத்தின் ஸ்தலங்களிலே கிறிஸ்து இயேசுவுக்குள்ளே அமர்ந்திருந்து, அவருடனே, வார்த்தையுடனே உறவாடிக் கொண்டிருக்கையிலே, இது உன் ஆத்துமாவுக்குள்ளே போஷிக்கிறது, அதாவது, ”மனிதன் தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்“. மெதோடிஸ்டு வார்த்தையல்ல; பாப்டிஸ்டு வார்த்தையுமல்ல; ஞாபகமிருக்கட்டும், அங்கே கொடுக்கப்பட்ட பலியிலே ஏதாகிலும் மீந்துப் போயிருந்தால், இது காலை விடிவதற்கு முன்னே எரிக்கப்பட வேண்டும், ஏனென்றால் நாளைய தினமானது வேறொரு சபை காலம் ஆகும். அது சரிதானே? யாத்திராகமத்திலே, இது சத்தியமாயிருக்கிறது. பலி செலுத்துவதற்கு இது ஒரு குறிப்படையாளமாக, நிழலாக இருக்கிறது. 64வாசல். “நான் ஒரு இடத்தைச் செய்வேன், வேண்டாம்.” நான் உங்களுக்கு கொடுக்கும்படியான ஒவ்வொரு வாசலிலும் நீங்கள் என்னை ஆராதிக்கமாட்டீர்கள்; ஆனால் அங்கே ஒரு வாசல் உண்டு, அந்த வாசலிலே என் நாமத்தை நான் வைப்பேன்“. மேலும், கர்த்தர் எங்கே தமது நாமத்தை வைத்தாரோ அந்த இடத்தில்தானே தேவனானவர் உங்களுடைய பலியை ஏற்றுக்கொள்வார். நாம் எல்லா விதமான வாசல்களையும் செய்தோம், ஆனால் தேவனானவர் ஒரு வாசலை உண்டாக்கினார். தேவன் ஒரு வாசலை உண்டாக்கினார், அந்த வாசலானது. பரி. யோவான் 10வது அதிகாரம், ”நானே அந்த வாசல்“ என்று இயேசு கூறினார். தேவனானவர் தம்முடைய நாமத்தை இயேசுவுக்குள்ளே வைத்தார். அதை நீ விசுவாசிக்கிறாயா? அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார். எந்த ஒரு மகனும் தன்னுடைய பிதாவின் நாமத்தில் வருகிறான். “நான் என் பிதாவின் நாமத்தில் வருகிறேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை” என்று அவர் சொன்னார். நான் என் பிதாவின் நாமத்தில் வருகிறேன், நீங்கள் உங்களுடைய பிதாவின் நாமத்திலே வருகிறீர்கள். இயேசுவானவர் தம்முடைய பிதாவின் நாமத்தில் வந்தார், ஆகவே அவருடைய பிதாவின் நாமம் இயேசு ஆகும். மிகச் சரியாக, ஏனென்றால், அவர் தம்முடைய பிதாவின் நாமத்தில் வந்தார். “நீங்களோ என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொருவன் வருவான், அவனையோ ஏற்றுக்கொள்ளுவீர்கள். நீங்கள் உங்களுடைய ஸ்தாபனங்களை எடுத்துக் கொண்டு, அவைகளுடன் தொடர்ந்து அப்படியே போய்க் கொண்டிருப்பீர்கள். அப்படியே செய்யுங்கள். வேதாகமம் சொல்லுகிறது, ”அவர்கள் இந்த இடத்தை நிரப்புவதற்காகவே எழுப்பப்பட்டார்கள், குருடர்கள், நிர்வாணமாயிருப் பவர்கள், இதையோ அறியாமலிருக்கிறார்கள்“. சபை, மார்க்கம், ஓ! மிகவும் பக்தியுள்ளவர்கள், அப்படியே காயீன் இந்த விதமாகவே; பலியிடுவதையும், எல்லாவற்றையும், ஆபேல் செய்த விதமாகவே செய்தான். ஆனால் வெளிப்பாட்டின் மூலமாக. பரிசுத்த பிரமாணம் என்னவென்று அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது, வயலின் கனிகளோ, உன்னுடைய கரத்துடன் சம்மந்தப்பட்ட எதுவோ அல்ல. வார்த்தையானது மாம்சமாக்கப்படுவதை விசுவாசியால் காண முடியும், மற்றவர்களால் இதை செய்ய முடியாது. 65அந்த இஸ்ரவேலர்கள் எல்லாம், மோசே அதை நடப்பித்துக் காண்பித்த பிறகு, அவர்களை அந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிற ஸ்தலம் வரையிலும் நேராக கொண்டு வந்து சேர்த்த பிறகு, அவர்களில் ஒவ்வொருவரும், “நாங்கள் பிலேயாமுடன் போகிறோம், ஏனென்றால், டாக்டர் பிலேயாம் சொல்வது சரியாயிருக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம். அவர் இன்னும் சமர்த்தாக இருக்கிறார், கூடுதலாக படித்திருக்கிறார், எல்லாமே, எனவே நாங்கள் இதை எடுத்துக் கொள்கிறோம்” என்றார்கள். தேவனும் அவர்களை ஒருபோதும் மன்னிக்கவே இல்லை. அந்த வனாந்திரத்திலேதானே அவர் அவர்களை அழித்துப் போட்டார். மேலும் இயேசுவானவர், அவரே சொன்னார் “அவர்கள் ஒரு போதும் வரமாட்டார்கள், அங்கே அவர்களில் எவரும் இரட்சிக்கப்படவில்லை”. “நாற்பது வருடங்களாக எங்களுடைய பிதாக்கள் அந்த வனாந்திரத்திலே மன்னாவை புசித்தார்கள்” என்று அவர்கள் சொன்னார்கள். அவர் சொன்னார், “அவர்கள் அனைவரும் மரித்துப் போனார்கள். தேவனை விட்டு நித்தியகாலமாக பிரிக்கப்பட்டுப் போனார்கள். அவர்கள் யாவரும் மரித்தார்கள். நிச்சயமாக! ஏனென்றால் அவர்கள் ஒரு தவறுக்கு செவிகொடுத்தார்கள். மோசே தேவனால் உறுதிப்படுத்தப்பட்டவனும், மேலும், வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்கு வழியைக் காண்பிக்கும் தலைவனுமாக இருந்தபோது. மேலும் அவர்கள் இதுவரையிலும் நல்லவிதமாக வந்திருக்கிறார்கள், ஆனாலும் அப்போது அவர்கள் அவனுடன் ஒத்துப் போக மாட்டோம் என்றார்கள். இப்போது, விசுவாசிகளால் இதைப் புரிந்து கொள்ள முடியும், ஆனால் அவிசுவாசிகளால் அந்த உறுதிப்படுத்தப் பட்டதைப் புரிந்துக் கொள்ள முடியாது. 66கேபா எவ்வளவு பக்தியுள்ளவனாக இருந்தான் என்பதை பாருங்கள். அந்த ஆசாரியர்கள் யாவரும், அவர்கள் எவ்வளவு பக்தியுள்ளவர்களாக இருந்தார்கள் என்று பாருங்கள். இயேசுவானவரே அவர்களை நோக்கிப் பார்த்து, “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினுடையவர்கள். மேலும் அவனுடைய கிரியைகளை நீங்கள் கட்டாயம் செய்வீர்கள்” என்று சொன்னார். ஆனால் அங்கே சில விசுவாசிகள் உட்கார்ந்துக் கொண்டிருந்தார்கள். “நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்” என்று இயேசு சொன்னபோது, அந்த விசுவாசிகளால் புரிந்து கொள்ள முடிந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? “நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தை பானம் பண்ணாவிட்டால், உங்களுக்கு ஜீவன் இல்லை” என்று அவர் சொன்னபோது, இதை அவர்களால் விவரிக்கக் கூடுமோ? இல்லை! ஆனால் அவர்கள் இதை விசுவாசித்தார்கள், ஏனென்றால் தேவனானவர் நிரூபிக்கப்படுவதையும், மாம்சமாக்கப்பட்டதையும் அவர்கள் கண்டார்கள். 67இயேசு சொன்னார், “நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாவிட்டால், அப்போது, என்னை விசுவாசியாதீர்கள். ஆனால் நான் என் பிதாவின் கிரியைகளை செய்தால், நான் செய்யும்படியாக முன்னுரைக்கப்பட்ட வார்த்தையை ... அப்போது நீங்கள். உங்களால் என்னை விசுவாசிக்க கூடாமற்போனால், நீங்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, நான் செய்யும் கிரியைகளை விசுவாசியுங்கள். பார்த்தீர்களா? இயேசுவானவர் சொன்னார், ”என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும். அவைகள் என் வார்த்தையை அறிந்திருக்கின்றன. இது அந்த காலத்திற்காக நிரூபிக்கப்படுகையில், அவைகள் இதை அறிந்துக் கொள்ளுகின்றன', சரி, கேபாவும் வார்த்தையை அறிந்திருந்தான்! ஆனால் அந்த காலத்திற்கான வார்த்தையை அல்ல! அந்த பரிசேயர்கள் அவனுக்குள் நுழைத்த வார்த்தையை அவன் வைத்திருந்தான், ஆனால் அந்த மணிநேரத்திற்கான நிரூபிக்கப்பட்ட வார்த்தையை அல்ல! “அவைகள் என் சத்தத்ததை அறிந்திருக்கின்றன, அவைகள் என் அடையாளத்தை அறிந்திருக்கின்றன, அவைகள் என் அதிசயத்தை அறிந்திருக்கின்றன”. ஓ! நம்முடைய வேதவசனத்திற்கு திரும்பி செல்லுவோம், ஏனென்றால், நாம் இதை செய்யாவிட்டால் நாம் மிகுதியான வேதவசனங்களை கடந்துவிடப் போகிறோம், ஏனென்றால், அடுத்த சில நிமிஷங்களில் நான் எப்படியாகிலும் முடிக்கப் போகிறேன், ஆகவே ஒரு சில நிமிஷங்களில் பத்து மணியாகப் போகிறது. நான் அவரை நேசிக்கிறேன். ஆமென். 68நண்பர்களே, சிறிது நேரத்திற்கு முன்பாக நடுபாதையில் நடந்து வந்து, அந்த காணிக்கையை அங்கே வைத்த ஜனங்களாகிய நீங்கள், என் பிள்ளைகளுக்கு ஆகாரம் கொடுத்த மக்களாகிய நீங்கள், அவர் சரீரத்தை வஸ்திரத்தால் மூடியவர்களே, ஒரு காணிக்கை தட்டிலே, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த உங்கள் பணத்தை வைத்தவர்களாகிய நீங்கள், அது எங்கே போகிறது என்று அறிவீர்களா? தேவனைப் பற்றி எதுவும் கேட்டறியாத கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிடத்திற்கு, என்னை கடல் கடந்து கொண்டு போக அது உதவுகிறது. அதைக் கொண்டு நான் செய்வது அதுதான், ஒவ்வொரு பைசாவும், தேவன் என் நியாயாதிபதியாயிருக்கிறார். இதோ என்னுடைய சில... என் சபையின் பொக்கிஷசாலையில் இருக்கும் படியான மனிதன் இங்கேயே உட்கார்ந்திருக்கிறார். ஒரு வாரத்திற்கு நூறு டாலர்கள் எனக்கு கிடைக்கிறது. அவ்வளவுதான்; மீதியானது கடல் கடந்த கூட்டங்களை, அவைகள் எங்கே சாத்தியமோ அங்கே தாங்குகின்றது. சபையானது என்னை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் என்னை வேண்டாம் என்கிறார்கள். இல்லை. அது சரி! அவர்கள் என்னை இப்போது அழைக்கிறார்கள்.அவர்... அவர்கள் சொல்கிறார்கள், “அவர் ஒரு ”இயேசு மாத்திரம்“, அல்லது அதைப் போல ஏதோ ஒன்று. அல்லது ஏதோ ஒரு வெறியன், மதப்பைத்தியம், மேலும் அதையெல்லாம் போல - ஒரு, ஒரு யேசபேல்!” மேலும் நான் - நான் அதை எதிர்பார்க்கிறேன், அவர்கள் என் கர்த்தரை “யேசபேல் என்று அழைத்தார்கள், மேலும் அவர்கள் அவரை அழைத்தார்கள். ... ஒரு யேசபேல் என்று அல்ல, ஆனால் ஒரு ”பெயல்செபூல்' என்று, அவரை அந்த எல்லா கெட்டப்பெயர்களைக் கொண்டு அழைத்தார்கள். “வீட்டெஜமானையே அவர்கள் பெயல்செபூல் என்று அழைத்தார்கள் என்றால், அவருடைய சீஷர்களை இன்னும் எவ்வளவு அதிகமாக அவ்விதம் அழைப்பார்கள்?” ஆகவே அது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்கவில்லை. மேலும் நீ, நீயும்தானே, தேவனுடைய உதவியைக் கொண்டு, நான் இங்கே ஒரு பெரிய மாய்மாலக்காரனாக நின்று கொண்டு உனக்கு ஏதோ ஒன்றை சொல்லுவேன் என்று நீ நினைக்கிறாயா?... அல்லது இது தேவனிடத்திலிருந்து வந்தது என்று நான் நினைத்திருந்தால், அந்த காரியத்தோடு நான் சேர்ந்து கொண்டிருக்க மாட்டேனோ? 69ஆனால் நான் உங்களை நேசித்து, மேலும் சத்தியம் என்னவென்று அறிவேனாகில்... பிற்காலத்தில் நடைபெறாத ஏதாகிலும் ஒன்றை, கர்த்தருடைய நாமத்தில் நான் சொன்னதை நீங்கள் எப்போதாகிலும் கேட்டதுண்டா? இல்லை! நான் எந்த ஒருவரையும் கேட்கிறேன். அங்கே ஆயிரக்கணக்கான காரியங்கள் சொல்லப்பட்டன, அவைகள் எல்லாம் நடந்தேறிவிட்டன! சாமுவேல் வெளியே அழைக்கப்பட்ட அந்த காலத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள், இது அப்படித்தான் என்று நான் நம்புகிறேன், அவர் சொன்னார்... மற்ற தேசங்களைப் போல தங்களையும் அமைத்துக் கொள்ள இஸ்ரவேலர் விரும்பினார்கள். மேலும் அதற்குதான் பெந்தெ கொஸ்தேகாரர்களாகிய நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள். மீதியாயுள்ள ஜனங்களையும் போல நடந்து கொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் அந்த வகையான ஜனங்கள் அல்ல! இதை விட்டு விலகியிரு! பெரிய சபைகளும், பெரிய நேர்த்தியான காரியங்களும், ஓ! சகோதரனே, அதைச் செய்யாதே! கர்த்தருடைய வருகை சமீபமாயிருக்கிறது என்று நாம் பிரசங்கிக்கின்றோம், அங்கே கீழே வயல்களுக்குப் போய் கடவுள் இல்லாதவர்களுக்கு தெரியப் படுத்துவோம். புரிகிறதா, அதைக் குறித்து ஏதாகிலும் செய்வோம். 70ஆனால், நீங்கள் பாருங்களேன், சாமுவேல் ஒரு சமயம், “நான் எப்பொழுதாவது, ஒரு சந்தர்ப் பத்திலாகிலும். என்னுடைய ஜீவனத்திற்காக உங்களிடமிருந்து உங்களுடைய பணத்தை ஏதாகிலும் எடுத்துக் கொண்டது உண்டா?” என்று சொன்னான். “இல்லை சாமுவேலே, நீர் அவ்விதமாக ஒருபோதும் செய்யவில்லை” என்றார்கள். “நடந்தேறிய காரியத்தைத் தவிர நான் எதையாகிலும்) கர்த்தருடைய நாமத்தில் உங்களுக்கு எப்போதாகிலும் சொன்ன துண்டா?” என்றான். “ஓ! அது சரிதான், சாமுவேலே, நீர் தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசி என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். ஆம், ஐயா, நீர் சொன்ன எல்லாமே நடந்தேறியது, சாமுவேலே! ஆனால், எப்படியிருப்பினும், எங்களுக்கு இது வேண்டும்”. என்ன சம்பவித்தது என்று நீங்கள் பார்த்தீர்களா? ஓ, சகோதரனே, வேதவசனமானது அப்படியே முன்னும் பின்னுமாய் வேதாகமம் பூராவும் மறுபடியும் மறுபடியுமாக தானே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் பாருங்கள், இது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. நீங்கள் பாருங்கள், நீங்கள் இந்த வகையான காலங்களையும் சந்திக்கிறீர்கள். நம்முடைய வேதப்பாடத்திற்கு மிகவும் வேகமாக செல்லுவோம். இப்போது, நான் இந்த நேரமெல்லாம் இருந்தேன், நான் இன்னும் என்னுடைய வேதபாகத்திற்கு வரவில்லை. 71இது என்னுடைய இருதயத்தின் மேல் உள்ளது. நான் உங்களை நேசிக்கிறேன். உலகத்தோடு அழிந்துப் போகாதீர்கள்! நீ உலகத்தைச் சார்ந்தவனானால் நீ உலகத்தோடு அழிந்து போவாய். நீ தேவனைச் சார்ந்தவனானால், நீ அவருடனே கூட உயிர்த்தெழுதலிலே செல்லுவாய். ஆகவே இன்றைக்கு இரவிலே, உன் சுபாவத்தை, உலகத்தின் மேலும், அதிலுள்ளவைகளின் மேலுமிருந்து மாற்றிப் போட்டு, கல்வாரியிலே உங்களுடைய பலியை நோக்கி நேராக பாருங்கள்; அந்த நிலைமையில் அங்கே அவரை சந்தியுங்கள், ஏனென்றால், எந்த காலமானாலும் அந்த ஒரு இடத்தில்தான் அவர் உன்னை சந்திப்பார். மெதோடிஸ்டுகள், “அவர் எங்களுடைய சபையிலிருக்கிறார்' என்று சொல்லுகிறார்கள். பாப்டிஸ்டுகளும் பெந்தெகொஸ்தேக்களும் ”இது“. மேலும் பிரஸ்பிடேரியன்களும் ”இது“. ஆனால் அவர் சொன்னார் “நான் என் நாமத்தை வைக்கும் அந்த ஸ்தலத்திலே நான் அவர்களை சந்திப்பேன்'. அது இயேசு கிறிஸ்துவுக்குள்ளே. தேவனானவர் தம்முடைய நாமத்தை அங்கேதான் வைத்தார். ஒரே ஸ்தலமாகிய அதில்தான் அவர் உன்னை சந்திப்பார். மேலும் இது கிறிஸ்துவாயிருக்கிறது. இது வார்த்தையாயிருக்கிறது. மாறாதவர்... இது பாதங்களிலிருந்து வளர்ந்தது. தொடைகள். இப்போது இது தலையில் இருக்கிறது. போவதற்கு ஆயத்தப்படுகிறது. மணவாட்டியானது, மணவாளனைப் போல, முழு அளவையும் வெளிப்படுத்துகிறது. 72இப்போது, சுமார் பத்து நிமிடங்களுக்கு, நம்முடைய வேதபாடத்திற்கு, மிகவும் வேகமாக திரும்புவோம், அதன் பிறகு நாம் முடிப்போம். இப்போது நம்முடைய வேதபாடமானது, நாம்... அங்கே நிதானிப்பது என்னவென்றால், நம்முடைய வேதபாடத்தைப் போல, இது சாதாரணமாக நிகழ்வதைப் போலவே, இது மறுபடியும் நிகழ்ந்தது. மல்கியாவிலே, 3ம் அதிகாரத்தில் “அவருடைய வருகையை முன்னோட ஒரு தூதனை எனக்கு முன்னே அனுப்புகிறேன்' என்பதாக வார்த்தையானது வாக்களித்தப் பிரகாரம் தேவன் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்பினார். இப்போது நீ அதை ஊர்ஜிதம் செய்ய, இதை நிரூபிக்க, விரும்பினால்; மத்தேயு 11-ம் அதிகாரம் இதையே ஊர்ஜிதம் செய்கிறது. யோவானுடைய சீஷர்கள் கடந்து வந்து, அவர்கள் இயேசுவானவரை கண்டபோது, அவர்கள் சொன்னார்கள். யோவான் சிறையிலிருக்கிறான். நாங்கள் உம்மை கேட்டறிய வந்திருக்கிறோம்...' யோவானுடைய கழுகுக் கண்கள் மங்கிப் போயிற்று. அவன் சிறையிலிருந்தான், அவன் சாவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்; “போய் அவரிடம் கேளுங்கள் என்று சொன்னான். பாருங்கள். யோவான் சொன்னான் “தூற்றுக்கூடை அவர் கையிலிருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்குவார்'. அவன், ஆயிரம் வருட அரசாட்சி அந்த நேரமே துவங்கும் என்று நினைத்தான். தானியமானது ஆயத்தமாகிவிட்டது என்று அவன் நினைத்தான். ஆனால் இது மரித்தாக வேண்டும், மேலும் தண்டிற்குள்ளே போய், மெய்யான மணவாட்டியை உருவாக்க மறுபடியும் மேலேறி வரவேண்டும். ஆகவே அவன் சொன்னான் ”அவர் தமது கோதுமையை களஞ்சியத்தில் சேர்ப்பார், மேலும் அவர் அக்கினியால் எரிப்பார். 'அதை கவனி' அந்த காலத்தின், கிறிஸ்துவின் முன்னோடியானவன், அவன் சொன்னது சம்பவிக்கும். 73நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். தானியமானது இங்கே வந்திருக்கிறது. இது களஞ்சியத்திற்குள்ளே சேர்க்கப்படும். இது அந்த மணவாட்டியாயிருக்கிறது, இதனுடைய அந்த பாகம். ஆனால் தண்டிற்கு என்ன சம்பவிக்கும் என்று அவர் சொன்னார்? இது அவிக்கப்படாத அக்கினியால் எரிக்கப்படும். உன்னால் முடியும்பொழுதே இரட்சிப்பை தேடு. ஒரு தண்டாக அல்ல, ஒரு தானியமாக இரு. புரிகிறதா? பழைய மரித்துப் போன தோற்றத்திற்குள் அல்ல, ஜீவனுக்குள்ளே பிரவேசி! வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையாகிய கிறிஸ்துவின் ஜீவனுக்குள்ளே பிரவேசி, அவ்வளவாய் வெளியரங்கமாக்கப்பட்டு, நிரூபிக்கப்பட்ட! இதுவே, இதுவே சேர்க்கப்படுகிற நேரம், கூட்டாட்சி வந்துக் கொண்டிருக்கிறது. நீ தானியத்திற்குள்ளே பிரவேசிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால், பதரானது பின்னாலே விடுபட்டுப் போகப் போகிறது. 74இப்போது இது சம்பவித்தது என்று காண்கிறோம்... இயேசுவானவர்... இங்கே என்னுடைய வசனத்தை முடிக்கும் படியாக, இது மத்தேயு 11. பார்த்தீர்களா, அவர் யோவானுக்கு கொடுக்கவில்லை. இப்போது யோவான் தன்னை எவ்விதமாக நடப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு நான் அவனுக்கு ஒரு புத்தகம் தருகிறேன், “சிறைச்சாலையிலே. ஒரு விசுவாசி” என்று அவர் சொன்னாரா? இல்லை! அவர் சொன்னார், “இங்கும் அங்கும் நின்று என்ன சம்பவிக்கின்றது என்று கவனி. திரும்பி போய் என்ன சம்பவிக்கின்றது என்று யோவானுக்கு காண்பியுங்கள்; சப்பாணிகள் நடக்கிறார்கள், குருடர்கள் காண்கிறார்கள், மரித்துப் போனவர்கள் எழுப்பப்படுகிறார்கள், இந்த சுவிசேஷமானது ஏழைகளுக்கு பிரசங்கிக்கப்படுகிறது. பிற்காலத்தில் என்ன நடந்தேறும் என்று தீர்க்கதரிசியானவர் சொன்னது அப்படியே சிறிதும் பிசகாமல், ”என்னிடத்தில் இடறல் அடையாதிருக்கிற நீ பாக்கியவான்' அவருடைய சீஷர்கள் மலையை கடக்க புறப்பட்டார்கள், அவர் திரும்பி “நீங்கள் யோவானைப் பார்க்க போனபோது நீங்கள் எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரம் அணிந் திருக்கிற ஒரு மனிதனை பார்க்கவா நீங்கள் போனீர்கள், மேலும் அப்படியாக, உங்களுக்கு தெரியுமே, திருப்பிப் போட்ட சட்டைக்காலர் போன்ற இவைகள் எல்லாம்? என்று கேட்டார். ”அவர்கள் இராஜாக்களின் மாளிகைகளில் இருக்கிறார்கள், அவர்கள் குழந்தைகளை முத்தமிட்டு மேலும் தங்கள் மரித்தவர்களை புதைக்கிறார்கள், ஒரு இடது கையிலும் வலது கையிலும் பிடிக்கக்கூடிய பட்டயத்தை எப்படி பிடிப்பது என்று அவனுக்கு தெரியாது!“ புரிகிறதா? ”எதைப் பார்க்க நீங்கள் போனீர்கள்? எந்த காற்றினாலும் அசைக்கப்படுகிற ஒரு நாணலையா? “வா, வா, யோவானே, நீ இங்கே கடந்து வந்தால் நான் உனக்கு கூடுதலாக பணம் தருகிறேன்?” (நல்லது, தேவனை ஸ்தோத்தரி, நான் இப்போது மெதோடிஸ்டு அல்ல, நான் பெந்தெகொஸ்தேவாக இருப்பேன். நான் பிரஸ்பிடேரியனாக இருப்பேன், நான் “இதுவாக”, அதுவாக, கூடுதலான பணத்தையுடைய ஒருவனாக இருப்பேன்)“ காற்றினால் அசைக்கப்பட்ட ஒரு நாணலை நீங்கள் ஒருபோதும் காணவில்லை. அங்கே நீங்கள் எதை பார்க்கப்போனீர்கள், ஒரு தீர்க்கதரிசியையா? ஆம்! ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவனை!” என்று சொன்னார். 75இருப்பதிலேயே மிகவும் எளிமையான ஒரு புகழ் வார்த்தையை யோவான் இப்பொழுது தான் இயேசுவானவருக்கு செலுத்தினான். இது அந்த விதமாகத்தான் வந்தாக வேண்டும் என்று அறிந்தான்; அவரை அவன் அறிமுகப்படுத்திய பிறகும், அவருக்கு மேலே அந்த அடையாளத்தை கண்ட பிறகும், “இதுதான் மேசியா என்று சொன்னான், அதற்குப் பிறகு, அவன் வந்து, ”நீர் தான் அவரோ, அல்லது, நாங்கள் வேறே ஒருவருக்காக எதிர்பார்க்க வேண்டுமா?“ என்று சொன்னான். ஆனால், கவனி, இயேசுவானவர் அதை அறிந்தவராய், பதிலுக்கு அவனுக்கு ஒரு புகழ்வார்த்தையை தந்தார். “நீங்கள் எதனைப் பார்ப்பதற்காக போனீர்கள், காற்றினால் அசைக் கப்படுகிற ஒரு நாணலையா? இந்த நாள் வரையில், யோவானைப் போல மேன்மையான ஒருவன், ஸ்திரீயினிடத்தில் ஒருபோதும் பிறந்திருக் கவில்லை” என்று சொன்னார். அது சரி! ஒரு மனுஷனுக்கு செலுத்துவதற்காக, எப்படிப்பட்ட ஒரு வாழ்த்து! ஆனால், நீங்கள் பாருங்கள், அங்கேதான் அது இருந்தது. அந்த தீர்க்கதரிசனமானது அவர்களுடைய முகத்திற்கு முன்பாக சரியாக நிறைவேற்றப்பட்டது, ஒரு முன்னோடியானவன் வருவதுடன், மிகச்சரியாக மல்கியா சொன்னபடி. இப்போது அது மல்கியா 3, மல்கியா 4 அல்ல! யோவான்ஸ்நானன் மல்கியா 3 ஆக இருந்தது. இயேசுவானவர் அவ்விதமாக சொன்னார் “வேதபாரகர்கள் இவ்விதமாக ஏன் சொல்லுகிறார்கள்...” என்று அவர்கள் அவரைக் கேட்ட பொழுது, “அவன் ஏற்கனவே வந்தாயிற்று. அவர்கள் சொன்னதை அவர்கள் செய்தார்கள்” என்று சொன்னார். ஆனால், மறந்துவிடாதீர்கள், மல்கியா 4, மல்கியா 4ன் தீர்க்கதரிசிக்குப் பிறகு, உடனே, யோவான் ஸ்நானனின்... அல்லது. ... எலியாவின் நான்காவது வருகை ஆகும். ஐந்தாவது வருகை வெளிப்படுத்தின விசேஷம் 11ம் அதிகாரமாயிருக்கும், சாட்சிகள், அவர் மீதியாயிருக்கிற யூதர்களுக்காக வரும்போது. ஆனால் தேவனானவர் அதே ஆவியை ஐந்து தடவைகள் உபயோகித்திருக்கிறார். கிருபை! நீங்கள் பார்த்தீர்களா? ஐந்து என்ற இலக்கம் ஒரு கிருபையின் இலக்கமாயிருக்கிறது, இதை அவர் உபயோகப் படுத்தினார். வெறும் மூன்று எச்சரிப்புகளை உபயோகப்படுத்த மாட்டார்; அங்கே இரண்டு, மூன்று, நான்கு இருக்கிறது, இது ஐந்து தடவைகள் அவர் இதை உபயோகப்படுத்துகிறார். 76இப்போது, சடுதியாக கவனியுங்கள், நாம் இப்போது முடிக்கிறபோது. அவர் சொன்னார், “உரைக்கப்பட்ட பிரகாரம் இதுதான் அவர், நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புகிறேன்”. ஆனால் மல்கியா 4ல், அந்த தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொன்ன உடனே, முழு பூமியும் எரிக்கப்படுவதாயுள்ளது, மேலும், நீதிமான்கள், அக்கிரமக்காரர்களின் சாம்பலின் மேலே நடந்து போவார்கள். பார்த்தீர்களா? மிகச் சரியாக! பாருங்கள், அதுதான் மல்கியா 4ன் தீர்க்கதரிசனம். மேலும், லூக்கா 17ல் கவனியுங்கள், அங்கே அவர் சொன்னார் “கடைசி நாட்களில் இது மறுபடியுமாக சோதோம் கொமோராவைப் போல ஆகிவிடும்”. இது நமக்கு உண்டா? சோதோமும் கொமோராவும் நமக்கு மறுபடியும் உண்டாகியுள்ளதா? முழு தேசங்களும், அதை நோக்கிப் பாருங்கள்! இப்போது தானே இங்கிலாந்தைப் பற்றி சொல்லப்பட்டதை கவனி, இது முழுவதுமாக தாறுமாறாகிப் போன நிலை! மேலும், இங்கே பாருங்கள். நீங்கள் 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பார்த்தீர்களா, இது போன மாதத்திற்குரியது என்று நம்புகிறேன், அவர்கள் சொல்லுகிறார்கள், “சிறு பையன்களும் பெண்களும், இருபதிலிருந்து இருபத்தைந்து வயதில், நடுத்தர வயதை கடக்கிறார்கள்”. நான் அவர்களை ஜெபக் கூட்டங்களில் சந்திக்கிறேன், ஸ்திரீகளின் வழிபாடு நின்றுபோன சிறு பெண்கள், இருபது, இருபத்திரண்டு வயதில் ஸ்திரீகளுக் கான வழிபாடு நின்று போன நிலை. இது எதினிமித்தம்? தாறு மாறான நிலை! இனக்கலப்பு! கெடுத்துப்போட்டது. மிகச் சரியாக அதுதான், அந்த முழு காரியமும் சரீரத்தை கெடுத்துப் போட்டது. நாம் ஒரு குழப்பத்தைத் தவிர எதுவுமில்லை. அப்படியே இனக் கலப்புச் செய்யப்பட்ட ஒரு செடியைப் போல. 77நீ ஒரு இனக்கலப்பு செய்யப்பட்ட செடியை எடுத்து அங்கே வெளியே வைத்துப் பார். ஒவ்வொரு கிருமியும் அதை நோக்கி தவறாமல் ஓடும். ஆனால் கலப்படமில்லாத அசல் செடியோ, ஒரு. கிருமியானது அதை விட்டு அகன்று போகும், அதினால் அதன்மீது நிற்க முடியாது. ஆக, சபையின் பாதிப்பாயுள்ளதும் அதுதான், இதை நாமும் இனக்கலப்பு செய்து விட்டோம். அங்கே மேலே உள்ள பியரி கிரீனின் குதிரையின் சமாச்சாரமும் அதுதான், அது அன்றைய தினம் அந்த பையனை தூக்கி எறிந்துவிட்டது, அது ஒரு வயதான வண்டிக்குதிரையைத் தவிர வேறில்லை. புரிகிறதா? ஒரே காரியம் என்னவென்றால்.... இது சரியாக ஒரு கோவேறு கழுதையைப் போல இருக்கிறது, அதற்கு - அதற்கு ... ஒரு கோவேறு கழுதைக்கு தன்னுடைய அப்பாவும், அம்மாவும் யார் என்று தெரியாது. அதற்கு எதுவுமே தெரியாது. அது பாதி கழுதையாகவும் பாதி குதிரையாகவும் இருக்கிறது, மேலும் பாதி “இதுவும்” கழுதையும்; தான் என்னவாயிருக்கிறோம் என்று அதற்கு தெரியாது. உன்னால் ஒருபோதும் முடியாது.... உன்னை உதைப்பதற்கான வாய்ப்புக்காக அது தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்கும். அதுசரி! நீ அவனை “வா, வா, பையா! வா, வா பையா!' என்று அழைக்கக்கூடும். ஆகவே தன் காதுகளை உயர்த்திப் பிடித்து, ”ஹாவ்! ஹாவ்! ஹாவ்!“ புரிகிறதா? 78இவர்களில் சிலர் சொல்லுவதைப் போல “அற்புதங்கள் நடைபெறும் நாட்கள் கடந்துப் போய்விட்டன, ஹாவ்! ஹாவ்!” இந்த எல்லா அரை-ஜாதிகளும், சபை அங்கத்தினர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் கருதப்பட வேண்டியவர்கள். நான் அதை ஒரு தமாஷாக சொல்லவில்லை, இது உண்மையாக இருக்கிறது. ஆனால் ஒரு கலப்படமில்லாத, பூரண ஜாதியான சகோதரனோ, அவன் தன்னுடைய தகப்பனாயிருந்தது யார் என்றும், தன் தாயாக இருந்தது யார் என்றும் தன் பாட்டியும், பாட்டனாரும் யார் என்றும் அறிந்திருக்கிறான். நீ அவனுக்கு ஏதாகிலும் போதிக்க முடியும், அவன் நற்குணமுள்ளவனாயிருக்கிறான். பரிசுத்த ஆவியினால் பிறந்திருந்து, தேவனுடைய வல்லமையினாலும் வார்த்தையினாலும் நிறைந் திருக்கிற ஒரு கலப்படமில்லாத கிறிஸ்தவன் தன்னுடைய தகப்பன் யார் என்றும், தன்னுடைய தாயார் யார் என்றும், தன்னுடைய பாட்டனாரும் பாட்டியும் யார் என்றும் அறிந்திருக்கிறான். அவன் அதைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருக்கிறான். அவனுக்கு நீ ஏதாகிலும் போதிக்க முடியும். ஆனால் ஒரு அரை ஜாதி - சபைகளுக்கு ஏற்பட்டது அதுதான். உலகத்திற்கும் மத ஸ்தாபனங்களுக்கும் மத்தியிலான இனக்கலப்பு, அதற்குள்ளாக ஒரு சிறிய வார்த்தையை “இங்கேயும்: ஒரு சிறிய வார்த்தையை ”அங்கேயும் போடுவார்கள், வஞ்சிப்பதற்கு மாத்திரம் போதுமான அளவு! அது சரி! கேபாவும் மற்றவர்களும் கண்டதைப் போல, மெய்யான தேவனுடைய வார்த்தையானது வெளிப்படுத் தப்படுவதை;“ நீங்கள் பார்ப்பீர்களானால்; அவர்கள் அதை விட்டு அப்பாலே திரும்பிப் போவார்கள், எப்படியாக என்று அவர்களுக்கு தெரியாது. இனக்கலப்பு! 79இந்த செய்தியிலே, நாம் இப்போது காண்கிறது என்னவென்றால் ஏசாயா 40:3 யோவானையும்கூட வெளிப்படுத்தியது. வனாந்திரத்திலே கூப்பிடுகிறதான ஒரு சத்தத்தை, அவர் ஒரு தீர்க்கதரிசியின் மீதாக அனுப்பினார், “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்கு பாதைகளை செவ்வைப்பண்ணுங்கள்”. சபையானது அவனை நம்பவில்லை, ஏனென்றால், அவன் அவர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்திருக்கவில்லை. அந்த தீர்க்கதரிசியானவன், ஒரு வனாந்திரத்திலிருந்து எழுப்பப்பட்டான், எந்த ஒருவரையும் அறிந்திராதவனாக வந்தான். எலியாவுக்கிருந்த ஆவியை அவன் தன் மீதாக கொண்டிருந்தான்; அவன் வனாந்திரத்தின் மனுஷனாயிருந்தான், அவன் ஒழுக்கங்கெட்ட ஸ்திரீகளை வெறுத்தான். ஞாபகமிருக்கிறதா, எவ்விதமாக எலியா... அவனிடமிருந்து அவனுடைய தலையானது எடுத்துப்போடப்பட காரணமாயிருந்தது என்ன? யேசபேல்தான் அது... அவனுடைய மரணத்திற்கு காரணமாயிருந்தது யேசபேல். இது அவனை வனாந்திரத்திற்குள்ளாக விரட்டியடித்தது. யோவான் ஸ்நானன், மற்றுமொரு வனாந்திரத்தை நேசிப்பவன், ஒரு வேட்டைக்காரன், ஒரு காட்டுவாசி. அவனை கவனி, அவன் கல்வியறிவு இல்லாமலிருந்தான். அவனுடைய வசனத்தை கவனி, அது ஒரு மதசாஸ்திரவாதியைப் போல இருக்கவில்லை. அவன் சொன்னான், “ஓ, விரியன் பாம்பின் குட்டிகளே!” வனாந்திரத்திலே நீ காணக்கூடியவைகளில் மிகவும் அசுத்தமானது, அதனுடைய தந்திரம், ஒரு பாம்பு அப்படிப்பட்டதாயிருந்தது. அவன் அந்த ஆசாரியர்களை “விரியன் பாம்பின் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்? நாங்கள் ”இதை“ சேர்ந்தவர்கள், மேலும் எங்களுக்கு இதுவும் ”அதுவும்“ உண்டு” என்று சொல்லிக் கொள்ள ஆரம்பிக்காதீர்கள், தேவன் இந்த கல்லுகளினாலே அவர்களை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். அது மாத்திரமல்ல, கோடாரியானது (அவன் உபயோகப்படுத்தியது) மரத்தின் வேர் அருகே வைத்திருக்கிறது; நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப் படும்“ என்று சொன்னான். ஆமென்! 80அவன் இயற்கையை பிரசங்கித்தவனாயிருந்தான். ஒரு மேன்மையான தேவனுடைய மனிதன், ஒரு குறுகிய காலம் வாழ்ந்தான். ஆனால், பூமியின் மீதாக ஒரு பற்றியெரிதலை வைத்தான். அவனுடைய அந்த ஆறு மாத ஊழியத்தில் அந்த பரம்பரையை அதிர்ச்சிக்குள்ளாக்கினான். அவனிடத்திலிருந்து அந்த ஆறு மாதத்தின் பலனை பெற்றுக் கொள்வதற்காக தேவனானவர் அவனை முப்பது வருடங்களாக வளர்த்தார். ஆனால் தேவன் தம்முடைய சொந்த வழியை நடப்பிக்கிறார், தம்முடைய அறுவடையானது என்னவாயிருக்கிறது என்று அவர் அறிந்திருக்கிறார். நடந்தவைகள் சரியாக இதுதான் என்று இப்பொழுது நாம் காண்கிறோம். அவர்கள் அவனை நம்பவில்லை, ஏனென்றால் அவன் அவர்களை சார்ந்தவனாக இல்லை. அவர்களால் முடியவில்லை. ... எப்பொழுதும் போலவே அவர்கள் இதைப் புரிந்து கொள்ளவில்லை. இதுதான் அந்த முன்னோடியாயிருக்கிறதை அவர்கள் வார்த்தையின் பிரகாரம் தெளிவாகப் பார்த்திருந்தும், மல்கியா 3ன் தேவனுடைய வார்த்தையை அவர்கள் விசுவாசிக்கவில்லை. நானூறு வருஷங்களாக அவர்கள் - ஒரு தீர்க்கதரிசியும் இல்லாமலிருந்தார்கள், இங்கே திடீரென்று ஒருவர் காட்சியில் வந்தார், புரிகிறதா? மேலும் மக்கள், விசுவாசிகள், அவன் அதுவாக இருப்பதை விசுவாசித்தார்கள். பார்த்தீர்களா, அவர்கள் இதை விசுவாசிக்கவில்லை. அவர்கள் விசுவாசிக்கவில்லை, ஏனென்றால், வார்த்தையானது முழுவதுமாக உறுதிப்படுத்தப்பட்டதை அவர்கள் கண்ட போது, அவர் தாம் என்ன செய்வேன் என்று சொன்னாரோ, மேலும் சகலமும், மேலும் வார்த்தையானது சரியாக ஜலத்திற்குள்ளாக தீர்க்கதரிசியினிடத்திற்கு வந்த பொழுது. இது நிரூபிக்கப்பட்டதை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அங்கே நின்றார்கள். 81அங்கே அந்த வேதவசனத்தின் பேரிலும், யோவானைப் பற்றியும் அநேகர் வாக்குவாதம் செய்கிறார்கள். பாருங்கள், யோவான் சொன்னான், “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெற வேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா?” இயேசுவானவர் சொன்னார், “இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது. யோவானே, நீ ஒரு தீர்க்கதரிசியாயிருக்கும் பட்சத்தில், பலியானது அது கொடுக்கப்படுவதற்கு முன் கழுவப்பட வேண்டும் என்று நீ அறிவாய். மேலும் நானே அந்த பலி, நீ ஒரு தீர்க்கதரிசியாயிருந்து அதை அறிந்திருக்கிறாய் . அப்போது அவன் அவருக்கு இடங்கொடுத்து அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். புரிகிறதா? அவன் அது அப்படியாக இருந்ததை அறிந்திருந்தான். 82பாருங்கள், எப்பொழுதும் போலவே, இயேசுவானவருடைய முதலாம் வருகைக்கு முன்னோடியாயிருந்த அந்த தீர்க்கதரிசியை நோக்கி அவர்கள் சிரித்தார்கள், அவரை அவர்கள், “ஒரு நாகரீகமடையாத, கூச்சலிடுகிற, கல்வியறிவு இல்லாத மத வெறியன்” என்று அழைத்தார்கள். அங்கே இருப்பதாக நான் செல்லவில்லை... போலியில்லாததைப் போல காணப்படும் ஆள்மாறாட்டங்கள் இன்றைக்கு நம்மிடத்தில் இல்லையா என்ன? அவர்கள் முழுக்க முழுக்க அப்படி 'செய்கிறார்கள். ஆனால், நினைவிருக்கட்டும், நீ ஒரு போலியானடாலரைப் பார்ப்பாயானால் அங்கே ஒரு மெய்யான டாலர் இருந்தாக வேண்டும்; நீ ஒரு நபர் தன்னை கிறிஸ்தவனாக இருப்பதைப் போல காண்பித்துக் கொள்ளுவதைப் பார்ப்பாயானால், அங்கே எங்கேயோ ஒரு மெய்யான கிறிஸ்தவன் இருந்தாக வேண்டும்; ஏனென்றால் அங்கே இருக்கவில்லையென்றால், அது அசல் ஆக இருக்கும். நீ அசல் ஆக இருப்பதுடன் போய் சேர்ந்தாக வேண்டும். ஆனால் அந்த முதலில் உள்ளதை சோதித்து அந்த அசல் ஆக உள்ளதை. அப்படியே மிகச்சரியாக வாக்குத்தத்தத்துடன் பொருந்துகிறதா என்று பார். இது பொருந்தினால் அப்போது இதை விசுவாசி; காலத்திற்குரிய வாக்குத்தத்தத்தை! அப்போது தேவனுடைய ஒழுங்கிலே யோவானுடைய தீர்க்கதரிசனமானது நிரூபிக்கப்பட்டது. வார்த்தையானது தீர்க்கதரிசியினிடத்தில் வந்து அவன் உண்மையிலேயே அந்த நபர்தான் என்பதை நிரூபித்தது. 83மறுபடியுமாக இயேசுவானவர் வந்தார். அந்த தீர்க்கதரிசனத்தை. அவர்கள் புரிந்து கொண்டதற்கு வித்தியாசமாக அவர்கள் இதை எந்த விதமாக புரிந்து கொள்ளவில்லை. (இப்போது, நாம் முடிவுக்குப் போகிறோம் இப்போது). ஆனால் தீர்க்கதரிசியின் வார்த்தையின் பிரகாரமாய், இது எழுத்துத் திருத்தமாய் நிறை வேற்றப்பட்டது. தீர்க்கதரிசனமானது நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவர்கள் நினைத்த விதமாக அல்ல. இது அவ்விதமாக இல்லை. இப்போது, எது சரியாக இருந்தது என்றும், எது தவறாக இருந்தது என்றும் எவ்விதமாக அவர்கள் புரிந்து கொண்டு அறிந்து இருந்திருப்பார்கள்? தான் சொன்னதை வியாக்கியானப்படுத்துவது தேவன்தானோ என்பதாக, இது தேவனால் நிரூபிக்கப்படுகிறதா என்று பார்க்கும்படியாக. அங்கே பொய் கிறிஸ்துக்கள் எழும்பி, ஒரு கூட்டம்... நானூறு மனுஷர்கள் வெளியே வனாந்திரத்திலே வழி நடத்தினார்கள் என்பதும் அங்கே நிகழ்ந்தது; அவர் சொன்னதைப் போலவே, அவர் ஒருபோதும் தம்மையே வார்த்தையாக்கிக் கொண்டு நிரூபிக்கவில்லை. நீங்கள் பார்த்தீர்களா? 84இயேசுவானவர், அவர் வரும்போது. அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டியதாயிருந்தது. அது சரி! இன்றைக்கே, இயேசுவானவர் மறுபடியும் வருவதற்கு முன்னே, இயேசு கிறிஸ்துவின் முழுமையான வெளிப்பாடானது மாம்சத்திலே வெளிப்பட வேண்டியதாயிருக்கிறது. இதை சிந்தித்துப் பார்! இயேசுவானவர் சொன்னார், “சோதோமின் நாட்களில் இருந்ததைப் போலவே, மனுஷகுமாரன் வெளிப்படுத்தப்படும் போது, மனுஷகுமாரனுடைய நாட்களிலும் இது அவ்விதமாகவே இருக்கும். வெளிப்படுத்தப்படுவது அல்லது திறக்கப்படுவது. தெரியப்படுவது என்ன? இரகசியமானது கொண்டு வரப்பட்டு வெளிப்படுத்தப்படுகிற அந்த நாளிலே உலகமானது சோதோமின் நிலையில் இருக்கும். நாம் இதைப் பெற்றுக் கொண்டோம், இல்லையா? ஆமாம்! அதை எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? இது சோதோமின் நிலைமையில் இருக்கிறது. மேலும் அது சிறிதும் பிசகாமல் சரி! இப்போது அது எங்கே அமைகிறது என்று பாருங்கள். நீங்கள் கூட்டும்படியான ஒவ்வொரு மனுஷக்கூட்டத்திலும் மூன்று கூட்டம் மக்கள் இருப்பார்கள் என்பது நினைவிருக்கட்டும், அதாவது விசுவாசியைப் போல நடிப்பவர்கள், அவிசுவாசிகள், விசுவாசிகள். ஒவ்வொரு கூட்டத்திலும் நாம் அவர்களை உடையவர்களாக இருக்கிறோம். அவர்கள் இப்படிப்பட்டவர்களை எல்லா காலங்களிலும் உடையவர்களாக இருந்தார்கள். அங்கே சோதோமியர்கள் இருந்தார்கள், அங்கே லோத்தை சார்ந்தவர்கள் இருந்தார்கள், அங்கே ஆபிரகாம் இருந்தார். 85ஆபிரகாம் வெளியே அழைக்கப்பட்ட கூட்டமாயிருந்தான் முதலாவதாக அவர் சோமேதாமிலே இருக்கவில்லை. இப்போது, அவர்களுடைய செய்தியை கவனி! அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனுக்காக எதிர்நோக்கியிருந்தார்கள், பல வருஷங்களாக இதற்காக எதிர் நோக்கினார்கள். தேவனானவர் ஆபிரகாமுக்கு பல மேன்மையாக அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பித்தார், ஆனால், அங்கேயோ தேவனானவர் ஒரு மனுஷனைப் போல கீழேயிறங்கி வந்தார்! “அது ஒரு தேவதூதன்' என்று நீங்கள் சொல்லலாம். ஆபிரகாமோ, அவரை “கர்த்தாவே” என்று அழைத்தான். பெரிய எழுத்துக்களில் கர்-த்-தா-வே! வேதாகமத்தை வாசிக்கிற எவனும் பெரிய எழுத்தக்களில் கர்-த்-தா-வே என்பது “ஏலோகிம்” - “பரம்பொருள்' ஆக இருப்பதை அறிவான். ”ஆதியிலே தேவன்“ கர்த்தராகிய தேவன். 'பரம்பொருள், சர்வ நிறைவுள்ளவர். ஆபிரகாம் அவரை ”கர்த்தராகிய தேவன், பரம்பொருள்' என்று அழைத்தான். 86இப்போது கவனி, அங்கே இரண்டு மனிதர்கள், கீழே சோதோமுக்குள்ளே ஒரு செய்தியுடன் சென்றார்கள், அங்கே சோதோமியருக்கு அவர்கள் பிரசங்கித்தார்கள். அவர்கள் எதையும் நடப்பிக்கவில்லை, ஆனால் அவர்களை குருடாக்கினார்கள்; எதுவென்றால், சுவிசேஷத்தை பிரசங்கிப்பது அவிசுவாசியை குருடாகச் செய்கிறது. ஆனால் ஆபிரகாம் கூட்டத்தார் எந்த வகையான அடையாளத்தை பெற்றுக் கொண்டார்கள் என்று கவனி. இப்போது, நாம் ஆபிரகாமின் ராஜரீக சந்ததிகளாக இருக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். ஈசாக்கு இயற்கையான சந்ததியாக இருந்தான். ஆனால், விசுவாச வித்தானது, வாக்களிக்கப்பட்ட வார்த்தையிலே விசுவாசம், “வாக்களிக்கப்பட்ட வார்த்தை (இதைக் காணத்தவறாதே) என்பது அந்த ராஜரீக சந்ததியாயிருந்தது; அதுதான் வித்தாக இருந்தது. ஆபிரகாமின் விசுவாசம். நாம் கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்களாக இருப்பதினாலே, நாம் ஆபிரகாமின் சந்ததிகூட சுதந்தரர்களாக இருக்கிறோம். கவனி, இவைகள் எல்லாம் அங்கே நிகழ்ந்துக் கொண்டிருக்கும்போது, அங்கே கீழே இரண்டு ஊழியக்காரர்கள் ஒரு மேன்மையான செய்தியுடன் சோதோமிலே பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். 87இங்கே ஆபிரகாமின் கூட்டத்துடன் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். இவர் அந்த கூட்டத்துடன் தன் நேரத்தை வீணடிக்கவில்லை. கீழேயுள்ள இப்போது ஆபிரகாமின் கூட்டத்துடன் இருந்து விட்டவரை கவனி, எந்தவிதமான அடையாளத்தை அவர் இவர்களுக்கு கொடுத்தார் என்பதை. அவர் சொன்னார். இப்போது ஞாபகமிருக்கட்டும், அவனுடைய பெயர் அதற்கு சில நாட்களுக்கு முன்பாக 'ஆபிராம்' என்று இருந்தது; 'சாராய்' - சாராள் (ராஜகுமாரி) அல்ல! இந்த மனிதனோ தன்னுடைய முதுகு கூடாரத்தின் பக்கமாய் திரும்பியிருக்க... அப்போதிருந்த ஸ்திரீகள் இப்போதுள்ள ஸ்திரீகளை காட்டிலும் வித்தியாசமாக இருந்தார்கள். அவர்கள் வெளியே போய், தங்களுடைய கணவன்மார்களின் விவகாரத்திலும் மற்ற எல்லாவற்றிலும் நுழைந்தாக வேண்டும், தெரியுமா; ஆனால் அப்பொழுது இதை அவர்கள் செய்யவில்லை. அவர்கள்போகாமல் பின்புறத்திலே இருந்தார்கள். ஆகவே அவர்கள். ஆகவே அந்த தேவதூதர்கள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். செய்தியைக் கொண்டு வந்தவரோ, அவர் சொன்னார், “ஆபிரகாமே, உன் மனைவி சாராள் (சா-ரா-ள்) எங்கே? இதை அவர் எவ்வாறு அறிந்தார்? அவர் இதை எவ்விதமாக அறிந்து கொண்டார்? “அவள் உமக்கு பின்னால் உள்ள கூடாரத்தில் இருக்கிறாள்” என்று ஆபிரகாம் சொன்னான். அவர் சொன்னார், “ஒரு உற்பவகால திட்டத்தில் நிச்சயமாக உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்; அப்பொழுது, உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்”. சாராளோ ஒரு விதமாக தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். 88தம்முடைய முதுகு கூடாரத்தின் பக்கமாயிருக்க, அவர், “இந்த காரியங்கள் எவ்விதமாக ஆகக்கூடும் என்று சொல்லி, சாராள் ஏன் சிரித்தாள்?” என்று கேட்டார். அவள் அந்த சமயத்திலே ஆபிரகாமுக்குள்ளும், அவனுடைய மணவாட்டியுமாகவும் இல்லாமலிருந்தால், தேவன் அவளை சாகடித்திருப்பார். நாம் இன்றைக்கு கிறிஸ்துவுக்குள் இல்லாமலிருந்தால், நம்முடைய எல்லா அவிசுவாசத்துடனிருக்கும் நமக்கும் கூட அவ்விதமாக நிகழ்ந்திருக்கும். அது நம்மை சரியாய் அங்கேதானே பிடித்து வைத்திருக்கிறது, பார்த்தீர்களா? ஆபிரகாமை துன்பப்படுத்தாமல், அவரால் சாராளை துன்பப்படுத்தவோ அல்லது எடுத்துக் கொள்ளவோ முடியாது. புரிகிறதா? ஆகவே, ஞாபகமிருக்கட்டும், இயேசுவானவர் சொன்னார், “சோதோமின் நாட்களில் இருந்ததைப் போலவே மனுஷகுமாரனின் வருகையின்போதும் இருக்கும்”. உலகமானது ஒரு சோதோமிய நிலமையில் இருப்பதாக யாவரும் ஒப்புக்கொள்வதை நாம் காண்கிறோம். இங்கே சொற்ப காலத்திற்கு முன்பு, ஒரு லாஸ் ஏஞ்சலஸ் செய்திதாளை கையிலெடுத்தேன். நான் நினைக்கிறேன், அதிலே, “ஆண்புணர்ச்சியானது லாஸ் ஏஞ்சலஸில் இருபது அல்லது முப்பது சதவிகிதம் பெருக்கமடைந்திருப்பதாகவும், ஒவ்வொரு வருஷமும் அந்த அளவுக்கு பெருக்கமடைந்துக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டிருந்தது. இது... ஓ! இது பயங்கரமானது ஆகும்! நம்முடைய அரசாங்கத்திற்குள்ளும் மற்றும் எல்லா இடங்களிலும் காரியங்கள் அப்படியே நெறிக்கோணலாகிவிட்டன. அது சரி! காரியம் முழுவதும் முழு செயல்முறையும், சபையும் மற்றும் மற்றெல்லாவுமே நெறிகோணலாகிவிட்டன. இது ஒரு நெறிகோணலாகி விட்ட காலத்தில்! 89இப்போது மதசாஸ்திரவாதிகளாகிய உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன், என் சகோதரர்களே. நான் உனக்கு எதிராக பேசவில்லை, என் அன்புள்ள சகோதரனே; நான் உனக்கு உதவி செய்யவே இங்கே இருக்கிறேன், சகோதரனே. நான் உங்களுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு, இந்த கூட்டம் மக்களை இந்த உபயோகமற்ற பொருளிலிருந்து வெளியே கொண்டு வருகையில், நான் தேவனுடைய வார்த்தை சொல்லுகிறதின் மேல் நிற்கிறவனாக இருக்கிறேன். அது சரி. ஆனால், இங்கே பார், கீழே சோதோமிலே, தன்னுடைய பெயரானது 'காம்' என்று முடிவடையும்படியான ஒரு செய்தியாளனை இதற்கு முன்பு இருந்து இப்பொழுது வரையிலும் நமக்கு ஒருபோதும் இருந்ததில்லை. நமக்கு ஒரு ஸ்பர்ஜனும், ஒரு வெஸ்லியும், ஒரு லூத்தரும். மற்றும் மீதி எல்லாமே இருந்ததுண்டு. ஆனால் தன்னுடைய பெயர் 'காம்' என்று முடிவடையும்படியான பல தேச செய்தியாளன் ஒருவன் ஒருபோதும் இல்லை. அது சரி! பார்த்தீர்களா, (ஆங்கிலத்திலே G-R-A-H-A-M - ஆறு எழுத்துக்கள், G-R-A-H-A-M) - பில்லி கிரகாம்; அந்த அறியப்பட்ட சுவிசேஷகர், மேன்மையான தேவ கிரியை மனுஷன். தேவனிடத்திலிருந்து அனுப் பப்ட்டிருக்கிறார். அந்த 'நீதிமானாக்கப்படுதலை, அவர் அவ்வளவு நேர்த்தியாக நிரூபித்து, அதைக் கொண்டு அவர் தேசங்களை அசைக்கிறார், பார்த்தீர்களா, அந்த விதமாக... பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்துக்குரிய ஓரல் ராபர்ட்ஸை பாருங்கள். அந்த விதமான ஒருவர் எந்த காலத்திலாவது இருந்ததுண்டா? ஆறு எழுத்துக்கள், ஏழு அல்ல. (ஆங்கிலத்திலே A-B-R-A-H-A-M - ஏழு. பில்லி கிரஹாம் ஆங்கிலத்தில் G-R-A-H-A-M - ஆறு). இப்போது செய்தியாளர்களை கவனி. நாம் அமைந்திருக்கும் காலத்தை கவனி, இது போன்ற காலம் சரித்திரத்திலே இருந்ததே இல்லை. ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் கொடுக்கப்படும். என்று அவர் வாக்களித்த அதே அடையாளங்களைப் பார். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கவனி. மாறாமல் பிசகாமல், இடப் பொருத்தத்திலே, சரியாக அந்த ஒழுங்கிலே அமைந்தது. இயற்கையும் உலகமும், சகலமும் பிசகாமல் சரியாக நேரத்துடன் அமைந்திருக்கிறது. 90இப்போது, மீதியாயுள்ள வேதபாடங்களை நாம் உருவமைத்து வரையும்போது, இதை தவறவிட்டு விடாதே! இப்போது சீக்கிரம் ஆகட்டும், ஏனென்றால் நான் உங்களை மிகவும் அதிகமான நேரமாய் பிடித்து வைத்திருக்கிறேன். இங்கே பாருங்கள், தீர்க்கதரிசி சொன்னப் பிரகாரம் அவர் பிசகாமல் அப்படியே மிகச் சரியாக வார்த்தையினிடம் வந்தார், அப்படியே மிகச் சரியாக அந்த நேரத்திலே. இப்போது, நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த காலத்தை இப்போது பாருங்கள். நாம் சரியாக சோதோமியக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? ஆபிரகாமின் கூட்டத்தாருக்கான செய்தியாளனைக் கவனி. அவருடைய நாமத்தின் இலக்கங்களையும் எழுத்துக்களையும் இலக்கசாஸ்திரத்தையும் கவனி. “ஒரு பெயரிலே ஒன்றுமே இல்லை!” என்று நீ கூறலாம். எவரும் உனக்கு அவ்விதமாகச் சொல்ல, ஒருபோதும் அனுமதிக்காதே! அவர் ஏன் ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்றும், சாராயின் பெயரை சாராள் என்றும் மாற்றினார்? அவர் ஏன் சீமோனை பேதுருவாக மாற்றினார்? மேலும் அந்த மற்றவர்களையெல்லாம் - புரிகிறதா? நிச்சயமாக, அங்கே விஷயம் இருக்கிறது. மிகச் சரியாக! 91அந்த காரணத்தினிமித்தம் தான்... உங்கள் பிள்ளையை ஒருபோதும் “ரிக்கி” அல்லது “எல்விஸ்” அல்லது ஏதோ ஒன்றாக அழைக்காதீர்கள் என்று நான் சொல்லுகிறேன். “எல்விஸ்” என்றால் “பூனை” என்றும் “ரிக்கி” என்றால் “எலி” என்றும் அர்த்தமாகிறது. பார்த்தீர்களா, அது மிகவும் சரியாக இருக்கிறது. “லெஸ்” அல்ல ஏதோ ஒன்று. உன் பிள்ளைகளில் ஒன்றை ஒருபோதும் அவ்விதமாக அழைக்காதே. இது இருக்குமானால், மிகவும் வேகமாக. இதை மாற்றிவிடுங்கள், ஜனங்களே. நான் தேவனுடைய வேலைக்காரன் என்று நீங்கள் நம்பினால், அந்த ஏழை பிள்ளையின் மேல் அந்த பெயரை பொருத்தாதீர்கள். புரிகிறதா? இல்லை, ஐயா, அதுவல்லாமல் அவனுக்கு வேறொரு பெயரை கொடுங்கள். அடேயப்பா! அதின் மீதாக நான் போய்விட்டிருக்க மாட்டேன், ஏனென்றால் நான் என்னுடைய வேதபாடத்தை விட்டு நகர்ந்து விட்டிருக்கிறேன், ஆனால் நான் இதை சொல்லிவிட்டேன். மேலும் இது யாவும் முடிந்தது; நான் ... அவ்விதமாக தான் நீங்கள் செய்கிறீர்கள், இதை நீ சொல்லும் போது நீ அறியாமலிருக்கிறாய். புரிகிறதா? 92அவரை “அந்நியன், ஒரு குறி சொல்பவன், ஒரு பிசாசு, பெயல்செபூல்” என்றெல்லாம் அழைத்தார்கள். “அவர் தம்மையே தேவனாக்கிக் கொண்டார்” என்றார்கள். ஓ! என்ன சொல்வேன்! தீர்க்கதரிசியாகிய ஏசாயா “அவர் வல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படுவார்” என்று கூறவில்லையா? “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்” (ஏசா. 9:6). அது சரி! அதோடு கூட, “ஆதியிலே வார்த்தையிருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்” (பரி. யோ. 1:1) நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார், ஆனால், அவர் ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் மேலானவராயிருந்தார்; அவரே தேவ-தீர்க்கதரிசியாயிருந்தார். அவர் வந்துதான் ஆக வேண்டும் என்பது ஏன்? 93ஞாபகமிருக்கட்டும், அவர் மூன்று குமாரர்களின் நாமங்களில் வந்தார். அவர் முதலாவதாக மனுஷகுமாரனின் நாமத்தில் வந்தார். அவர் தம்மை ஒருபோதும் “தேவனுடைய குமாரன்” என்று அழைத்துக் கொள்ளவில்லை. நீங்கள் அதை அறிவீர்கள். பார்த்தீர்களா, அவர் மனுஷகுமாரனிலே ஒரு தீர்க்கதரிசியாக, யேகோவா தாமே பிதாவானவர் வந்தார். எரேமியாவை “மனுஷகுமாரன்” என்று அழைத்தார். இப்போது, அவர் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகு, பரிசுத்த ஆவியின் ரூபத்திலே, இயற்கைக்கும் மேம்பட்ட ஆவியாக வந்தார். இப்போது அவர் தேவனுடைய குமாரனாக இருக்கிறார். ஆயிரம் வருஷ அரசாட்சியிலே, தாவீதின் சிங்காசனத்திலே அமர்ந்து, தாவீதின் குமாரனாக இருப்பார். புரிகிறதா. ... அவர் தேவனுடைய குமாரனும், மனுஷகுமாரனும், தாவீதின் குமாரனுமாயிருக்கிறார். 94ஓ! வேதாகமானது இந்த தங்கக்கட்டிகளால் நிறைந்திருக்கிறது. அவைகளெல்லாம் ஒரே இரவிலே நம்மால் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இதை இப்பொழுது சொல்லிவிட்டது பொருத்தமாயுள்ளது. நாளைய தினம் ஒரு வேளை உதிக்காமலே போகலாம். நாம் ஒரு வேளை நாளைக்கு முன்பே போய்விடலாம். காலை வேளைக்கு முன்னதாக மரிக்கப் போகிற ஒரு நபருக்கு நான் ஒரு வேளை பிரசங்கித்துக் கொண்டிருக்கலாம். ஒரு வேளை நாளைக்கு முன்னதாக நான் போய்விடலாம். சகோதரனே, சகோதரியே, அது கட்டு கதையல்ல, அவைகள் இருக்கும்படியான உண்மைகள் ஆகும். நாம் எந்த நேரத்தில் போவோம் என்று நாம் அறியமாட்டோம்,. அந்த கடைசி மூச்சு உன் சரீரத்தை விட்டுப் போன பிறகு உனக்கு எந்த வாய்ப்பும் இருக்காது. இதை, இப்போதே அடைந்து விடு, காலை வரையில் காத்திருக்காதே, ஒரு வேளை அளவுக்கு மிஞ்சி தாமதமாகிவிடும். 95கவனியுங்கள், இப்பொழுது, லவோதிக்கேயா காலத்திலே உள்ள இந்த அதே நாளுக்கு அவர்கள் செய்வதைப் போலவே, அவர்கள் அவருக்கும் சரியாக தீர்க்கதரிசிகள் என்ன சொன்னார்களோ, அதையே செய்தார்கள். அதைப் பார்க்க நீ விரும்பினால், வெளிப்படுத்தின விசேஷம் 3ம் அதிகாரத்தை வாசியுங்கள். “குருடனும் நிர்வாணியுமாயிருந்தும் இதை அறியாமலிருக்கிறாய்” அவர் தம்மை வித்தின் ரூபத்தில் மறுபடியுமாக வெளிப்படுத்தும்போது, பூமிக்குள்ளே சென்ற அதே வித்தானது மணவாட்டியிடம் திரும்பவும் வந்திருக்கிறது; மணவாட்டியும் மணவாளனும் மாத்திரம், ஒரே மாம்சமும் இரத்தமுமாய், ஒரே ஊழியமும், ஒரே காரியமுமாயிருந்து அவர் செய்வதை பிசகாமல் செய்கிறார்கள்; அந்த ஆவி. இங்கேயோ அவர்கள் போலியில்லாததைப் போல நடித்து, மற்றதை எல்லாம் செய்கிறார்கள். மேலும் ஒவ்வொரு நபரும், தன்னுடைய புத்தகத்தை வைத்துக் கொண்டு ஓடுகிறான், மேலும் “இது” ஓ, அப்படிப்பட்டதான உணர்ச்சிகளை நீ கேள்விப்பட்டதே கிடையாது“, ”நான் வாசனை பிடிக்கிறேன்', அல்லது அடுத்த ஒன்று, எல்லாம் “இது”, “அது”. எவ்வளவு கூடுமோ அவ்வளவாய் வேதத்தைச் சாராத நிலை! 96அந்த போலியில்லாத காரியமானது சரியாக அவர்களுக்கு முன்பாக கிடந்தது, அவர்களோ அப்பாலே கடந்தார்கள், “அவர்கள் ஸ்தாபனத்தையும் என்னுடைய - என்னுடைய கொள்கையையும் சார்ந்தவர்கள் அல்ல! பார்த்தீர்களா, இது குருடர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுதல் மாத்திரமே! அவர்கள் எல்லாரும் குழியிலே விழ மாட்டார்களா, என்ன? எப்பொழுதும் போலவே, தீர்க்கதரிசனம் உரைத்ததின் பிரகாரம், வெளிப்படுத்தல் 3ல், அவர்கள் செய்வார்கள் என்று தேவன் சொன்னபடியே, மனிதனுடைய ஸ்தாபனத்தின் பாரம்பரியங்களினால் குருடாக்கப்பட்டு அவரை தங்களுடைய சபைக்கு வெளியிலே வைத்தார்கள். எப்படியாக, இயேசுவானவர் தம்மை அநேக சந்தர்ப்பங்களில் தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்தாமலிருந்தார் என்பதை கவனி. இப்பொழுது. நாம் முடிப்போம். இந்த இரண்டு சீஷர்களான கிளியோப்பாவும் அவனுடைய சிநேகிதனும், உயிர்த்தெழுதலின் போது அவர்கள் இருந்தார்கள், உயிர்த்தெழுதலுக்கு, முதலாவது உயிர்த்தெழுதலுக்கு அடுத்த காலையிலே; எப்படியான ஒரு அழகான காலை வேளை, இயேசுவானவர் மரித்தோரிலிருந்து எழுந்து தம்முடைய ஜனங்களின் மத்தியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார். எப்படிப்பட்டதான சவுந்தரியமுள்ள நினைப்பு! அவர் அந்த நாளில் இருந்ததைப் போலவே, இங்கே. இன்றைக்கு மாறாதவராயிருக்கிறார், ஏனென்றால், அவர் நேற்றும். இன்றும் என்... மேலும் அந்த நாள் முதல் அவர் எந்த காலத்திலும் தம்மை வெளிப்படுத்தியதைவிட இன்றைக்கு தம்மை வெளிப்படுத்துகிறார்; தண்டிலும் பதரிலும் கடந்து வந்தார், (எல்லாம் கடந்துவிட்டன, இப்பொழுது) நாம் மறுபடியுமாக கோதுமைக்குள்ளாக இருக்கிறோம்.. புரிகிறதா? நாம் மறுபடியும் தானியத்துக்குள்ளாக இருக்கிறோம். 97அவர் எவ்விதமாக தம்மை இந்த மக்கள் அறியும்படி செய்தார் என்று கவனி. இப்போது ஞாபகமிருக்கட்டும். அவர்களுடைய மேசியாவாக (இதோ நாம் முடிப்பதற்கு முன்பாக) அந்த காலத்தின் வாக்களிக்கப்பட்ட வார்த்தையாக. கவனி! தாம் செய்வதாக அவர் சொன்னபடி, அவர் அவர்களுக்கு, அந்த தீர்க்கதரிசிக்கு தரிசனமானார். கவனி, “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியுல்லாத மந்த இருதயமுள்ளவர்களே”. அவரை கவனி! அவர் சரியாக தேவனுடைய வார்த்தையிடமாக திரும்பி ஒப்பிடுகிறார், “என்னை நீங்கள் அறியவில்லையா? நான்தான் உயிர்த்தெழுந்தவரான மேசியா' என்பதாக அவர் ஒருபோதும் அவர்களிடம் சொல்லவில்லை. தேவனுடைய மெய்யான ஊழியக்காரன் ஒருபோதும் அந்த விதமாக தன்னை அடையாளங் காண்பிப்பது கிடையாது. அவர் யார் என்று வேதவசனம் அடையாளங் காண்பிக்கின்றது! நிச்சயமாக, தீர்க்கதரிசியானவர். மேசியாவின் காலத்தை எதிர்பாருங்கள் என்று சொன்னதைத் தவிர வேறு எதனை அவர் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு வரப்போகிறார்? இதை புரிந்துக் கொள்கிறீர்களா? முழுவதும் பின்னாகப் போ; ”எல்லா தீர்க்கதரிசிகளும் மேசியாவைப் பற்றிச் சொன்னவைகள் நடந்தேற வேண்டும் என்பதை விசுவாசிக்க கூடாத புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே“. அவர் அவர்களுக்கு என்னவாக இருந்தார் என்பதை, அவர் யோவானைப் போல வேதவசனமானது அடையாளங் காண்பிக்க அனுமதித்தார். அது போதுமான அளவுக்கு செய்திருக்க வேண்டும், தெளிவு அடைய வார்த்தையானது அவரை அடையாளங் காண்பித்திருக்குமேயாகில், அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிற வாக்குத்தத்தமானது யார் என்பதாக, அது தெளிவடையச் செய்திருக்க வேண்டும். அந்த சமயத்திலே யாரோ ஒருவர் காட்சியிலே வந்தாக வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அது மாத்திரமா என்ன? “இப்போது, இந்த நாளிலே, என்ன சம்பவிப்பதாக இருக்கிறது என்று வார்த்தை சொல்வதை நான் உங்களுக்கு காண்பிப்பேன்” என்று நீங்கள் சொல்லலாம். 98வார்த்தைக்கு வார்த்தையாய், இன்று இரவு நான் உங்களுக்கு சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கவில்லையா? (குறிப்பிடமும் ஸ்தலமும் பெயர்களும் இலக்கங்களும் மற்ற எல்லாமே அந்த அடையாளங்கள் எல்லாம், காலங்களும் சகலமும்) அதாவது, நாம் சரியாக முடிவு நேரத்தில் இருக்கிறோம் என்பதாக? நான் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதில்லையா? பார்த்தீர்களா? கவனியுங்கள்! அது அவ்வளவு வெளிப்படையாக உள்ளது. இதற்கு இன்னும் கூடுதலான அடை யாளங்காட்டுதல் தேவைப்படக்கூடாது. அவர், இங்கே பூமியின் மேலே இருந்தபோது, அவர் சொன்னார், “வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று, எண்ணுகிறீர்களே, அவைகள்... நான் என்னவாயிருக்கிறேன், யாராயிருக்கிறேன் என்று அவைகள் சாட்சி கூறுகின்றன”. கவனியுங்கள், அவர் அந்த தீர்க்கதரிசியாயிருந்த மோடியுடன் ஆரம்பித்தார், ஒரு தீர்க்கதரிசி. மோசே சொன்னான் “உன் தேவனாகிய கர்த்தர்... (உபாகமம் 18:15). பார்த்தீர்களா, அந்த மலையின் உச்சியிலே, தேவனானவர் அவனிடம் பேசினார். மேலும், ஒ, ஆஹா! இடிமுழக்கமிடுதல்; அவர்கள் சொன்னார்கள், “கர்த்தர்... மோசே பேசட்டும், தேவன் பேச வேண்டாம், இல்லாவிடில் நாங்கள் அழிந்துபோவோம்”. 99அவர் சொன்னார், “அவர்கள் சரியாக சொன்னார்கள். நான். இவ்விதமாக இனிமேல் நான் அவர்களிடம் பேசமாட்டேன், ஆனால் அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன்”. மேலும் வழி முழுவதிலும் அதுவே அவருடைய செய்தியாயிருந்தது. அது தான். முடிவிலே சகலத்தையும் சரிகட்டியாக வேண்டும். இது சரிகட்டித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், கர்த்தருடைய வார்த்தையானது தீர்க்கதரிசியினிடத்திற்கு வந்தாயிற்று. இது வரும்படியாக இருக்கக் கூடிய ஒரே காரியம் இதுதான். இது வராவிட்டால், இது தேவனுடைய வார்த்தையை உடைத்துப் போட்டு, அவரை ஏதோ தவறான காரியத்தை சொல்லும்படியாகச் செய்கிறது. பார்த்தீர்களா? இது ஒருபோதும் ஒரு கல்வி ஸ்தாபனத்திடம் போகாது. இது ஒரு தீர்க்கதரிசியிடம் போகிறதாயிருக்கிறது! மேலும், தீர்க்கதரிசியானவன், பிரதிஷ்டைப் பண்ணப்பட்டவனாய், தேவனிடத் திலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறான். மேலும் நீங்கள் இதை எவ்விதமாக அறிகிறீர்கள் என்றால், அந்த மனுஷன் சொன்னது அல்ல... 100எலியாக்களும், அங்கிகளும், மேலும் மற்ற யாவையும், சால்வைகளும், மேலும் மற்ற யாவற்றுடனும் கூட ஸ்தாபனங்களுக்குள்ளே போய்விட்டதான எல்லாவிதமான அர்த்த மில்லாதவைகளும் நமக்கு இருந்திருக்கின்றன. ஆனால், தேவனுடைய வாக்குத்தத்தின் மூலமாய், அதோ, இந்த பூமியின் மேலே, ஒரு போலியாயில்லாத தேவனால் அடையாளங் காண்பிக்கப்பட்டவரான (அவருடைய வார்த்தையானது இந்த நாளுக்குத் தேவையான பதிலாயிருக்கும்படியாக) தேவனுடைய ஊழியக்காரர் ஒருவர் வருவார், அவர் மணவாட்டியை சீர் அமைத்து (மெய்யாகவே, சிறியதாயுள்ள சபையின் ஒரு சிறுபான்மையினர்) அதை மேலே கொண்டு செல்வார். அது சரி! “இதோ! பார்த்தீர்களா, வருவார் என்பதாக நான் பேசிக் கொண்டிருந்தேன், அந்த ஒருவர் அதோ!” என்பதாக அவர் அறிமுகப்படுத்துவார். மேலும், அவரைப் பற்றி தீர்க்கதரிசிகள் அனைவரும் இந்த காலத்திற்காக சொன்னதை, ஏன், அவர் அதை சொல்வதை செவிமடுப்பது நிச்சயமாக சுவாரஸ்யமாக இருக்கும். அவர் இதை கூறியதைக் கேட்டிருக்க நீங்கள் விரும்பமாட்டீர்களா? தீர்க்தரிசிகள் யாவரும் சொன்ன ... ஞாபகமிருக்கட்டும், தீர்க்கதரிசிகள் தம்மைப் பற்றி என்ன சொல்வார்கள் என்று அவர் கூறினார். அவர் என்ன சொன்னாரோ, (அவரே வார்த்தையாக இருந்தார்) அதை திரும்பவும் எடுத்துக் கூறுவது. 101அவர் எடுத்து மறுபடியும் கூறியதான வார்த்தைகளை இப்பொழுது கேட்போம். அவர் அவர்களிடம் என்ன சொன்னார் என்பதை நீ கேட்க விரும்புகிறாயா? இப்போது நாம் நிறுத்துவதற்கு முன்பாக அந்த சம்பாஷணையை தொடருவோம். இப்பொழுது, சிலுவையில் அறைதலின் கடைசியான சகல சம்பவங்களைப்பற்றியும் கல்லறை மற்றும் சமாதியண்டையிலான கதையையும், அந்த ஸ்திரீகள் அவரை பார்த்ததும், மற்றவர்களும் அவரை பார்த்ததையும், இதுபோன்ற காரியங்களும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர் சொன்னார். அவர்கள் - அவர்கள் அதைக் குறித்த காரியங்களை அவருக்கு தெரிவித்தார்கள். அவரும் தொடர்ந்து, வார்த்தையை பேசினார். வார்த்தையின் மூலமாய் தம்முடைய வார்த்தைகளைத் தாமே எடுத்துச் சொன்னார். இப்போது சகரியா 12ல் பாருங்கள் (அவர் சகரியா11:12ஐ எடுத்துச் சொல்லியிருக்க வேண்டும்) “அவர் முப்பது வெள்ளிக் காசுகளினால் விற்கப்பட்டார். மேசியாவானவர் முப்பது வெள்ளிக் காசுகளின் மூலமாய் விற்கப்படவேண்டியதாய் இருந்தது அல்லவா?” சங்கீதம் 41:9ல், “அவர் தம்முடைய சிநேகிதர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டார்”. பார்த்தீர்களா? சகரியா 13:7, “தம்முடைய சீஷர்களால் கைவிடப்பட்டார்”. சங்கீதம் 85:11ல், “பொய்சாட்சிகளால் குற்றப்படுத்தப்பட்டார்”. ஏசாயா 53:7ன் மூலமாய் தம்மை குற்றப்படுத்தினவர்களுக்கு முன்பாக ஊமையாக இருந்தார், தம்முடைய வாயை திறக்கவேயில்லை (நல்லது.ஐயா). ஏசாயா 50:6, “அவர் வாரால் அடிக்கப்பட்டார்” சங்கீதம் 22, “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்? என் எலும்புகள் எல்லாம், அவர்கள் என்னை நோக்கிப் பார்க்கிறார்கள். அவர்கள் என் கைகளையும் என் பாதங்களையும் குத்தினார்கள் (அவர் எடுத்துப் பேசக்கூடிய தீர்க்கரிசனங்களைப் பாருங்கள்). ஏசாயா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், ஒரு கன்னிகை கர்ப்பந்தரிப்பாள்” என்பது போன்றவைகள். சங்கீதம் 22:18 அவர்கள் - “அவர்கள் அவருடைய வஸ்திரத்தை தங்களுக்குள்ளே பங்குபோட்டுக் கொண்டார்கள்”. ஏசாயா 7:14ல், “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள். சங்கீதம் 22:7 மற்றும் 8 ... “தம்முடைய சத்துருவினால் பரியாசம் பண்ணப்பட்டார். அவன் அவருடைய சிநேகிதனாக இருக்க வேண்டியவன், அவருடைய சத்துருக்களோ சபை ஆகும். மறுபடியும் சங்கீதம் 22ல், “ஒரு எலும்பும் முறிக்கப்படக் கூடாது, ஆனால் அவருடைய கைகளையும் அவருடைய பாதங்களையும் அவர்கள் உருவக்குத்தினார்கள். ஏசாயா 53:2, அக்கிரமக்காரர்களுடன் மரித்தார்“. ஏசாயா 53:9, ”காயப்படுத்தப்பட்டு ஐசுவரியவான்களான சகோதரர்களுடன் அடக்கம் பண்ணப்பட்டார்“. சங்கீதம் 16:10 “அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார்” தாவீது அவ்விதமாகச் சொன்னான் “என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்'. அவர் மரித்தோரிலிருந்து எழும்புவார். மல்கியா 3 “யோவான் ஸ்நானன் அவருடைய முன்னோடியாயிருந்தான் . அவர் கையாண்டிருக்கக் கூடிய சகல ஒத்து உதாரணங்களும்! ஆதியாகமம் 22ல் ஆபிரகாம் அவனைக் கொண்டுபோன அந்த மலையின் மேலே... ஈசாக்கும் கூட அவருக்கு ஒரு நிழலாயிருந்தான். 102இப்போதுதானே அவர்கள் அந்த நாளினுடைய இந்த வேதவசனங்களை நிறைவேற்றி முடித்தது யார் என்று கண்டு கொள்ள ஆரம்பித்தார்கள். இது அப்போதுதானே, காலம் கடந்த பிறகு, அவர்கள் கண்டுகொள்ள ஆரம்பித்தார்கள். “ஓ, நல்லது. ஒரு நிமிஷம் இருங்கள்! என்ன தெரியுமா? சிலுவையில் அறையப்பட்ட அவர்களுடைய சிநேகிதர்கள்தான், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த தீர்க்கதரிசியாயிருந்தார் என்பதை அப்போதுதான் அவர்கள் அறிந்தார்கள். அவர்கள் அறிந்தார்கள். ஏனென்றால்.... பாருங்கள், வேத வசனங்களினால் அவர்களுக்கு தெரிவிக்கப் பட்டிருக்கவில்லை. ஆனால், இங்கேயோ சிலுவையிலே சம்பவிக்கவேண்டியதாக இருந்த இந்த சகல காரியங்களும். இந்த சகல காரியங்களும், தீர்க்கதரிசிகள் கூறிய எல்லாவற்றையும் புரிந்து கொள்வதில் புத்தியில்லாதவர்களும் மந்த இருதயமுள்ளவர்களுமானவர்கள்; எவ்விதமாக மேசியாவானவர் துன்பப்பட்டு, தம்முடைய மகிமையில் பிரவேசித்து, மூன்றாம் நாள் எழுந்திருப்பார் என்பதை. அவர்களால் இன்னும் இயலவில்லை. “ஓ! ஆமாம். அது சரி. அப்படியா. அவர்-அவர்-அவர். ... ”நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?“ என்று அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய இருதயங்கள் கொழுந்துவிட்டு எரிந்தது அதிசயமல்ல! அவர் அவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிற தீர்க் கதரிசனங்கள் நிறைவேற்றப்பட்டவைகளாயிருந்தன. 103அப்போதுதானே, அவர்கள் உடன் சேர்ந்து சாப்பிட்டதும் உடன் சேர்ந்து பேசியதும், உடன் சேர்ந்து பழகியதும், சேர்ந்து மீன்பிடித்ததும், காடுகளில் படுத்திருந்ததுமான மனிதனாகிய அவர்களுடைய சிநேகிதனானவர்தான் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மணிநேரத்திற்குரிய ஒவ்வொரு வார்த்தையையும் நிறைவேற்றினார் என்று அவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்! அதுதான் சமாச்சாரம். அவர்கள் ஆறு மைல் தூரம் நடந்திருந்தார்கள், ஒருவேளை இது ஒரு குறுகிய காலநேரமாய் காணப்பட்டது என்று நினைக்கிறேன். நிரூபிக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தைப் பற்றி ஒரு ஆறு மணிநேர பிரசங்கத்தை கேட்டார்கள் (இன்றைக்கு நாம் பெற்றுக் கொண்டதைக் காட்டிலும் சிறிது நீளமான பிரசங்கம் என்பதாக நான் காண்கிறேன்) இது இப்போது சாயங்கால நேரத்தில் ஒரு விதமாக நேரம் கடந்து போக ஆரம்பித்தது. சாயங்கால வெளிச்சங்கள் வந்துவிட்டன. சபையே. இது இப்பொழுது அதே நேரமாக இருக்கிறது! எபிரேயர் 13:8 “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'ஓ! நிகழ்ச்சிகள் தீர்க்கதரிசனத்தின் மூலமாய் தெளிவாக்கப்படுகின்றன. இன்றைக்கும் அதுவேதான். சகரியா 14:7ல், தேவனுடைய தீர்க்கதரிசியினால் வாக்களிக்கப்பட்ட சாயங்கால வெளிச்சமானது இன்றைக்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கிற நிகழ்ச்சிகளை காணும்படியாக உண்மையான விசுவாசியின் கண்களை மறுபடியும் திறக்கலாம், நாம் முடிவு நேரத்தில் இருக்கிறோம் என்பதை தீர்க்கதரிசனங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டது. இயேசுவானவர் வருகிறார். 104அன்பான பரலோகப் பிதாவே, இன்று இரவிலே நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம், ஏனென்றால் நீர் எங்களுக்கு ஜெபத்திற்கு பதிலளிக்கிறீர். இந்த ஏழையான, அன்புள்ள ஸ்திரீயானவள் அங்கே கிடக்கிறாள். அறுவை சிகிச்சையோ பலனளிக்காமல் போயிற்று. ஆனால் ஓ தேவனே, இந்த பூமியிலே முதன்முதலாக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை எங்களுக்கு ஞாபகமிருக்கிறது, நீர், நீரே அதை செய்தீர். நீர் ஆதாமின் சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து பிறகு அங்கே வெட்டப்பட்ட இடத்தை மூடிப்போட்டீர், பிறகு ஒரு மனைவியை உருவாக்கினீர். ஓ பிதாவே, உம்முடைய கரமானது இங்கே கீழே இறங்கி வந்து, நாங்கள் கேட்டுக் கொள்ளும்படியான இந்த மேன்மையான காரியத்தை செய்ய வேண்டுமாய் இன்று இரவிலே நான் ஜெபிக்கிறேன். மேலும் இந்த மற்றவர்கள் கர்த்தாவே, மன அழுத்ததினால் துன்பப்படுகிற இந்த ஸ்திரீயையும், விண்ணப்பங்களையுடைய மற்ற யாவரையும், பிதாவே எங்களுடைய முழு இருதயத்துடன், அவர்களை உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். “அங்கே ஒரு ஒரு நாள் உண்டாயிருக்கும், இது பகல் என்றோ, இரவு என்றோ, அழைக்கப்படாமலிருக்கும்” என்று அவர் சொன்னார். ஆனால் சாயங்கால வேளையிலே இது வெளிச்சமாயிருக்கும். இப்போது பூகோள சாஸ்திரத்தின்படி சூரியனானது கிழக்கிலே உதயமாகி மேற்கிலே அஸ்தமிக்கின்றது என்று நாம் அறிவோம். இப்போது, தீர்க்கதரிசியானவர், “அங்கே ஒரு நீளமான தொடற்காலம் உண்டாயிருக்கும், அது சோகமனதாக காணப்பட்டு, ஒரு விதமாக... பகல் அல்லது இரவு என்று அழைக்கப்படக் கூடாததாயிருக்கும் இது ஒரு விதமான இருண்ட உற்சாகமுள்ள நாள்” என்று கூறுகிறார். இப்போது, குமாரன் எங்கே உதயமானார்? என்ன ... இப்பொழுது நாம் பேசிக் கொண்டிருக்கும்படியானது எஸ்-ஓ- என் என்பதாகும். அதாவது இயற்கைக்குரிய எஸ்-யூ-என் கிழக்கிலே உதித்து மேற்கிலே அஸ்தமிக்கின்றது. அந்த அதே தேவனானவர் இந்த அதே குமாரன் எஸ்-ஓ-என் ஆன தேவனுடைய குமாரன் கிழக்கத்திய மக்களுக்கு முதலாவதாக கிழக்கிலே உதயமானார். 105இப்பொழுது அவர் போய்விட்ட பிறகு, அவர்கள் என்ன செய்தார்கள்? முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்கள் தங்களுடைய முதலாவது ஸ்தாபனத்தை ஆரம்பித்தார்கள், ரோமன் கத்தோலிக்க சபையை. இருண்ட காலத்திற்கு ஊடே அவர்கள் சென்று, வெளியே வந்தார்கள். அவர்கள் என்ன செய்தார்கள்? அதே காரியத்தைதான், இது ஒரு நாளாக இருந்தது, இது பகல் என்றும் அல்லது இரவு என்றும் அழைக்கப்படவில்லை. அவர்களுக்கு போதுமான கட்டளைகள் இருந்தன, மேலும் அவர் தேவனுடைய குமாரன் என்பதாக அவர்கள் விசுவாசித்தார்கள், அவர்களுக்கு இருந்ததான வெளிச்சத்திலே நடந்தார்கள், அவர்கள் தங்களுடைய சபைகளை உண்டாக்கினார்கள், அவர்கள் வைத்திய சாலைகள் மற்றும் பள்ளிக் கூடங்கள் கட்டுவதைப் போன்ற காரியங்களை செய்தார்கள், மேலும் கலாசாலைகளை கட்டினார்கள், தங்களுடைய பிள்ளைகளை பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பினார்கள். ஆனால், தீர்க்கதரிசியானவர், “சாயங்கால வேளைப் பொழுதாகும்போது வெளிச்சமாயிருக்கும், ”சன்“ மறுபடியும் வெளியே எட்டிப்பார்க்க, வெளிச்சமுண்டாகும்” என்று சொன்னார். என்ன? அதே “சன்” (SON) அங்கே பின்னாலே, காலை வேளையில் வெளிப்பட்டதான அது, மறுபடியுமாக சாயங்கால வேளையிலே வெளிப்படும். இப்போது, பரி. லூக்கா 17:30ஐ ஒப்பிட்டுப்பார். “மேலும் அந்த நாளிலே, மனுஷகுமாரனானவர் வெளிப்படுத்தப்படும்படியான அந்த நேரத்தில்தானே, சோதோமின் நாட்களிலே இருந்ததைப் போலவே, உலகத்தின் அஸ்தமனமாக இருக்கும். சாயங்கால நேரத்தின்போது வெளிச்சமாயிருக்கும் மகிமைக்கு போகும் வழியை நீ கட்டாயம் காண்பாய். ஓ! என்ன சொல்வேன்! ஜனங்களே, நாம் எங்கே இருக்கிறோம்? தேசங்கள் உடைவதும், இஸ்ரவேலர் விழிப்பதும் தீர்க்கதரிசிகள் முன் சொன்ன அடையாங்கள்; புறஜாதியின் நாட்கள் எண்ணப்பட்டு தூக்கங்கள் இக்கட்டுகளுடனே (அது சமுத்திரத்திற்குள்ளே நழுவுவதை கவனி) ஓ சிதறடிக்கப்பட்டவர்களே திரும்புங்கள் உங்களுக்கு சொந்தமானவர்களிடம் மீட்பின் நாளானது சமீபமாயிற்று மனிதர்களின் இருதயங்கள் பயத்தால் கலங்க ஆவியினால் நிரப்பப்பட்டு, உன் தீவட்டியை சீர்படுத்தி, தெளிவாக்கு மேலே பார்! உன் மீட்பு சமீபமாயிற்று சகோதரனே, சகோதரியே, இது ஒரு பயமுறுத்தும் நேரம். தீர்க்கதரிசனமாக கூறப்பட்ட காரியங்களை கவனியுங்கள், காரியங்கள் சம்பவிப்பதை கவனியுங்கள். எல்லா தீர்க்கதரிசனமும் நிறைவேற்றப்படுவதை கவனியுங்கள், அப்போது இதெல்லாம் எதை பற்றியது என்று நாம் அறிந்துக் கொள்கிறோம். இது மத பைத்தியத்தின் ஒரு பாதிப்பு அல்ல. இது தேவனானவர் தம்முடைய வார்த்தைகளை மிகச் சரியாக மிகச் சரியாக உறுதிப்படுத்துவது ஆகும். கன்மலையானது அடிக்கப்பட்டாயிற்று, நண்பர்களே, உங்களால் எவ்வளவு துரிதமாய் கூடுமோ அவ்வளவு துரிதமாய் அதனிடம் புகலிடம் தேட ஒடு. 106நாம் நம்முடைய தலைகளை வணங்குவோம். (ஒரு சகோதரர் வேறொரு பாஷையில் பேசுகிறார். ஒரு சகோதரி ஒரு வியாக்கியானத்தை தருகிறார். மேடையின் மேல் உள்ள ஒரு சகோதரன், “ஒரு வினாடிக்கு மாத்திரம் நம்மால் நிலையாக இருக்க முடியுமா? தேவனானவர் சகோதரர் பிரான்ஹாம் மூலமாக நம் முடன் பேசினார், மேலும் அபிஷேகமானது சகோதரர் பிரான்ஹாம் மீது இருக்கிறது. அவர் இன்னும் முடிக்கவில்லை என்று சொல்லு கிறார்). ஓ! என்ன சொல்வேன்! நண்பர்களே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும்படியான இந்த நாள் என்னவென்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? தேவனுடன் வழக்காட நீங்கள் துணிவீர்களா? அவர் இதை நிரூபிக்கும் பொழுது, அவர் சொல்வது தவறு“ என்பதாக நீ கூறுவாயோ? அவர் தம்முடைய சொந்த வியாக்கியானியாயிருக்கிறார். அவருக்கு ஊழியம் செய்ய நீ விரும்புகிறாயா? இப்போது உன் தலை வணங்கிய நிலையில், உன்னுடைய இருதயம் வணங்கிய நிலையிலே, சகோதரனே, சகோதரியே. 107இது நம்முடைய கடைசி ஜெபக்கூட்ட நேரமாயிருக்கலாம். நாம் ஒருவேளை ஒருபோது... நான் இன்றையதினத்திலிருந்து, ஒரு வருடம் கழித்து திரும்பி வந்தால், நான் உயிரோடிருந்தால், இங்கே இப்போது இருக்கும்படியான அநேகர். அப்பொழுது இங்கே இருக்கமாட்டார்கள். நான் அந்த நியாயத்தீர்ப்பு ஸ்தலத்திலே உங்களை சந்தித்து, இன்றைக்கு இரவு நான் சொன்னதான யாவற்றுக்கும் பதில் சொல்லியாக வேண்டும். தேவனுக்கு முன்பாக, நீ உன்னுடைய மனநிலை சீராக இருக்கும்பொழுதே, தேவனுக்காக இந்த அளவுக்கு செய்வாயா? நீ இருக்கும்படியான நிலையை நீ அறிந்திருந்தால்...அப்படியே தேவனுடைய நிலைக் கண்ணாடியில் (வேதாகமத்தில்) உன்னையே பார்த்துக் கொள், நீ யாராயிருக்கிறாய் என்பது பொருட்டல்ல, “நான் இப்பொழுது காணப்படுகிற விதமாக இருக்கையிலே, தேவனுடைய ஒரு மகளாக இருப்பதிலே மிகவும் குறைவுள்ளவளாயிருக்கிறேன், இப்போது நான் காணப்படுகிற விதமாக இருக்கையில் தேவனுடைய ஒரு மகனாக இருப்பதிலே மிகவும் குறைவுள்ளவனாயிருக்கிறேன்: ஆனால் தேவனே, இந்த ஸ்தானத்தில் இருக்க நான் விரும்பவில்லை, நான் - நான் அந்த இடத்திற்கு வந்தடைய கஷ்டப்பட்டு முயற்சி செய்ய விரும்புகிறேன்” என்று சொல்வாயா? நீ யாராக இருந்தாலும் இருக்கட்டும், தேவனிடமாய் உன் கரத்தை நீ உயர்த்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த கட்டிடத்தின் பரப்பிலே நீ எங்கேயிருந்தாலும். இருக்கட்டும், “ஆமாம், நான் தேவனுக்கு ஒரு மகனாக இருக்க விரும்புகிறேன். நான் தேவனுக்கு ஒரு மகளாக இருக்க விரும்புகிறேன். என் கர்த்தர் கட்டளையிட்ட யாவற்றையும் நிறைவேற்ற நான் விரும்புகிறேன். இப்போது நீங்கள்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வந்திருப்பவர்களில் தொண்ணூறு சதவிகிதம் என்று நான் யூகிக்கிறேன். இப்பொழுது, இங்கே பார் என் நண்பனே, நீ யோவான் பிரசங்கித்ததை கேட்கும்படியாக அந்த நாளிலே வாழ்ந்திருந்தாயானால் என்னவாயிருக்கும்? இயேசுவானவர் இங்கே இருந்த நாட்களில் நீ வாழ்ந்திருந்தாயானால் என்னவாயிருந்திருக்கும்? நீ யாருடைய பக்கத்தை தெரிந்து கொண்டிருந்திருப்பாய்? இயேசுவானவரின் காலத்தில் நீ வாழ்ந்திருந்தால்... ஞாபகமிருக்கட்டும், நீ அங்கே பின்னால் வாழ்ந்திருந்தாயானால் என்னவாயிருந்திருக்கும்? நீ யாருடைய பக்கத்தை தெரிந்துக் கொண்டிருந்திருப்பாய்? இயேசு வானவரின் காலத்தில் நீ வாழ்ந்திருந்தால்... ஞாபகமிருக்கட்டும், நீ அங்கே பின்னால் வாழ்ந்திருப்பாயானால், அது இப்போதிருப்பதைப் போல இருந்திருக்கும். அதே இயேசுவானவர் தாமே தம்முடைய வார்த்தையின் மூலமாய் தம்மை அறியும்படியாக செய்து கொண்டிருக்கிறார், பார்த்தீர்களா? இதுவோ மக்களுக்கு மிகவும் விருப்பமில்லாததாயிருக்கும். 108ஆனால் நான் உங்களுக்கு சொல்லுகிறேன், மக்கள் சபையை விட்டுவிட வேண்டும் என்று சொல்வதற்கு முயற்சிக்கவில்லை அல்லது... நீங்கள் சபைக்கு போக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். “சபை கூடிவருதலை விட்டுவிடாதிருங்கள்” ஆனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்ல முயற்சிக்கிறேன் என்றால்; தேவனுடைய ராஜ்யத்திற்குள்ளாக பிரயாசப்பட்டு பிரவேசியுங்கள். -303. பெந்தெகொஸ்தேகாரர்களே, நீங்கள் மிகவும் உலகமார்க்கமாகிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதிக கூடுதலாக உலகத்தை சார்ந்து போகிறீர்கள். இது சுலபமாகவே இருக்கிறது, நீங்கள் தொடர்ந்து டெலிவிஷனையும் மேலும் இந்த எல்லா காரியங்களையும் அவர்கள் எவ்விதமாக செய்கிறார்கள் என்றும் பார்த்துக் கொண்டிருங்கள், அப்போது நடக்கப் போகிற முதல் காரியம் என்ன தெரியுமா... போதகர்களுக்கான கலாசாலைகளும், பள்ளிக் கூடங்களும் இங்கேயும் அங்கேயும் இதிலும் அதிலும் மற்றதிலும் விட்டு கொடுக்க ஆரம்பிக்கிறார்கள், பிறகு உனக்கு தெரிய வருகிற முதல் காரியம் என்னவென்றால்... இது அந்த விதமாகத்தான் வந்து ஆக வேண்டும், பெந்தெகொஸ்தே சபை, இது எனக்கு மிகவும் பெரிய ஆதரவாக இருந்து வந்திருக்கிறது. அதற்கு எதிராக எதையும் சொல்ல என்னால் கூடாது. ஆனால், நான் சப்தமாய் கூச்சலிடுவது அதுதான், “என் சகோதரர்களே, வெளியேறிவிடுங்கள்!” பவுல்... நீங்கள் ஒரு காலத்தில் பெற்றிருந்த ஜெபக் கூட்டங்கள் இப்போது உங்களுக்கு இல்லை! மக்களும் ஒரு காலத்தில் இருந்ததைப் போல இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்து மாறாமலிருக்கிறார், அவருக்குள்ளே நகர்ந்து செல்வோம். 109இப்போது, கைகளை உயர்த்தியிருக்கும்படியான நீங்கள். மறக்காதீர்கள், அங்கே வனாந்திரத்திலே ஒரு கன்மலையானது அடிக்கப்பட்டது, அந்த நீரூற்றானது இந்த இரவிலே இன்னும் கூட திறந்திருக்கிறது. அந்த கன்மலையானது அடிக்கப்பட்டாயிற்று, கிறிஸ்து. அவரே அந்த அடிக்கப்பட்ட கன்மலை. மேலும் இன்றைக்கு இரவு, எனக்கு தெரிந்திருக்கிற வரையில், சபையானது ஒரு வேளை... அழைப்பின் காலமானது ஏற்கனவே கடந்து விட்டிருக்கலாம், எனக்கு காலமானது ஏற்கனவே கடந்து விட்டிருக்கலாம், எனக்கு தெரியாது. என்னால் அதை சொல்ல முடியாது. மறந்து விடாதீர்கள், இயேசுவானவரை சிலுவையில் அறைந்த பின்பும் மக்கள் தொடர்ந்து ஜெபக் கூட்டங்களை நடத்தினார்கள், மாற்றமேயில்லாமல். மேலும், இந்த மக்கள் எல்லாரும், அவர்கள் - அவர்கள். வருவார்கள். அவர்கள்... பார்ப்பார்கள்! அவர்கள் - அவர்கள் “நாங்கள் இரட்சிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறோம்” என்று சொல்லி, தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டே போவார்கள், இந்த உலகமானது, அவர்கள் சொல்வதைப் போல “இருக்கிற விதமாகவே இருப்பதைப் போல”. ஆனால் அப்போதோ மீள முடியாத அளவுக்கு காலம் கடந்து விட்டிருக்கும். 110உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கும் பொழுதே, என் சகோதரனே, உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கும்பொழுதே என் சகோதரியே, தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள்ளே வந்துவிடு. நீவேறு எதற்கும் கீழ்பட்டு வரவேண்டிய அவசியமில்லை, ஆனால் அவருடைய வார்த்தையை விசுவாசிக்கும்படியான வெறும் விசுவாசத்துடன் வரலாம். அவரே அந்த வார்த்தையாயிருக்கிறார். “கர்த்தராகிய இயேசுவே, தேவனுடைய வார்த்தையாகிய நிலைக் கண்ணாடியிலே நான் என்னையே நோக்கி இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் அறிவேன். ஓ! நான் எவ்வளவு குறைவுள்ளவனாயிருக்கிறேன். ஆனால், அன்புள்ள தேவனே, இங்கே இன்றைக்கு இரவிலே, இந்த திங்கட்கிழமை இராத்திரியிலே, இங்கே சான் பர்னாடினோ, கலிபோர்னியாவிலே இந்த மண்டபத்திலே இங்கே, இது - எனக்குள்ளது எல்லாம் இதுதான், கர்த்தாவே, ஆனால் இதை நான் உமக்கு தருவேன். நான் இருக்கிற விதமாகவே என்னை நீர் ஏற்றுக் கொள்வீரா, கர்த்தாவோ சிலுவையினிடத்தில் புகலிடம் தேடி நான் மிகவும் வேகமாகச் செல்ல நீர் இடங்கொடுப்பீரா? செய்தியாளர்களையும் கூட நான் பார்க்கிறேன். நான் சோதோமை விட்டு வெளியே அழைப்பதை பார்க்கிறேன். நான் அடையாளங்களை காண்கிறேன். ஆபிரகாமின் கூட்டத்தார் வெளிச்சத்தைப் பெற்றுக் கொள்வதை காண்கிறேன். நான் வெளியரங்கமாக்கப்படுதலை காண்கிறேன், முன்பு இருந்தைப் போலவே இயேசுவானவர் எங்கள் மத்தியிலேயே வெளியரங்கமாக்கப்படுவதை! நீர் வாக்குத்தத்தம் பண்ணிய சகல காரியங்களையும் நான் காண்கிறேன். மற்றவர்களைப் போல நடிப்பவர்களை நான் பார்க்கிறேன்; நீர் அதை சொன்னீர் என்று நான் காண்கிறேன்.. ”மோசேயின் நாளிலே இருந்ததைப்போலவே', இந்த யம்பிரேயும் யன்னேயும், எவ்விதமாக இவர்கள் இன்னும் தாங்கள் இருக்கும்படியான குப்பைக் குழியிலேயே இருந்து கொண்டு, ஏமாற்றி நடிப்பதற்காக திரும்பி வருவார்கள் என்பதாக“. 111பார்த்தீர்களா, அந்த வார்த்தையின் மூலமாக மோசேயை பின்பற்றி அந்த பிள்ளைகளை அங்கிருந்து வெளியே வனாந்திரத்திற்குள்ளே கொண்டு போக அவர்களால் கூடவில்லை, எனென்றால் அவர்கள் எகிப்திலே ஒத்துப் போகிறவர்களாயிருந்தார்கள். அவன் செய்த அதே கிரியைகளை அவர்கள் செய்த போதிலும், அவர்களால் அதை சாதிக்க முடியவில்லை. ஆனால் குற்றமானது வெளியரங்கமாயிற்று. மேலும் வேதாகமானது, அது கர்த்தர் இவ்விதமாக உரைக்கிறார் என்பதாக இருக்கிறது என்று கூறுகிறது. “இது மறுபடியும் கடைசி நாளிலே சம்பவிக்கும்”. நீங்கள் ஆவிக்குரியவர்களாயிருந்தால், இதை உங்களுடைய சொந்த கண்களினால் காண்கிறீர்கள். நான்... இதை விளக்க என்னால் முடியாது. இதை நான் விளக்கி சொல்வது அவசிய மில்லை.' என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவி கொடுக்கும் . நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளபோதே நாம் அவரிடம் செல்லுவோம். நீ வருவாயா? 112பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பெறுவது உனக்குத் தேவையாயிருந்தாலும், மறுபடியுமாக பிரதிஷ்டை செய்துக்கொள்வது உனக்கு தேவையாயிருந்தாலும், ஒரு புதிய ஜீவியம்; உன் மேய்ப்பன் உன்னை இகழமாட்டார். அதற்காக அவர் உன்னை நேசிப்பார். இன்றைக்கு இரவிலே நாம் இங்கே இருக்கையிலே உன்னை அப்படியே முழுமையாக தேவனுக்கு கொடுத்துவிடு. ஆம், இது மிகவும் கடுமையாக, வெட்டுகிறதாக, புதுமையாக இருந்தது என்று நான் அறிவேன். நான் சிநேகமில்லாமலிருக்க அவ்விதமாக பேசவில்லை, நான் உண்மையுள்ளவனாயிருக்கவே அவ்விதமாக பேசினேன். நான் அதை செய்கிறேன். ஏனென்றால் நான் உங்களை நேசிக்கிறேன். நான் தேவனை நேசிக்கிறேன், உங்களுக்கு உதவி செய்ய பிரயாசப்பட்டு நான் இதை செய்கிறேன். மெய்யாகவே, நண்பனே, நான் - நான் - விசுவாசிக்கிறேன். என்னுடைய செய்தியானது, தேவனிடத்திலிருந்து வருகிறது என்பதாக. என் முழு இருதயத்தோடும், என் முழு விசுவாசத்தோடும் நான் நம்புகிறேன். இது - இது இந்த வருடங்களில் எல்லாம் அதை உனக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இப்பொழுது கவனி, உனக்கு உள்ள எல்லாவற்றையும், உன்னுடைய தேவை எல்லாம் ஒப்புகொடுத்துவிடு. நான் விசுவாசிக்கிறேன். ஒரு உண்மையான சரணமடைந்த இருதயத்துடனே, நீ எழுந்து உன் கால்களில் நின்று, உன் கரத்தை தேவனிடமாக உயர்த்தி, “அன்புள்ள தேவனே, இதோ நான் இருக்கிறேன், என்னை ஏற்றுக் கொள்ளும், கர்த்தாவே, நான் என் சொந்தமனதையும், என் சொந்த வியாக்கியானத்தையும் இனிமேல் உபயோகிக்க மாட்டேன். நான் பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்றும், நான் மறுபடியும் பிறந்தாக வேண்டும் என்றும், நான் ஆவியினால் நிரப்பப்பட வேண்டும் என்றும், அப்போது. ஆவியானவர் எல்லா சத்தியத்திற்குள்ளும் என்னை நடத்துவார் என்றும் உம்முடைய வார்த்தை சொல்லுகிறது. அன்புள்ள தேவனே, இதோ நான் இருக்கிறேன், என்னை நடத்தும்” என்று நீ சொல்வாயானால்! அந்த அளவுக்கு நீ செய்வாயா? நீ அந்த அளவுக்கு செய்வாயானால், உன் கரத்தை உயர்த்தி, “நான் இஷ்ட முள்ளவனாயிருக்கிறேன், அதை செய்ய நான் இஷ்டமுள்ளவனா யிருக்கிறேன்” என்று சொல். 113அப்படியானால், நாம் எழுந்து நிற்போம். இப்பொழுது ஆர்கன் வாசிப்பவர் தொடர்ந்து வாசிக்கையில், நாம் ஒவ்வொருவரும்... இளம் வாலிபர்களாகிய நீங்கள், இந்த போக்கிரிகள் கூட்டத்தைப் போல, அங்கே வெளியில் தெருவிலே நீங்களும் அவ்விதமாக ஆகிவிட விரும்புகிறீர்களா? சகோதரியே, நீளமான தலை முடியை கொண்டிருப்பது தேவனிடமாய் உனக்குள்ள நசரேய கவுரவமாயிருக்கையில், நீ குட்டையான தலைமுடியை வைத்துக்கொள்ள விரும்புகிறாயா? “தன் தலைமயிரை வெட்டிக்கொள்வது அவளுக்கு அவமானமாயிருக்கும்”. அங்கே வெளியில் தெருவிலே உன் சரீரமானது வெளியிலே தெரியும்படியான இந்த ஒழுக்கமில்லாத ஆடையை, இந்த சிறிய பழைய பாவாடைகளையும், இந்த நாளிலே அவர்கள் உடுத்தும் காரியங்களையும் நீ அணிந்துக் கொள்வாயா? உன்னை நோக்கிப் பார்க்கும்படியான ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய இருதயத்திலே உன்னுடன் வேசித்தனம் செய்கிறான் என்று உனக்கு தெரியுமா? நீயும் உன்னை அவ்விதமாக காண்பித்துக் கொள்கிறாய். அழகு சாதனங்களை உபயோகிக்கிற ஸ்திரீகளே, வேதாகமத்திலே, ஒரே ஒரு ஸ்திரீ மாத்திரம் அழகு சாதனங்கள் உபயோகித்தாள் என்றும், அவளை தேவனானவர் நாய்களுக்கு தீனியாக போட்டார் என்றும் உங்களுக்கு தெரியுமா? ஒரு யேசபேல், அவளுடைய நாள் துவங்கி வெறுக்கப்பட்டதான ஒரு பெயர், ஏனென்றால் அதைப் பற்றியதான அவளுடைய கிரியைகளினிமித்தம் அவளை அந்த விதமாக சொல்லி அழைத்து அதை சபித்தது தீர்க்கதரிசியான எலியா என்று நீங்கள் அறிவீர்களா? யோவான் ஸ்நானன் குற்றப்படுத்தியது ஏரோதியாளை என்று உங்களுக்கு தெரியுமா? உலகத்தை சார்ந்த அந்த “ஹாலிவுட்' காரியமாக இருப்பதை நீங்கள் விரும்புவதில்லை. ”நீங்கள் உலகத்தின் காரியங்களில் அன்புகூர்ந்தால், தேவனுடைய அன்பு உங்களில் இல்லை“. சகோதரனே, ஊழியக்கார நண்பனே, தயவு செய்து என்னை புரிந்து கொள். நான் உங்களுடைய சகோதரனாயிருக்கிறேன். உன்னையும் உன் சபையின் அங்கத்தினர்களையும் ஏதோ ஒரு சபையுடன் பழக விடுகிறதை நீ விரும்புகிறாயா? (மெதோடிஸ்டோ, பாப்டிஸ்டோ அல்லது வேறு எதுவாக நீ இருந்தாயோ) உன்னுடைய தாயாரும், உன்னுடைய பாட்டியும் அந்த ஸ்தாபனத்திற்குள்ளாக, பற்றிக் கொண்டிருந்ததினாலே நீயும் அந்த ஸ்தாபனத்தில் இருக்க விரும்புகிறாயா? அவள் அதற்குள்ளாக பிரவேசிக்க வேறு எதிலிருந்து வெளியே வந்தாள், அது அந்த நாளுக்குரிய வெளிச்சமாக இருந்தது. அது, நோவாவின் காலத்தில் இருந்ததைப் போல. ... இது வேறொரு நாளாயிருக்கிறது. “நல்லது, எனக்கு இருந்தது...' என்று நீ சொல்லலாம். இது பெந்தெகொஸ்தே நாள் அல்ல. பெந்தெகொஸ்தே காலமானது கடந்து போய்விட்டது. பெந்தெகொஸ்தேயானது போய்விட்டது. இது அறுவடையின் காலம் ஆகும். புரிகிறதா? அறுப்பின் காலம்; தானியம். தண்ணீரானது ஊற்றப்பட்டாயிற்று, தானியமானது பழுத்துக் கொண்டிருக்கிறது. தானியத்துக்குள்ளாக வந்துவிடு, என் சகோதரனே. எனக்கு செவிகொடுங்கள், என்னை விசுவாசியுங்கள். நான் தேவனுடைய ஊழியக்காரனாயிருப்பதாக நீங்கள் விசுவாசித்தால், ஒவ்வொருவரும், நம்முடைய சொந்த விதத்திலே, மனத்தாழ்மையுடன் நம்முடைய தலைகளை வணங்கி. நாம் செலுத்தியாக வேண்டும் என்று நாம் அறிந்திருக்கிற ஜெபத்தை நாம் செலுத்துவோம். “தேவனே, நான் இருக்கிற விதமாகவே என்னை ஏற்றுக்கொள்ளும்”, 114மேலும், சகோதரனே, சகோதரியே, இன்றைய இரவு நானும் என்னை பலிபீடத்தின் மீது கிடத்துகிறேன். தேவனே, என்னை உருவமைத்து வித்தியாசமாக செய்வீராக. எதையாகிலும் செய்யும் தேவனே, என்னை உம்முடைய பாணியில் உருவாக்குமேன்! இங்கே நின்று கொண்டு மக்களை துண்டுதுண்டாக வெட்டுவது சுலபமாயிருப்பதாக நீ நினைக்கிறாயா? இது செய்வதற்கு ஒரு கடுமையான காரியம் ஆகும். ஆனால், நான் இதை செய்யாவிட்டால் எனக்கு ஐயோ! 115அன்புள்ள தேவனே, இந்த சபை மக்கள் தங்களுடைய தலைகளையும் இருதயங்களையும் வணங்குகிற போது, இந்த வேதாகம் பிரசங்கத்தை முடிக்கும்படியான பக்தியான வினாடிகளிலே, தேசங்களை முன்னும் பின்னுமாக அசைத்த பரிசுத்த ஆவியின் நிரூபிக்கப்படுதலையும் மேன்மையான எழுப்புதல்களையும், ஒரு குறிப்படையாளமாக பார்க்கும்போது, அதை ஏதோ ஒன்று பின்தொடர வேண்டும் என்று அறிகிறோம். மேலும் அப்போது அங்கே வெளியே அரிசோனாவிலே அந்த ஏழு தூதர்கள் அந்த மலையின் உச்சிக்கு கீழிறங்கி வந்ததை காண்கிறோம், தேசம் முழுவதிலும் பத்திரிகைகளும் கூட இதை பிரசுரித்தன. இயேசுவானவர்தாமே அங்கே வானங்களிலிருந்து கீழ்நோக்கி பார்த்துக் கொண்டு, “வெளிப்படுத்தின விசேஷம் 10:7ல் ஏழாம் தூதனுடைய செய்தியிலே, இந்த முத்திரைகள் திறக்கப்படும், தேவனுடைய இரகசியங்கள் அறியப்படும்” என்று சொல்வதைக் காண்கிறோம். அதாவது, அந்த சீர்த்திருத்தவாதிகள், இதை வெளியே கொண்டு வர போதுமான காலம் உயிர்வாழவில்லை. மேலும் அனைத்து காரியத்தையும் முத்திரையிட்டுப் போட்ட இந்த ஏழு முத்திரைகளும் இங்கே, இந்த நாளிலே திறக்கப்படுவதாக உள்ளது. செய்யப்பட்டதான இந்த அடையாளங்களையும், அற்புதங்களையும் பார்க்கும்போது, இது சம்பவிப்பதற்கு முன்னே நிரூபிக்கப்பட்டு முன்னறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு தடவை கூட நீர் எங்களை ஏமாற்றவில்லை, ஆனால் இது சொல்லப்பட்ட அதே விதமாக இதை நடப்பித்தீர்.அன்புள்ள தேவனே, இயேசு கிறிஸ்து எங்கள் மத்தியில் இருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்துணருகிறோம். அவர் இங்கே இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். இன்றைக்கு இரவிலே அவர் இங்கே இருக்கிறார். அதரிசனமான தேவன் இங்கே எங்களுடன் இருக்கிறார், அவர் தம்முடைய வார்த்தையிலே பண்ணின ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் உறுதிப்படுத்த கூடியவராகவும் இருக்கிறார். கர்த்தாவே, மற்றவர்களைப் போல நடிப்பவர்கள் இந்த போட்டி மேடைக்குள் பிரவேசிப்பதற்கும் முன்னதாக, அந்த மெய்யான துவக்கத்திலே முதுகுகள் திரும்பியிருக்கையில், எப்படியாக நீர் நின்று அவர்களுக்கு நிரூபித்துக் காண்பித்தீர். நீர், இது எவ்விதமாக சம்பவிக்கும் என்பதை மிகச்சரியாக காண்பித்தீர், நிரூபித்தீர், தீர்க்கதரிசனம் உரைத்தீர், மேலும் சொன்னீர், நாங்களும் இது அதே விதமாக சம்பவிப்பதை காண்கிறோம். பிதாவே, தேவனே, இது மனிதனாக இருக்க முடியாது என்று நாங்கள் அறிவோம்,. இது தேவனாக இருந்து ஆகவேண்டும். ஆகவே, இன்றைக்கு இரவு இங்கேயிருப்பது நீர்தான் என்று நாங்கள் அறிவோம். எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். 116அன்புள்ள தேவனே, நீர் எங்களுடைய வியாதிகளை சுகப்படுத்தினீர், இப்போது எங்கள் பாவங்களை மன்னியும். கர்த்தாவே, நாங்கள் இருக்க வேண்டிய விதமான கிறிஸ்தவர்களாக நாங்கள் இல்லாததற்காக... ஒரு முழு சுவிசேஷ மனிதனாகவும் மனுஷியாகவும் எங்களை அறிக்கையிட்டும், இங்கேயோ ஒரு ஸ்தாபனத்திற்குரிய கோழிக்குஞ்சைப் போல முடங்கிகிடப்பவர்களாக எங்களையே காண்கிறோம். எங்களுக்கு உதவி செய்வீராக, அன்புள்ள தேவனே, எங்களை எடுத்து உம்முடைய பரிசுத்த ஆவியினாலே உலுக்குவீராக. உம்மைப் போல இல்லாததான ஏதாகிலும் எங்களுக்குள் இருந்தால், இதை எங்களை விட்டு வெளியே எடுத்துப் போடும், கர்த்தாவே. எங்களுடைய பாதங்களை தேவனுடைய பரிசுத்தமான வார்த்தையின் மீது நிறுத்துவீராக. மேலும், பரிசுத்த ஆவியானது எங்களுடைய இருதயங்களின் ஆழத்துக்குள்ளே பற்றி யெரிந்து, அவிசுவாசம் மற்றும் இந்த நாளிற்குரிய கண்சொருகிப்போகுதலுமாயுள்ள சாம்பலையும் மண்ணையும் எடுத்துப் போடுவீராக. ஓ! எழும்பி எங்களை உலுக்கும், அனுக்கிரகம் செய்யும் தேவனே! எங்களை சுத்தப்படுத்தும்! எங்களை உருவாக்கும்! எங்களை சிருஷ்டியும்! தேவனே, இதை அனுக்கிரகம் செய்வீராக. 117தங்களுடைய இருதயங்களிலே அந்த தானியத்தை, உலகமானது அஸ்திபாரமிடப்பட்டது முதற்கொண்டே ஜீவனுக்கென நியமிக்கப்பட்டதான தேவனுடைய வம்ச வித்தினை தங்களுக்குள் கொண்டுள்ள யாராவது, கர்த்தாவே, இங்கே இன்றைக்கு இரவில் இருப்பார்களானால்; கர்த்தாவே, அவர்கள் இந்த மணி நேரத்தில் செவிகொடுக்காமல் போக முடியாது என்று நான் அறிவேன். ஆகவே தேவனே, நீர் அவர்களுடைய ஆத்துமாவை நிரப்புவீர் என்றும், ஒரு புதியதாகவுள்ள பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தால் அவர்களை வெளிச்சமாக்குவீர் என்றும் நான் ஜெபிக்கிறேன். மேலும் சந்தோஷத்தோடும் களிகூருகிறவர்களாயும் அவர்களை அவர்களுடைய பாதையிலே அனுப்புவீராக. 118கர்த்தராகிய தேவனே, அவர்கள். அவர்களை நான் உமக்கு கொடுக்கிறேன். அவர்கள் யார் என்று நான் அறியேன். நீர் அறிவீர். உம்முடைய வார்த்தையை , நீர் அதை வெளிப்படுத்துகையில், பிரசங்கிப்பது மாத்திரம் என்னுடைய பொறுப்பாய் இருக்கிறது. கர்த்தாவே, இதின் மீதியானவைகளுக்கு நீர் பொறுப்பாளியாய் இருக்கிறீர்; வித்தானது எவ்விடத்தில் விழுகிறதோ தேவனாகிய கர்த்தாவே, நான் அதை விதைக்க மாத்திரம் செய்கிறேன். இது நல்ல செழிப்பான மண்ணிலே விழுந்ததாக இருக்க வேண்டுமாய் நான் ஜெபிக்கிறேன். நாங்கள் எதிர்நோக்கியிருக்கும்படியான அந்த மேன்மையான காரியமானது விரைவில் வரும்படியாக அநேகர் இதை கண்டு கொண்டு, கர்த்தாவே, இந்த கடைசி நாளிலே, பிரகாசிக்கிற கிறிஸ்தவர்களாய் எழும்புவார்கள் என்பதாகவும் ஜெபிக்கிறேன். இதை அனுக்கிரகியும், கர்த்தாவே. மேலும் நீர். உம்முடைய சபையை, உம்முடைய மணவாட்டியை எடுத்து அவளை வீட்டிற்கு கொண்டு போவீர். இது அனைத்தும் ஒழுங்காக அமைவதை நாங்கள் காண்கிறோம். வாரும், கர்த்தராகிய இயேசுவே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதையெல்லாம் நாங்கள் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். நல்ல பிரதிபலன்களுக்காக. ஆமென் நேசிக்கிறேன், அவரை நான் முதல் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில்... 119நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நல்லது. அப்படியானால், நீங்கள் ஒருவரையொருவர் நேசித்து ஆக வேண்டும். நீங்கள் இதை மறுபடியும் பாடும்போது, ஒருவருக்கொருவர் கைகளை குலுக்கிக் கொள்ளுங்கள். நேசிக்கிறேன், அவரை நான் முதல் என்னை நேசித்ததால் . சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில்... இப்பொழுது, அவருக்கு துதியை செலுத்துவோம், எத்தனை பேருக்கு இந்த பாட்டு தெரியும்? நான் அவரை துதிப்பேன், நான் அவரை துதிப்பேன், பாவிகளுக்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியை துதிப்பேன், ஜனங்களே நீங்கள் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவியது. இதை இப்போது பாடுவோம். நான் அவரை துதிப்பேன், நான் அவரை துதிப்பேன், பாவிகளுக்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியை துதிப்பேன், ஜனங்களே நீங்கள் அவருக்கு மகிமையை செலுத்துங்கள், அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவியது. எல்லாம் சுத்திகரிக்கப்பட்ட விதமாக உணர்வு உண்டாகவில்லை உனக்கு? உன் கரத்தை உயர்த்து, நீ சொல்வாய், “ஓ, அது என்னை சந்தோஷப்படுத்துகிறது”. சகோதரனே. நான் அந்த பழைய காலத்து பாடல்களை நேசிக்கிறேன், நீயும்தானே? வேல...ள் கீழே இருதயத்துக்கு போகின்றன. நான் அவரை துதிப்பேன், நான் அவரை துதிப்பேன் பாவிகளுக்காக கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியை. துதிப்பேன் ஜனங்களே நீங்கள் அவருக்கு மகிமையை செலுத்துங்கள் அவருடைய இரத்தம் ஒவ்வொரு கறையையும் கழுவியது. 120நம்முடைய கரங்களை உயர்த்தி, இப்போது, தேவனை துதிப்போம், நம்மில் ஒவ்வொருவரும் நம்முடைய சொந்த பாணியிலே. கர்த்தராகிய இயேசுவே, உம்மை ஸ்தோத்தரிக்கிறோம், உம்மை துதிக்கிறோம், கர்த்தாவே! பாபிலோனுக்கு வெளியிலே, ஒரு வெளியே அழைக்கப்பட்ட மக்களுக்காக நாங்கள் உமக்கு துதிகளை செலுத்துகிறோம். உம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்மை நாங்கள் ஸ்தோத்தரிக்கின்றோம், ஏனென்றால், இந்த நிமிஷமே அவர் எங்களை சுத்தமாக்குகிறார். எங்கள் தவறுகளுக்காகவும், எங்களுடைய புத்தியீனத்திற்காகவும், இருட்டிலே எங்களுடைய தடுமாற்றங்களுக்காவும் நாங்கள் மன்னிப்பை வேண்டுகிறோம். ஓ! தேவனே, நாங்கள் எழுந்து பிரகாசித்து, சாயங்கால வெளிச்சத்தில் நடப்போமாக. இதை அனுக்கிரகம் செய்யும், அன்பான தேவனே. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் எங்களை உமக்கு ஒப்பு கொடுக்கிறோம். இப்போது, உங்களுடைய தலைகள் வணங்கியிருக்க, ஆராதனையை ஆதரிக்கிற மேய்ப்பர்களை உங்களுக்கு தருகிறேன்.